அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நள்ளிரவில் வனத்தில் நடை - பாம்பின் சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தலைநகர் தில்லியில் ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு. அந்த நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் இந்தத் தொடரின் முதல் பகுதியில் பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம். முதல் பகுதியை இது வரை பார்த்திருக்கவில்லை என்றால் இங்கே சென்று பார்க்கலாம்.
கேரளத்தின் கதக்களியை காட்சியாகத் தரும் பொம்மைகள், கர்நாடகத்தின் கின்னல் எனும் கிராமத்தின் பாரம்பரிய மர பொம்மைகள், சில மாநிலங்களில் பிரபலமான பொம்மலாட்டத்தில் பயன்படும் பொம்மைகள், ஒடிசா மாநிலத்தில் மாட்டுச் சாணி மற்றும் களி மண் கொண்டு செய்யப்படும் பொம்மைகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பேப்பர் மெஷ் பொம்மைகள் என விதம் விதமான பொம்மைகளையும் அவை குறித்த தகவல்களையும் இந்த நிகழ்வில் பார்க்க முடிந்தது. பல மாநிலங்களில் நடக்கும் நாட்டிய, நாடகம் போன்றவற்றில் பயன்படுத்தும் முகக் கவசங்கள், சத்தீஸ்கட் மாநிலத்தின் சர்கூஜா பகுதியில் பிரபலமான களிமண் வீடுகள்/தானியக் குடுவைகள் என பல விஷயங்களை இங்கே நாம் பார்த்து ரசிக்க முடியும். ஒடிசாவில் தயாரிக்கப்பட்ட யசோதா, பல்ராம் மற்றும் கிருஷ்ணருடன் இருக்கும் பொம்மை மிகவும் கவர்ந்தது.
நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்த மேலும் சில படங்கள் இன்றைக்கு இரண்டாம் பதிவாக உங்கள் பார்வைக்கு.
இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
21 ஃபிப்ரவரி 2025
பொம்மைகள் மிக அழகு.
பதிலளிநீக்குசென்ற பதிவிலேயே நீங்கள் சிலவற்றை வாங்கியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் என்ன வாங்கி இருப்பீர்கள் என்று நான் சில யூகங்கள் சொல்லி இருந்தேன். என்ன வாங்கினீர்கள் என்று நீங்கள் சொல்லவில்லை!
நீங்கள் கேட்டது இந்தத் தொடரின் முதல் பகுதியில் அல்ல. பஞ்சாரா மார்க்கெட் குறித்து எழுதிய பதிவில்... அதற்கான பதிலும் அப்பதிவில் கொடுத்திருக்கிறேன் ஸ்ரீராம்.
நீக்குபொம்மைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பொம்மைகள் எல்லாம் செம அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அழகு. வித்தியாசமான கிச்சு பாப்பா யசோதா?
பதிலளிநீக்குநாட்டிய மங்கை பொம்மையும் செம. அனைத்தும் ரசித்துப் பார்த்தேன் ஜி.
கீதா
அழகு...
பதிலளிநீக்குபகிர்ந்த எல்லா மாநில பொம்மைகளும் அழகு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது, அருமை.
பதிலளிநீக்கு