ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பத்தொன்பது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு  



அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை....


ஆமா நான் நெனச்ச இடத்துலயும் நீ இல்ல எங்கெல்லாம் உன்ன தேடறது கிருஷ்ணா!


*******



கிருஷ்ணா இரு எங்க ஓடற? 


பக்கத்து வீட்டு மாமி பொங்கல் வெக்க பானை கேட்டாம்மா. அதான்.


அப்ப வெண்ணெய்?


அதை நான் பாத்துக்கறேம்மா. கவலப் படாத.


கவலையே அதான்.


*******



கிருஷ்ணா ஹெல்புக்கு அங்க பயில்வான் மாதிரி நிக்கற உன் friend ஐ கூப்பிட்டுக்கவா?


எனக்கும் உதவ உன் friend என் பின்னாலயே நிக்கறா.கூப்பிடட்டுமா ராதா?


இந்த வம்பே வேணாம். விடு.


*******



பசு செல்லம் நேத்து மாட்டுப் பொங்கலுக்கு உனக்கு பூஜை பண்ணி பொங்கல்,பழம்,கரும்புத் தோகையெல்லாம் நிறைய பேர் போட்டாச்சு.அதனால் இன்னிக்கு கொஞ்சம் டயட் ல இரு. இந்த வெண்ணெயை நாளைக்குத் தரேன்.ok?


இன்னிக்கே கொஞ்சம் டேஸ்ட் பண்ணிடறேன் கிருஷ்ணா,நாளைக்கு வரைக்கும் அது இருக்கறது சந்தேகம்.Ok?


*******



மூஞ்சூரண்ணா குதிக்காதீங்க boat கவுந்துடப் போகுது!


என்னால கவுறாது கணேசா நான் weight அ maintain பண்றேன்.


*******



கிருஷ்ணா அங்க bright ஆ தெரியுதே அதுதான் துருவ நட்சத்திரமா?


இல்ல ராதா அடுத்த தெரு ஆன்டனி கிறிஸ்துமஸ் க்கு பால்கனில தொங்க விட்ட ஸ்டார் லைட்.


*******



மயில் மாதிரி டிரஸ் போட்டிருக்கேங்கற துக்காக அதுக மாதிரி தோகைய விரிச்சு ஆடல்லாம் முடியாது கிருஷ்ணா. படுத்தாத.


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

9 ஃபிப்ரவரி 2025


2 கருத்துகள்:

  1. ஆமாம், இப்படி வெண்ணெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் ஏறாதோ...!!

    வரிகளையும், படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பல வரிகள் சிரித்து விட்டேன்...படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....