திங்கள், 26 ஆகஸ்ட், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஆறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்பட உலா - National Gallery of Modern Art, புது தில்லி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும் 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நான்கு


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐந்து


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.



இந்தியன் 2 பாக்கப் போகாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா சிவா?


நீங்க வேற நான் எங்க படம் பாக்கப் போனேன்! canteen-ல பப்ஸ் நல்லா இருக்குமேன்னுதான் கிருஷ்ணா! ஆனா கதவ திறக்க மாட்டேனுட்டாங்க தப்பிச்சுப் போயிடுவோம்னு😢😒


*******



அப்பாடா ஒரு வழியா உன் புடவைக்கு match ஆ பூ கொண்டுவந்துட்டேன் தேவி.


ரொம்ப சிரமப் பட்டுட்டீங்க.அதுமாதிரி  என்கிட்ட ஏற்கெனவே இருக்கு.அதுக்கு பதிலா அந்த colour கல்லு வெச்சு ஒரு necklace வாங்கியிருக்கலாம் நாதா.


*******



Hmmm இதுல போயி என்னிக்கி வீடு சேர்ந்து எப்போ சமைச்சு சாப்பிடப் போறோமோ! பேசாம swiggy ல சொல்லிடு கிருஷ்ணா.


சரி ராதா, இன்னிக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்.


உன்ன..........


*******



இதுக்குள்ள மோதகம்தான் இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா திறக்க முடியலை.


பசிக்குது. காலைல சரியா சாப்பிடல. தும்பிக்கையால நம்பிக்கையோடு திறந்து பாக்கலாம்.


*******



தோட்டக்காரனுக்குத் தெரியாம ரோஜாவை இலையோடு பறிச்சுட்டு ஓடி வந்து பார்த்தா பூவக் காணோம். இத ராதாக்கு எப்படி கொண்டு போறது?


*******



இது இருபத்தி ரெண்டாவது பலூன். இதையும் கொத்தி உடைச்சிடாத மயிலண்ணா.


*******



அம்மா எதிர் வீட்டு மாமி வரா. 

என்னைப் பத்தி அவ சொல்றதை எல்லாம் நம்பிடாத.


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 ஆகஸ்ட் 2024


26 கருத்துகள்:

  1. வாசகம் அருமை. படங்களும் அதற்கு அழகான வரிகளும் அருமை.

    "இப்படியே படகில் உன்னுடன் பயணித்து கொண்டு, உன் வேங்குழல் கீதம் கேட்டுக் கொண்டே வந்தால் போதும் கண்ணா வேறு ஒன்றும் வேண்டாம். "

    அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வசனங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. பலூனையும் இலைகளையும் வைத்துக்கொண்டிருக்கும் கண்ணன் அத்தனை அழகாய் இருக்கிறார்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  5. இன்றைய வாசகம் மிக அருமை.

    என் மகனை நினைவூட்டுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  6. படங்களும் அதற்கான வரிகளும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. படங்களுக்கான வரிகள் செம. அதிலும் அந்த சாரிக்கேத்த பூ, பார்வதி சொல்வது ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரிக்கேத்த பூ - வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. முதல் படம் - கிருஷ்ணா பாத்தியா நம்ம ரெண்டு பேரையும் வைச்சு மனுஷங்க சீரியல் படம்னு அடிக்கற லூட்டிய!

    ஸர்வமும் கிருஷ்ணார்ப்பணம்னு வேற சொல்லிக்குவாங்க! சொல்லட்டும் சொல்லட்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்திற்கான உங்கள் வரிகளும் நன்று கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. நன்றிகள் பல ரசித்த உள்ளங்களுக்கு.

    விஜி

    பதிலளிநீக்கு
  10. வரிகளை ரசித்தேன்.

    படம் ஒன்று ..  :யோவ் கிருஷ்ணா...  என் பேர் ராமனோட வேணா சேரும்...  ஆனா உன்னோட சேராது கவனிச்சியா?  சிவராமன்னு வரும்..  சிவகிருஷ்ணன்னு வராது!

    அந்த ராமனே ராமகிருஷ்ணன்னு பேர் வச்ச என்னோட ஆள்தான் சிவா...   ராம்சிவான்னு பேர் வச்சானா பார்த்தியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை ரசித்தமைக்கும் படத்திற்கான உங்கள் வரிகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. படம் இரண்டு.. "பூவை உனக்கு பூ தந்தேன்.. பதிலாய் தருகிறாய் நீ எனக்கு புன்னகைப்பூ..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... கவிதை! ரசித்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. 3 & 4

    "என்ன யோசனை ராதா..?"

    "என்ன பாட்டு பாடபோறீங்கன்னுதான்..  ராதா சமேதா கிருஷ்ணாதானே பாட;போறீங்க?"

    "இல்லை ராதே...   ;ருக்குமணியே...பப்பாரபரபர.."



    என்ன கணேஷு கவலையா கீறே"

    "ஒரு பீஸ் அஞ்சு ரூவா வித்த கொழுக்கட்டை எல்லாம் இருவத்தஞ்சு சொல்றான் பக்தா...  அதான் உண்டியல்ல எவ்ளோ துட்டு சேர்ந்திருக்குன்னு பார்க்கறேன்" 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களுக்கான உங்கள் வரிகளையும் ரசித்தேன் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகமும் நன்றாக உள்ளது.

    படங்களையும், அதற்கு தகுந்தாற்போல அமைத்திருக்கும் வாசகங்களையும் பார்த்துப் படித்து ரசித்தேன். பின்னூட்டகங்களில் அழகான படங்களுக்கு ஏற்றபடி நம் நண்பர்கள் அளித்திருக்கும் வாசகங்களும் சூப்பர்.
    சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....