ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கடந்த ஐந்து வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் தலைநகர் தில்லியின் ஒரு பகுதியான நோய்டா பகுதியில் நடந்த சரஸ் ஆஜீவிகா மேளாவில் எடுத்த சில நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்த பதிவுகளுக்கான சுட்டி கீழே…


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி ஒன்று 


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி இரண்டு


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி மூன்று


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி நான்கு


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி ஐந்து


மேலே தந்திருக்கும் பகுதிகளை இதுவரை வாசிக்கா/பார்க்காவிட்டால் பார்த்து விடுங்களேன்.   இந்த வாரம் இந்த மேளா குறித்த மேலும் சில விஷயங்கள் பற்றி பேசுவோம்.  சில நாட்களாக தொடர்ந்து நடந்த இந்த மேளாவில் நாங்கள் ஒரு நாள் சென்று அங்கே செலவழித்த நேரம் நான்கு ஐந்து மணி நேரம் - அதுவே எங்களுக்கு போதுமானதாக இல்லை. அதிகம் நடந்ததால் கொஞ்சம் சோர்வு அடைந்து விட்டோம். ஆங்காங்கே அமர்ந்து கொண்டும், மதிய உணவு சாப்பிட்டும் நேரம் கழிந்தது என்றாலும் கடைசி நேரத்தில் சில பொருட்களை குறித்து தெரிந்து கொள்ளவோ, அந்த கலைஞர்கள் உடன் அதிக நேரம் பேசவோ முடியவில்லை.  இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு என்றே இரண்டு நாட்களேனும் ஒதுக்கிவிட வேண்டும் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.  இந்த மாதிரி நிகழ்வுகளில் பங்கெடுத்து வருவது எங்களுக்கும் உபயோகமாக இருப்பதோடு, பார்த்த சில விஷயங்களையும், தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவதிலும் மகிழ்ச்சி. கடந்த ஆறு வாரங்களாக பகிர்ந்து கொண்ட படங்களும் தகவல்களும் உங்களில் ஒரு சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே.  வாருங்கள் இந்த வாரம் மேலும் சில நிழற்படங்களை பார்க்கலாம்!
























அடுத்த ஞாயிறில் வேறு ஒரு நிழற்பட உலாவுடன் சந்திக்கும் வரை…


******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

18 ஆகஸ்ட் 2024


18 கருத்துகள்:

  1. வண்ண மயமான படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் சூப்பர்.

    முதல் படம் பார்த்ததும் புன்சிரிப்பு!

    கைவினைப் பொருட்கள் எல்லாமே மிக மிக அழகு. படங்களும் ரசித்தேன், ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு பொம்மைகள் நடனம் ஆடுவது போன்று இருப்பதைப் பார்த்ததும் முதலில் பெரிய மணிகளோ என்று நினைத்துவிட்டேன் பின்னர் தெரிந்தது தலையில் கரகம் வைத்து ஆடுவது போன்ற பொம்மைகள். வெகு அழகு!

      காலையில் சொல்ல விட்டுப் போனது

      கீதா

      நீக்கு
    2. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. முதல் படம் - :) இப்படி சிலர் அலங்காரம் செய்து கொண்டு அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள். நல்ல விஷயம் - ஆனால் அவர்களுக்கு எத்தனை தொல்லை என்று நினைப்பதுண்டு. கைவினைப்பொருட்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. ஆமாம் பெரிய அளவிலான பொம்மைகள் - நடனம் ஆடுவது போன்ற வடிவில். நுழைவாயிலிலேயே இருக்கிறது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது ஜி.

    விநாயகர் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. விநாயகர் என் மனதையும் கவர்ந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. கைவினைப் பொருட்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் கைவினைப் பொருட்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. வண்ண மயமான கலைப் பொருட்களின் அணிவகுப்பு. படங்களும் பகிர்வும் மிக நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலைப்பொருட்களின் அணிவகுப்பும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வண்ணமயமான கலை படைப்புகளும் படங்களும் அருமை.
    முதல் படம் பயத்தை உண்டு பண்ணாமல் உங்கள் சிரிப்பை வரவழைத்து விட்டார்.
    உயர மனிதர் கவர்ந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் - அவரும் விதம் விதமாக பயமுறுத்திப் பார்த்தார் - ஆனாலும் எனக்கு சிரிப்பு தான் வந்தது கோமதிம்மா. பதிவு குறித்த தங்களது கருத்துரை மகிழ்ச்சி தந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....