ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

நிழற்பட உலா - National Gallery of Modern Art, புது தில்லி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கடந்த செவ்வாய் அன்று தினம் தினம் தில்லி பதிவுகளில் ஒன்றாக எழுதிய தினம் தினம் தில்லி - National Gallery of Modern Art பதிவில் வரும் ஞாயிறு ஒன்றில் அங்கே எடுத்த நிழற்படங்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று சொன்னது நினைவில் இருக்கலாம்.  அருங்காட்சியகத்தின் உள்ளே படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்றாலும், வெளியே உள்ள சிற்பங்களை படம் எடுக்க தடை இல்லை என்பதால் ஒரு சில படங்களை நாங்களும் (நானும் இரண்டு அலுவலக நண்பர்களும்) எடுத்தோம். அப்படி எடுத்த படங்கள் இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு. படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்களேன்!






































******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

25 ஆகஸ்ட் 2024


14 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் வெகு அழகு, சுவாரஸ்யம்.  உங்கள் போஸும் சுவாரஸ்யம்.  

    நீங்கள் படம் எடுப்பதை முதலில் வெளியிட்டு அதன் கீழே அதன் ரிசல்ட்டை வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது!  முன்பின்னாக இருக்கிறது.  

    கிளியின் முகம் மட்டும்...  நிமிர்ந்து பார்க்கும் முகம்  எல்லாமே அழகு.  அதென்ன கழிவறை மாடல்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      கழிவறை மாடல் - தெரியவில்லை. விளக்கம் அங்கே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. படங்கள் அழகு. யோசிக்க வைக்கும். இருந்தாலும் மாடர்ன் ஆர்ட் என்னை மிகவும் கவர்வதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாடர்ன் ஆர்ட் - புரிந்து கொள்வது கடினம் என்பதால் எனக்கும் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. பொதுவாக ரசிப்பதோடு சரி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன ஜி.

    நீங்க படம் எடுக்கும் புகைப்படத்தில் தெரியும் அந்த மரம் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது! அழகு!

    பாத வடிவக் கல்லா அது? ஸ்வஸ்திக் போட்டிருக்கு அந்தக் கல் வடிவத்தில். (கிளிக்கு மேலே ஏழாவது படம். ஆனால் பெரிய ஓட்டை இருப்பதால் டக்கென்று பார்க்க நம் இந்தியக் கழிவறைக் கல் போன்று இருக்கிறது. ஆனால் அழகான வடிவம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      கழிவறை போல இருக்கிறது என்றாலும் வேறு எதையும் குறிப்பதாகவும் இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கிளிக்கு மேலே படம் அது மனித மூளை? நீங்க மனித மூளையை ஆராய்வது போல இருக்கிறது!!!!!!!! ஹாஹாஹாஹா

    மரத்தில் கலர் கலராகக் குடைகள் தோரணங்கள் வித்தியாசம்.

    அந்த மர வடிவம், ஸ்பீக்கர் போன்ற வடிவத்தில் செதுக்கப்பட்டவை குச்சி வடிவம் என்று எல்லாமே அழகாக இருக்கின்றன. இது ஒவ்வொன்றும் அதை வடித்தவர்களின் கற்பனையும் எண்ண ஒட்டங்களும் பார்ப்பவர்களுக்கு வேறு எண்ண ஓட்டங்கள் வடிவங்கள் என்று யோசிக்க வைக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான சிந்தனைகள் தான். மாடர்ன் ஆர்ட் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரியும் தானே கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. படங்களும் பகிர்வும் நன்று. சிற்பங்கள் யாவும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பகிர்வும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    படங்கள் எல்லாம் அருமை.
    மரத்தில் வண்ண குடைகள் தொங்குவது, இலைகளால் தோரண வாயில் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், படங்கள் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கண்களுக்கு விருந்து அளிக்கும் உலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழற்பட உலா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....