ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கடந்த நான்கு வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் தலைநகர் தில்லியின் ஒரு பகுதியான நோய்டா பகுதியில் நடந்த சரஸ் ஆஜீவிகா மேளாவில் எடுத்த சில நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்த பதிவுகளுக்கான சுட்டி கீழே…


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி ஒன்று 


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி இரண்டு


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி மூன்று


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி நான்கு


மேலே தந்திருக்கும் பகுதிகளை இதுவரை வாசிக்கா/பார்க்காவிட்டால் பார்த்து விடுங்களேன்.   இந்த வாரம் இந்த மேளா குறித்த மேலும் சில விஷயங்கள் பற்றி பேசுவோம்.  எத்தனை எத்தனை பொருட்கள் - அனைத்தும் கற்பனா சக்தியின் வெளிப்பாடாக இருக்கும் போது அவற்றை செய்பவர்களுக்கும் மனதில் ஒரு வித திருப்தி… அவர்களின் உழைப்பு தந்த பரிசாக உருவாகும் பொருளை பார்க்கும் நமக்கும் ஒரு வித பிரமிப்பு மற்றும் உற்சாகம். சாதாரண சணல் கூட அவர்களுக்கு பயன்படுகிறது - அதனையும் பொம்மைகளுக்கான உடைகளாகச் செய்து விடுகிறார் உத்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்த ஒரு இளம் பெண்.  எல்லோரும் பிளாஸ்டிக் கொண்டு உருவாக்கப்பட்ட பார்பி டால் குறித்து பேச, இந்தப் பெண் சணல் கொண்டே பொம்மைகளை உருவாக்கி விடுகிறார்.  காதணிகள், கழுத்தணி, மிதியடிகள், இரும்பினால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் என எத்தனையோ விதமான பொருட்களை இங்கே பார்க்க முடிந்தது. கலைவண்ணம் மட்டுமல்லாது திறமைகளும் அவர்களது தயாரிப்பில் உருவான ஒவ்வொரு பொருளிலும் தெரிந்தது.  இவற்றையெல்லாம் சந்தைப்படுத்த இப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தால் நல்ல விஷயம் தானே.  இப்படியான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் அரசுத் துறைக்கு பாராட்டுகளும் உரித்தானவை.


இந்த நிகழ்வில் எடுத்த மேலும் சில நிழற்படங்கள்,   ஒரு உலாவாக இதோ இந்த வார ஞாயிறு அன்றும்! 






















******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

11 ஆகஸ்ட் 2024


18 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.
    சரஸ் ஆஜீவிகா மேளாவில் எடுத்த படங்கள் எல்லாம் அருமை.
    கைவினைப்பொருட்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், படங்கள் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. கைவினை பொருட்கள் படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டால் கவலை யாருக்கும் இல்லை ஒத்துக் கொள்ள வேண்டியது தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயம் என்பதால் தானே அந்த வாசகமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பல கைவினைப் பொருள்கள் அழகுதான், ஆனால் வீட்டில் அடைசலாகிவிடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் அடைசல் - :) ஆகலாம்! பராமரிப்பதும் கடினம் தான். ஆனாலும் இது போன்ற பொருட்களுக்கு வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வியக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. அற்புதமான கைவினைப் பொருட்கள். சணல் பொம்மைகளின் நேர்த்தி பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி.

    வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்த படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. கற்பனா சக்தியில் உருவான கைவினைப் பொருட்கள் அத்தனையும் மனதையும் கண்ணையும் கவர்கின்றன. எனக்கும் ரொம்பப் பிடிக்கும் இப்படிப் பார்க்கும் போது உற்சாகம் மனதைத் தொற்றிக் கொள்ளும். கலைஞர்களின் திறமை வியக்க வைக்கிறது! இவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பித்தானே. இப்படியான கடைகளைச் சுற்றி வருவதே மனதிற்கு இதம். எப்படிச் செய்யறாங்கன்னு பார்ப்பதும் பிடிக்கும்.

    பட்டன்கள் பயன்படுத்தியும், சணல் கொண்டும் பொம்மைகளுக்கு உடைகள் செய்ததுண்டு. படத்தில் இருப்பது போன்று, கூடவே வீட்டில் இருப்பவற்றைக் கொண்டு பொம்மைகளும். பொட்டலம் கட்டி வரும் சணலை தூர எறிய மாட்டேன் அதை வைத்துக் கொண்டு வளையல்களைச் சுற்றி டிசைன், அதைப் பின்னலாகக் கொண்டு கையில் கங்கண் போன்றும். இடையில் பாசிகள் வைத்தும் வளையல்கள், காதுக்கு என்றும் செய்ததுண்டு. இடையில் பேப்பர் கம்மல்கள் கூடச் செய்ததுண்டு. இப்ப எதுவும் செய்வதில்லை.

    பொம்மைகளுக்குத் தலை முடியாகவும் அலங்காரத்திற்கும் பயன்படுத்தியதுண்டு சணலை. அதெல்லாம் ஒரு காலம் wealth from waste என்று.

    படங்கள் எல்லாமே ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் இங்கே சொன்னது சிறப்பு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பொருட்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி

    படங்கள் எடுத்து விதம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடாத்துவது நன்று.

    பொம்மைகள்,வளையல்கள் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைவினைப் பொருட்கள் கண்காட்சி நல்லதே - செய்யும் நபர்களுக்கும் உற்சாகம் தருமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....