ஞாயிறு, 10 நவம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினைந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல pharmacy.

இன்று அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அருளுகிறேன்.


*******



என்னையே சுத்தி சுத்தி வராம முன்னால போ சிம்மா, நான் வந்துண்டே இருக்கேன்.


*******



போட்டோக்கு pose குடுத்தது போதும் புலித் தம்பி கிளம்பு நிறைய வேலை இருக்கு. எல்லார் வீட்டுக்கும் போய் சுண்டல் டேஸ்ட் பண்ணனும்.


*******



முருகா சரியா உக்காந்துக்கோ. ஒரு ride போயிட்டு வரலாம். இன்னிக்கு தாண்டியா விளையாடிக்கோ. அப்புறம் அடுத்த வருஷம்தான்.


*******



குளிச்சிட்டு தலைகூட காயவெக்காம அவசரமா என் பக்தர்களுக்கு அருள் செய்ய கிளம்பியிருக்கேன், நீ சோம்பேறித்தனமாக உக்காந்திருக்க புலித் தம்பி, கிளம்பு சீக்கிரம்...

*******



திலகம் நெத்திலேர்ந்து மூக்கு நுனி வரைக்கும் இட்டது போறாதுன்னு கன்னம், புருவத்துக்கு மேலன்னு புகுந்து விளையாடியிருக்கா அம்மா. குங்குமம் வேறு எதுக்கு என் உள்ளங்கையில? ரொம்ப ஓவரா போய்க்கிட்டிருக்கு!

*******



சே பச்சை மண்ணு. இதைப் போய் வெண்ணெய் திருடறான், பொய் சொல்றான்னு சொல்றாங்களே ராக்ஷசிகள்! எல்லாம் பொர்ர்றாமை!

*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

10 நவம்பர் 2024


6 கருத்துகள்:

  1. படங்களும், படங்களுக்கான வரிகளும் ரசனை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. அழகிய படங்களையும், அதற்கு பொருத்தமான வாசகங்களையும் கண்டு, படித்து ரசித்தேன்.

    தூங்கும் கண்ணனை கண்டு களிக்கும் யசோதையின் முகத்தில்தான் எத்தனை தாய் பாசம் ஜொலிக்கிறது. அந்தப்படம் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. படங்களும் வரிகளும் சூப்பர் ரசித்தேன். அதுவும் கடைசி!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நன்றி.ரசித்தமைக்கு.
    விஜி.

    பதிலளிநீக்கு
  5. படங்களும் வாசகங்களும் ரசித்தேன்.

    குட்டிக் கண்ணன் படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....