செவ்வாய், 26 நவம்பர், 2024

தூங்கு…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி இருபது  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


******


இணையத்தில் இருந்த இந்த படத்தினை சமீபத்தில் மகள் எனக்கு அனுப்பித் தந்தார்...... கொஞ்சம் contradictory ஆக இருந்தாலும் இப்படி இருப்பதே நல்லது..... வாழ்க்கை உங்களைத் தொடர்ந்து புரட்டிப் போடும்போது, எந்தக் கவலைகளும் இன்றி இப்படித் தூங்க முடிந்தால் சுகமாக இருக்கும் என்பதை கடந்த சில நாட்களாக உணர்கிறேன். 


அப்பாவின் உடல் நிலை காரணமாக, தொடர்ந்து கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக இரக்கமற்ற (urakkamatra என ஆங்கிலத்தில் அடிக்க, உறக்கமற்ற என வராமல் இப்படி வருகிறது.... ஒரு வகையில் இதுவும் சரியே!) இரவுகள்... அப்படியான ஒரு இரவு நேரம், வசதிகள் இல்லா இடத்தில், மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் என்னையும் அறியாமல் உறங்கினேன்...... 


பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக, பூதாகரமாக உருவெடுத்து நிற்கிறது.  ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டால் அடுத்தது தலைதூக்குகிறது.  தொடர் மருந்துகள், சிகிச்சைகள் என நாட்கள் தொடர்கின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு, 87 வயதாகும் அப்பாவுக்கு உடல் நிலை அவஸ்தைகளோ....... அவனே அறிவான்......   


ஆங்கிலத்தில் "The best bed one can sleep on is PEACE" என்று ஒரு பழமொழி உண்டு. அமைதி - இது மட்டுமே - அப்பாவுக்கும் எங்களுக்குமான தேவை!


பின்குறிப்பு: மேற்கண்ட காரணங்களால், நண்பர்கள் யாருடைய பதிவிற்கும் என்னால் வர இயலவில்லை.  எனது பதிவில் நீங்கள் தரும் கருத்துரைகளுக்கும் நன்றி தெரிவிக்க இயலவில்லை.  நண்பர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.  முன்னரே பதிவு செய்து வைத்திருந்த பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.  சில நாட்கள் மட்டும் அப்படியான பதிவுகள் வெளிவரும்.  அதன் பின்னர் பதிவுகள் எழுதி வெளியிடுவது சூழ்நிலை பொறுத்தே என்பதையும் இங்கே தெரிவிக்கிறேன்.  


மீண்டும் சந்திக்கும் வரை…


நட்புடன் 


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 நவம்பர் 2024


2 கருத்துகள்:

  1. Face Book லும் படித்தேன். அப்பா இப்போது எப்படி இருக்கிறார்? அவர் மற்றும் நீங்கள் படும் சிரமங்கள் சீக்கிரம் சரியாக. இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவை படிக்கவே மனது கஸ்டமாக உள்ளது. நம்பிக்கைத் தரும் வாசகம் நன்றாக உள்ளது. தற்சமயம் தங்கள் அப்பா உடல் நலம் எப்படி இருக்கிறது? சிரமமின்றி அவர் பூரண நலமாக வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....