திங்கள், 16 செப்டம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்பது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட திருவோணம் வாழ்த்துகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



உங்களைத் தலைக்கு மேல தூக்கி வெச்சிருக்கேங்கறதுனால என்னோட குடைய damage பண்ணிடாதிங்க மூஞ்சூரண்ணா.


*******



போதும் கிருஷ்ணா நானும் குளிக்கணும்.

கொஞ்சம் இரு குருவி அண்ணா நானே சொம்புல பிடிச்சு உங்களுக்கு ஜோ ஜோ குளிப்பாட்டறேன்.


*******



ஆஹா வசமா நமக்கு ஒரு dupe மாட்டினான்.இன்னிக்கி கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் சாப்பிட இவனை எல்லார் வீட்டுக்கும் அனுப்பிச்சுட்டு நான் வழக்கம்போல வெண்ணெய் டயட் தான்.


ஆனா என் அருள் எல்லோர்க்கும் உண்டு! Happy Janmashtami!


*******



சீடை முறுக்குலேர்ந்து எப்படி தப்பிக்கிறது பல்லு வலின்னு சொல்லிடலாமா


*******




ரோட்டுல மேடு பள்ளம் இருக்குன்னு மேகத்து மேல ஓட்றியா கிருஷ்ணா?


நீ வேற இதெல்லாம் ஐஸ்கட்டி. நான் ஓட்டவேயில்ல அதுவா வழுக்கிகிட்டு போகுது. எதுக்கும் வண்டியை சைடுல நல்லா இறுக்கிப் பிடிச்சுக்கோ ராதா.


*******



ஓடிக்கிட்டே flute வாசிக்காத கிருஷ்ணா பசுக்களும் பின்னாடியே வருது பாரு.


சீக்கிரம் வா, அந்த கோடி வீட்டு கோமளாவும் வரா, அவ வீட்டுலேர்ந்துதான் இன்னிக்கி வெண்ணெய் அபேஸ் பண்ணினேன்


*******



வேண்டாம் விட்டுடுங்க please உங்க வீட்டு சீடை முறுக்கு மிஞ்சினதுக்கு நான் பொறுப்பில்ல


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 செப்டம்பர் 2024


11 கருத்துகள்:

  1. முதல் மூன்று படங்களும் கொள்ளை அழகு.  அனைத்துப் படங்களுக்குமான  வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே! முதல் மூன்றும் சொக்க வைக்கின்றன!

      கீதா

      நீக்கு
  2. படங்கள் அட்டகாசம்.....உங்கள் வரிகளும் ரசனை.

    யார் வரைவது என்று தெரியவில்லையே! இவ்வளவு அழகாக, கவரும் வகையில். வரைபவருக்கு எவ்வளவு பாராட்டுகள் வழங்கினாலும் போதாது! செம ஆர்ட். ஒரு வேளை AI வரையுதா என்ன?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒரு 'ஆப்' சொன்னார்களே.. அதில் சொல்லி வாங்கி இருக்கலாம். நாம் AI யில் வாங்குவது போல..

      நீக்கு
  3. அழகான படங்கள்..

    குறுங்கவிதைச் செய்திகள் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  4. ரசனையான வசனங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  5. நன்றி நண்பர்களே.
    விஜி

    பதிலளிநீக்கு
  6. அனைத்து படங்களும் அழகு. படத்துக்கு ஏற்ற வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. கிருஷ்ணா படங்கள் அத்தனையும் அழகு.வரிகளும் அழகு.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய அழகான படங்களும், அதற்கேற்ப சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் பொருத்தமான வரிகளையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. படங்களும் வரிகளும் ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....