ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

திருவோணம் வாழ்த்துகள் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



என்னதான் பக்கத்து மாநிலமான கேரளத்தின் பிரதான திருவிழாவாக இருந்தாலும் ஓணம் எனக்கும் கொஞ்சம் ஸ்பெஷல் தான் - குறிப்பாக நண்பர்கள் வீடுகளில் கிடைக்கும் ஓண ச(dh)த்யா எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஷயம்! சிறு வயதிலேயே பக்கத்து வீட்டில் இருந்த சுதாம்மா ஓணம் ஸ்பெஷலாக தரும் உணவு வகைகள் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது! தில்லி வந்த பிறகும் நிறைய கேரள நண்பர்கள். ஓணம் கொண்டாட்டத்தின் போது அவர்களது வீடுகளுக்கு அழைத்து ஸ்பெஷலாக கவனித்துக் கொள்வார்கள் - தனியாக இருந்த எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் இது போன்று நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு உண்ணும் நாள் சிறப்பான ஒன்றாக இருக்கும்! தினம் தினம் சமைப்பதிலிருந்து விடுதலை கிடைத்தால் யாராக இருந்தாலும் மகிழ்ச்சி தானே!  இந்த வருடம் கேரளம் முழுவதும், மற்றும் உலகம் முழுவதும் பரவியிருக்கும் கேரள நாட்டு நண்பர்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் இன்னாளில் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் வாழ்த்து சொல்லும் விதமாக ஒரு சிறப்புப் பதிவு வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


******


(திரு)ஓணம்!




இன்று ஊரெங்கும் விழாக்கோலம் பூணும்!


வாசலெங்கும் கோலங்கள் மலர்சூடிக் காணும்!


வாமனர் மஹாபலியிடம் யாசித்தது 'மூணு அடி வேணும்'.


அவ்வீரடி கண்முன்னே வளர்ந்து அளந்தது விண்ணும் மண்ணும்!


மூன்றாவது அடி தர இயலாத 'மஹா'பலியை விலகியது அவன் மானம்!


சட்டென சிரம் தனை ஈந்து சிறந்தது அவன் தானம்!


அத்தோடு அழிந்தது அவன் கர்வமெனும் ஈனம்.


பேரன் செயலை மெச்சி ப்ரஹ்லாதன் செய்தார் கானம்!


பூமாரி பொழிந்தது வானம்!


மஹாபலியின் பணிவு அனைவருக்கும்  வேணும்!


அதற்கு அவ்வுலகளந்த கடவுளின் அருள் மிக வேணும்🙏🏻🙏🏻


அனைவரையும் வாழ்த்துகிறேன், இனிய ஓணம்💐💐


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

15 செப்டம்பர் 2024


8 கருத்துகள்:

  1. ஓணம் திருநாள் வாழ்த்துகள்! வெங்கட்ஜி!

    இங்கும் ஓணம் சdhத்யா (பிரதமன் - பாயாஸம் இல்லாமல்) தயாராகிறது!!!! joy!

    இன்றும் உங்களுக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். Enjoy Madi!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. விஜி அவர்களின் ஓணத்திற்கான சிறப்புப் பதிவு நல்லாருக்கு வரிகள். வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.
    ஓணம் திருநாள் நல் வாழ்த்துகள்

    விஜி வெங்கடேஷ் அவர்களின் ஓணம் பண்டிகை வாழ்த்தும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி நண்பர்களே.
    விஜி

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் படமும் அருமை. தங்களுக்கு திருவோணம் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ஆம்.. நல்ல உணவுகள் கிடைத்த விஷேடம் நிறைந்த அந்த நன்நாட்களை மறக்க முடியுமா?அதை நினைவு வைத்து பதிவில் பதிந்திருப்பதற்கு நன்றி.

    சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் ஓணம் திருநாள் படங்களும், சிறப்பான பதிவும் அருமை. விஜி வெங்கடேஷ் சகோதரிக்கும் என் அன்பான ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் பதிவும் அருமை.. வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  7. ஓணம் வாழ்த்துகள்.  எனக்கு கேரள நண்பர்கள் அருகில் யாரும் வாய்க்கவில்லை.  பல வருடங்களுக்கு முன் அப்பாவோடு வேலை பார்த்த மலையாள நண்பரின் மகள் - ஒரு கேரள சேச்சி 'ஷ்ட்டூ ' என்று ஒன்று செய்து கொடுத்தார்.  நம்மூர் அவியல் மாதிரி இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. இரு முறை தோழிகள் வீட்டில் ஓணம் சத்தியா விருந்தில் கலந்து கொண்டிருக்கிறேன்.

    படங்களும் பகிர்வும் விஜி வெங்கடேஷ் அவர்களின் வாழ்த்தும் அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....