வெள்ளி, 13 செப்டம்பர், 2024

தன்னம்பிக்கை மனிதர்கள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தன்னம்பிக்கை மனிதர்கள் - 28 ஆகஸ்ட் 2024



82 வயதில் சிறுவயது பெண் போல புன்சிரிப்புடனும் துறுதுறுப்புடனும் எல்லோருக்கும் ஈடு கொடுத்து அவ்வப்போது பாடங்களை ரெகார்ட் செய்து ஆசிரியருக்கு அனுப்பும் பெண்மணி இவர். திருச்சி தான் இவரது ஊர் என்றும் தற்சமயம் சிட்னியில் உள்ள தன் மகள் வீட்டிலிருந்து வகுப்புகளை அட்டெண்ட் செய்கிறார் என்பதும் தெரிய வந்தது! 


மூத்த மாணவியான இவரை ஆன்லைன் வழியே விளக்கேற்றச் சொல்லித் தான் விழாவை துவக்கினோம்! "நேரத்த வீணாக்கக்கூடாதுன்னு எம் புள்ள சொன்னான்! அதனால தான் இந்த வகுப்புல சேர்ந்தேன்! பார்க்கலாம்! பகவானோட அருள் இருந்தா அடுத்தடுத்த லெவலையும் நான் முடிப்பேன்னு நினைக்கிறேன்" என்று புன்னகையுடன் பகிர்ந்து கொண்டார் பானும்மா!


*****


26 வயது அக்‌ஷராவால் பிறந்ததிலிருந்தே உட்காரவோ, நிற்கவோ முடியாது! எலும்புகளில் ஏற்பட்ட ஒருவித பாதிப்பினால் படுக்கையிலேயே தான் எல்லாம் என அவரது வாழ்நாள் சென்று கொண்டிருக்கிறது! 


தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக அக்‌ஷரா கீதையின் எல்லா நிலைகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டு இப்போது டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்டாக சேவை செய்கிறார். புன்னகையுடன் "எனக்கு தமிழ் தெரியாது!" என்று சுந்தர தெலுங்கில் எங்களிடையே உரையற்றினார்! நேற்றைய எங்கள் விழாவை பதிவு செய்ததும் அக்‌ஷரா தான்!


ஒவ்வொரு நாளும் வாழ்வின் மீதான புரிதலைக் குறித்து யாரோ ஒருவர் மூலம் உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறார் இறைவன்! நாம் தான் அதை கவனிப்பதில்லை! என்னுடைய தேர்ச்சி குறித்து பாராட்டி எனக்கு பதில் தந்த என் ஆசிரியரின் மெசேஜை பார்த்து விட்டு "என்னுடைய எதிர்காலம் என்பது  என்ன??? " என்ற யோசனையுடன் இருந்த எனக்கு நேற்றைய பொழுதில் இறைவன் தந்த முன்னுதாரணம் தான் இந்த இருவர்!


பின் குறிப்பு: முகநூலில் எழுதிய இற்றை ஒன்று, இங்கே உங்கள் பார்வைக்காகவும், எனது சேமிப்பிற்காகவும்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

13 செப்டம்பர் 2024


9 கருத்துகள்:

  1. வாசகம் அருமை.

    ஒவ்வொரு நாளும் வாழ்வின் மீதான புரிதலைக் குறித்து யாரோ ஒருவர் மூலம் உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறார் இறைவன்!//

    ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.
    தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. அக்‌ஷரா மனதில் நிற்கிறார். பானுமதி சுப்பிரமணியம் அவர்களுக்கு நமஸ்காரங்கள்.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. அக்ஷ்ரா வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! தன்னம்பிக்கை அசாத்தியம் என்பதோடு ஊக்கம் தரும் பெண்!!! மனம் நெகிழ்ந்தது,

    பானுமதி சுப்பிரமணியம் அவங்க இந்த வயசிலும் நேரத்தை வீணாக்காமல் கற்பது என்பது முன்னுதாரணம்! இப்படி ஏதேனும் கற்றுக் கொண்டிருந்தால் மனமும் உடலும் சோர்வடையாமல் இருக்கும்.

    உண்மை ஆதி, தினமுமே நாம் பார்ப்பவை, சந்திக்கும் மனிதர்கள் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறார்கள் நாம் வாழ்க்கையை புரிந்து கொள்ளவும் உதவும் வகையில்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ஒவ்வொருவரும் ஒரு பாடத்தை சொல்லித் தந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் இருந்து பார்க்க..

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  4. பார்த்த வாசித்த நினைவு வந்தது, பார்த்தால் முகநூலில் நீங்கள் பகிர்ந்தது என்று தெரிகிறது.

    இப்படியான மனிதர்கள் நமக்கு நல்ல உதாரணங்கள். தன்னம்பிக்கை மனிதர்கள். சின்னப் பெண் ஆனால் பிறவியிலிருந்தே இத்தனை உடல் பிரச்சனைகளுக்கும் நடுவிலும் திறமையை வளர்த்துக் கொண்டு செயல்படுகிறார் தன்னம்பிக்கையுடன் என்பது Where there is a will there is a way out என்பது போல.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். அக்ஷ்ராவின் துணிச்சலை பார்த்த போது நம் பிரச்சினைகள் கடுகாகத் தோன்றியது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  5. 82 வயதிலும் ஆர்வமுடன் பயிலும் பெண் ,அக்ஷயா இருவருமே மனதுக்கு தைரியம் குடுக்கும் முன்மாதிரிப் பெண்கள் வாழ்த்துவோம் இருவரையும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....