அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
மும்பையில் பணிபுரிந்தவர் திருமதி விஜி வெங்கடேஷ் என்பதை முந்தைய பதிவொன்றில் சொல்லி இருக்கிறேன். சமீபத்தில் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. 5 செப்டம்பர் 2024 அன்று ஐம்பது வருடங்களைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பொன்விழா ஆண்டான இந்த ஆண்டில் நடந்த சிறப்பு நிகழ்வுக்காக அவர் எழுதிய பாராட்டுரை ஒன்றை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
பொன்விழா!
பொன்விழா காணும் FAB நிறுவனம் அளப்பரிய பெருமைகளைக் கொண்டதால் அவற்றை வார்த்தைகளுக்குள் அடக்க முனைவது சூரியனை முகம் பார்க்கும் கண்ணாடிக்குள் அடக்குவது போலத்தான்.
இருந்தும் என் ஆசையை பூர்த்தி செய்ய விழைகின்றேன்,
தமிழ்க் கடவுளைத் துணைக்கு அழைக்கின்றேன், துணிவாய் எழுதுகோல் பிடிக்கின்றேன்🙏🏻 🙏🏻
05.9.1974.
அ மைதியாய்
ஆ ரம்பித்த
இ ந்நிறுவனம்
ஈ டில்லா
உ யரத்திற்கு
ஊர் போற்ற
எ ழுந்தது.
ஏ ணிப்படியாம் இதில்
ஒ வ்வொருவரும்
ஓ ஹோவென வளர
ஒள வை மொழிபோல் அழியாப் புகழ் கொண்டது!
எஃகு போல் உறுதியும் அடைந்தது!
பொன்னார் மேனியனின் கனகசபை ஒரு ஒப்பற்ற பிறவியை ஈந்தது;
அஃது ஈடில்லா நிறுவனத்தை நிறுவியது;
ஆல் போல் தழைத்து ஆங்காங்கே விழுதுகளை (units) ஈன்றது;
பலப் பல விருதுகளை வென்றது;
பாங்காய் உயர்ந்து விரிந்தது;
கந்தனின் கடைக்கண் பட்டது;
தொட்டதெல்லாம் துலங்கியது;
நிறுவனமும் நிறுவனரும் வேறல்ல;
இவர் அதன் வேரன்றி வேறல்ல;
விண்ணைப் போல் பரந்த அறிவு;
மண்ணைப் போல்
அசாத்திய பொறுமை;
தீயைப் போல் ஜொலிக்கும் திறமை;
காற்றைப் போல் அதீத செயலாற்றல்;
நீரைப் போல் வளைந்து கொடுத்தல்;
பஞ்சபூத தன்மையைப் பெற்றதால் இதுவும் பிரபஞ்ச பேராற்றலே !
பணிபுரிவோர்க்கு இது ஒரு தாய் வீடு;
பாதுகாப்பாய் இறகை ஈயும் நவீனக் கூடு;
நம்பி வருவோர்க்கு வாராது ஒரு கேடு;
சொல்லாமல் செய்துச் செல்லும் நடை இதன் பீடு (பெருமை)!
இது வீண் புகழ்சியில்லை; உண்மை;
அனுபவித்தார் மனம் அடையும் தண்மை (குளிர்ச்சி)!
பணியாளர் பெறும் வசதிகள் ஒன்றிரண்டல்ல;
அதை நான் சொல்ல விழைவது ஒன்றும் தவறல்ல;
மருத்துவக் காப்பீடு அனைவருக்கும்;
அவர்க்கு மட்டுமல்ல குடும்பத்தாருக்கும்!
உயிர் காப்பீடும் அனைவருக்கும்;
அது தாயத்துப் போலிருந்து ரக்ஷிக்கும்;
விபத்துக் காப்பீடும் உண்டு;
அது நேராமல் இருக்க பயிற்சி வகுப்பும் உண்டு;
குழந்தைகள் படிப்புக்கு உதவித் தொகை;
சிறந்த மாணாக்கருக்கு ஊக்கத் தொகை!
ஆனந்தமாய் அன்பளிப்பு மனைவி கரம் பற்ற;
உடன் பிறந்தோர்க்கு நிதி உதவி வாழ்வில் ஒளியேற்ற (திருமணம்);
பெற்றோர்க்கும் நிதி உதவி அவரை கரையேற்ற;
வீடு,வாகனம் வாங்க வட்டியில்லா கடன் வாழ்க்கைத் தரம் ஏற்ற!
சமுதாய நலன் பேணவும் முனைவுண்டு;
மரங்கள் நடுவதில் அது பிரதிபலிப்பதுண்டு;
பணியாளர்கள் உற்சாகமாய் பங்கெடுப்பர்;
சுற்றுச் சூழலை அக்கறையாய் காப்பர்;
பஜனை ஒலி செவி நிறைக்கும்;
இன்பச் சூழ்நிலை மனம் நிறைக்கும்;
இரத்ததான முகாம் அமைப்பதுண்டு;
பலரும் விரும்பி தானம் செய்வதுண்டு;
உற்சாகமூட்டும் நல் சுற்றுலாக்கள் உண்டு;
அதில் வித விதமாய் விளையாட்டுக்கள் உண்டு;
சிரிப்பும் கொண்டாட்டமும் எங்கும் விரவி இருக்கும்;
பொருள் உற்பத்தியில் அது எதிரொலிக்கும்;
பிறந்த நாள் வாழ்த்தொலியோடு இணையும் cake ன் ருசியும்;
மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் கசியும்!
மாம்பழ சீசனில் நம் பைகளை அக்கனி நிறைக்கும்;
அன்பை இப்படித்தான் காட்டணும் எனும் உண்மை உரைக்கும்;
தொழிலில் பக்தியும் உழைப்பும் மிகுந்ததால்,
பலனில் சந்தோஷமும் நிறைவும் மிகுந்தது;
அனைவரையும் அன்பால் அது ஈர்த்தது;
பலவருட பந்தத்தை தோற்றுவித்தது;
முன்னாள் பணியாளரையும் நினைவில் கொள்ளும்; கௌரவப் படுத்தும்;
இன்னல் களையும்;
அன்பைச் சொரியும்!
இன்பத்தில் பங்கெடுக்கும்; துன்பத்தில் தோள் கொடுக்கும்;
இது நம் குடும்பம்!
நல்லதொரு குடும்பம்!
சொன்னது கடுகளவு; சொல்லாமல் விட்டது மலையளவு;
இந்நிறுவனம் மேலும் தழைக்க
நூறாண்டு கொண்டாடி சிறக்க
பல்லாயிரம் பணியாளர் வாழ, வாழ்த்த,
மால் மருகனின் அருள் வேண்டி தாள் பணியும்,
விஜயலக்ஷ்மி.
வாழ்த்த வயதில்லை ஆனால் வணங்க சிரம் உண்டு
கூப்ப கரம் உண்டு
வாழ்க வளர்க பல்லாண்டு பல்லாண்டு
🙏🏻🙏🏻🙏🏻
*******
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
19 செப்டம்பர் 2024
நல்ல நிறுவனம், நன்மைகளையோ எல்லாம் பெறட்டும். வாழ்த்த வயது தேவையில்லை, மனம் இருந்தால் போதும்! வணங்க சிரம் உண்டு, கூப்ப கரம் உண்டு எனும் வரிகளை ரசித்தேன்.
பதிலளிநீக்குஒரு நிறுவனம் நல்ல பெயரெடுக்க, தொழிலாளர்களும் உண்மையானவர்களாக அமைய வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்க வளத்துடன்....
நல்ல நிறுவனம் என்று தெரிகிறது. நிறுவன உரிமையாளர் நல்லவராக இருப்பதோடு மட்டுமின்றி அதில் பணியாற்றும் பணியாளர்களும் விசுவாஸத்துடன் இருக்க வேண்டும், நேர்மையுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நிறுவனம் மிகவும் நன்றாக இயங்கும்.
பதிலளிநீக்குஅந்த வகையில் நீங்கள் பணியாற்றிய நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மேலும் மேலும் வளம் பெற்று வளர!
கீதா
எங்களுடைய வாழ்த்துகளும்! எல்லாமே கட்டுக்கோப்பாக அமைந்தால் தழைத்தோங்கும்.
பதிலளிநீக்குநீங்கள் எழுதியிருக்கும் வாழ்த்துப்பா நன்றாக உள்ளது
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.பல வெற்றிகளை கண்டு நல்லதொரு பாதையில் பயணிக்கும் சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் பணி புரிந்த நிறுவனம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் என வாழ்த்துகிறேன்.
நிறுவனத்தின் நெஞ்சை நிமிர்த்தும் நடை பயணத்துடன், அந்நிறுவனத்தின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதியுள்ள பாராட்டுரைகளை மிகவும் ரசித்தேன்.
வாழ்க.. வளர்க அந்நிறுவனம். வாழ்க.. வளர்க விஜி வெங்கடேஷ் அவர்களின் தமிழ் புலமையும். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எங்கள் வாழ்த்துகளும். சகோதரி விஜி அவர்கள் உங்களின் வாழ்த்துபா வரிகளும் அருமை.
பதிலளிநீக்குதுளசிதரன்
அனைவருக்கும் மிக மிக நன்றி.உங்கள் வாழ்த்துக்களை எங்கள் நிருவனர்க்கு சமர்ப்பிக்கிறேன்.
பதிலளிநீக்குவிஜி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குவிஜி அவர்கள் பணிபுரிந்த நிறுவன ஐம்பதாம் ஆண்டு விழாவுக்கு எழுதிய வாழ்த்து கவிதை அருமை.
//இந்நிறுவனம் மேலும் தழைக்க
நூறாண்டு கொண்டாடி சிறக்க
பல்லாயிரம் பணியாளர் வாழ, வாழ்த்த,
மால் மருகனின் அருள் வேண்டி தாள் பணியும்,//
நானும் முருகனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்த்துகள்.