ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினெட்டு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - அருகில் ஆபத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு

பகுதி பதினேழு



அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



நல்லா ஊர் சுத்திட்டு இப்போ மூஞ்சிய இப்படி வெச்சுக்கிட்டா என்ன அர்த்தம் கிருஷ்ணா? exam க்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு.


ஆனா அது எனக்கு இப்போ வந்திருக்கிற ஜூரத்துக்கு தெரியலையே! நீயே தொட்டுப் பாரும்மா.


*******



மயிலண்ணா c'mon சீக்கிரம் வண்டிய start பண்ணுங்க திருச்செந்தூர் ல எல்லோரும் wait பண்றாங்க. பசு அண்ணா சேவல கூட்டிட்டு வந்திருங்க. ok? சொல்லுங்க -

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!


*******



கன்னுகுட்டி செல்லம் என்னை மாதிரியே உனக்கு makeup போட்டதுனால நான் சாப்பிடறதெல்லாம் உனக்கும் குடுக்கணும்னு அர்த்தமில்ல. இந்த கிண்டில இருக்கற பால் எனக்குத்தான். ok?


*******



ஆஹா பாலை நல்லா குறுக்கி பாயசம் வெச்சிருக்கியே பேஷ் பேஷ்.

சத்தமா சொல்லாத கிருஷ்ணா பசு வாயை வெச்சுடப் போகுது.


*******



அம்மா ஆனாலும் நீ  கஞ்சம்மா. இந்த வெண்ணெய் எனக்கு எப்படி போதும்?


இப்போ இது போதும் கிருஷ்ணா. இல்லன்னா Flute வாசிக்கும்போது சத்தம் வராது வெண்ணைதான் வரும்.


*******



கூப்டீங்களா தோட்டக் காரரே, இல்ல நா பூ பறிக்கல சும்மா தொட்டுப் பாத்தேன்…


*******



அந்த flute ஐ கொஞ்சம் குடேன் கிருஷ்ணா.

முடியாது ராதா நீ வாசிச்சா பசுக்கள் உன் பின்னாடி வர ஆரம்பிச்சுடு்ம்.

பெண்கள்னு சொல்லு கிருஷ்ணா, அதான தர மாட்டேங்கர


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

2 ஃபிப்ரவரி 2025


1 கருத்து:

  1. அதிகமா வெண்ணெய் சாப்பிட்டா Flute வாசிக்கும்போது வெண்ணெய் வரும் என்றதும் ஆஹா..  வெண்ணெய் போல குழலோசை வரும் தோன்றியது!  எக்ஸாம் ஃபீவர் சூப்பர்.  அந்த முழி!

    ரசித்தேன் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....