அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Kharigar Gaathaa - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சமஸ்க்ருதம் - 16 ஃபிப்ரவரி 2025:
நட்புகள் எல்லோரும் நலம் என நினைக்கிறேன்! மீண்டும் மாணவியாக மாறியதிலிருந்து நேரம் மின்னலாய் கடந்து செல்கின்றது! ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள்! வார இறுதியில் செய்ய வேண்டிய வேலைகள் என திட்டமிடலுடன் பயணிக்கிறது!
சமஸ்கிருதத்தில் இன்று யூனிட் டெஸ்ட் நடக்க இருக்கிறது என்பதால் இந்த வாரம் முழுவதுமே அதற்கான மெனக்கெடல்களுடன் எழுதிப் பார்ப்பதும், படிப்பதுமாக இருந்தேன்! செய்வதை 'ஏனோ தானோ' என்றில்லாமல் சற்று சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பவள்...🙂
ஒரு விதத்தில் இதுவும் நல்லதே! தேவையற்ற சிந்தனைகளுக்கு இடமில்லையே! வார இறுதியில் தான் புத்தக வாசிப்பு, வீட்டை எப்போதும் போல் பராமரிக்க செய்ய வேண்டிய வேலைகள், கொஞ்சம் மாற்றத்துடன் செய்யப்படும் சமையல் என இலக்குகளுடன் பயணிக்கிறது! கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது இல்லையா!
நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
*******
தாடங்க பிரதிஷ்டை - 17 ஃபிப்ரவரி 2025:
இன்றைய நாள் இறையருளுடன் சென்றது எனச் சொல்வேன்! திருச்சி ஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டை செய்வதற்காக காஞ்சி மடத்திலிருந்து 'பெரியவா' இங்கு வருகை தந்திருக்கிறார்! நேற்றைய பொழுதில் தாடங்க பிரதிஷ்டை எனப்படும் ஜீர்ணோதாரணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது!
நான் இப்போது அம்பாளின் அழகை வர்ணிக்கும் செளந்தர்ய லஹரியை முறையாக ஒரு குருவிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் அல்லவா! செளந்தர்ய லஹரி உருவான கதையைப் பற்றி மெய்சிலிர்க்கும் விதமாக மேம் சொல்லியிருக்கிறார்! இதுவரை 99 ஸ்லோகங்களை கற்றுக் கொண்டுள்ளேன்! அதில் 28வது ஸ்லோகத்தில் தாடங்க மகிமையைப் பற்றி சொல்லியிருப்பதாகவும் நேற்றைய பொழுதில் எல்லோரையும் பாராயணம் செய்யும்படியும் எங்க மேம் கூடச் சொல்லியிருந்தார்!
அப்படி இன்றைக்கு சங்கர மடத்திற்குச் சென்று பெரியவாளையும் தரிசித்து வந்தேன்! பெரியவா சந்திரமெளீஸ்வர பூஜை செய்து கொண்டிருக்க ஒருபுறம் கோ பூஜையும் நடைபெற்றது! அங்கேயே இரண்டு மணிநேரம் போல உட்கார்ந்து விட்டேன்!
கோவையில் ஒருசமயம் பெரியவா இரண்டு பேரும் வந்திருப்பதாக தெரிய வரவும் என் சிறுவயதில் அம்மாவோடு சென்று பெரியவாளை தரிசித்திருக்கிறேன். அதன் பின்பு இப்போது தான் அந்த பாக்யம்!
அங்கு அமர்ந்திருந்த சமயத்தில் மனதில் பல வித எண்ணங்கள்! பிரார்த்தனைகள்! எனக்கு நானே சொல்லிக் கொண்ட சமாதானங்கள்! கண்களிலிருந்து எதற்கென்றே தெரியாமல் கரையை உடைத்துக் கொண்டு பெருகிய நீர்! பின்பு எல்லாவற்றையும் குருவின் பாதங்களில் சமர்ப்பித்து விட்ட நிம்மதியில் தெளிவும் கிடைத்தது ஆச்சர்யம்!
நடப்பது எல்லாம் நன்மைக்கே!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
*******
இறையருளும் குருவருளும் - 18 ஃபிப்ரவரி 2025:
நேற்றைய பொழுதில் என்னவரிடமிருந்து ஒரு காணொளி அழைப்பு வந்தது! அது தாங்க வீடியோ கால்! அவர் கடந்த மூன்று நாட்களாக உத்திராகண்ட் அருகே மலையேற்றம் செய்து வருவதால் அங்கிருந்து அழைத்து பனி படர்ந்த மலைகளையும் தூரத்தில் தெரிந்த கோவிலையும் காண்பித்து உடன் வந்திருக்கும் நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்! எல்லோரும் மாற்றி மாற்றி நமஸ்கார் ஜி சொல்லிக் கொண்டோம்!
அவர் என்னிடம் காண்பித்த கோவில் Tungnath temple! உலகிலேயே உயரமான இடத்தில் இருக்கும் சிவன் கோவிலாம்! பஞ்ச கேதாரில் ஒன்று எனவும் சொன்னார்! அதை காணொளியாகவும் எடுத்து அனுப்பியிருந்தார்! சரி! இதையெல்லாம் அவருடைய பயணத்தொடரிலேயே எழுதுவாரே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது!
நேற்றைய நாளில் குருவருளைத் தேடி நான் சங்கர மடத்திற்குச் சென்றிருந்தேன் அல்லவா! அங்கு ஆசி பெறுவதற்காக வந்திருந்த தம்பதிகளைப் பார்க்கும் போது நான் இப்படி தனித்து வந்திருக்கிறேனே என்ற எண்ணம் மேலோங்கியது என்னவோ உண்மை! ஆனால் நிதானமாக யோசித்துப் பார்த்ததில் ஆளுக்கொருபுறமாக இருந்தாலும் இறையருளையும் குருவருளையும் ஒரே நாளில் ஒருசேர பெற்றிருக்கிறோம் என்று புரிந்தது!
சமஸ்கிருதத்தில் செய்யுள் அல்லது நன்மொழி என்று சொல்லப்படும் சுபாஷிதானி ஒன்று தான் சட்டென எனக்கு நினைவுக்கு வந்தது!
दीर्घं लक्ष्यं पश्यत
अल्पं लक्ष्यं मा पश्यत
அதாவது எல்லோரும் தொலைநோக்கு பார்வையுடனும் லட்சியத்துடனும் இருங்கள்! குறுகிய மனப்பான்மையோடு இருக்காதீர்கள் என்று பொருள்! என்னுடைய உலகம் என்பது மிகச் சிறியது! அதற்கேற்ப தான் என் சிந்தனைகளும் இருக்கும்! ஆனால் இறைவன் எங்களுக்காக வகுத்து வைத்திருக்கும் வரைபடம் வேறு என்று புரிந்த நாள் இன்று!
நம்முடைய சிந்தனைகளுக்கும் இறைவன் நியமித்திருக்கும் கணக்குகளுக்கும் தான் எத்தனை பாகுபாடு! புரிந்து கொள்ள முடியாத பொருள்கள்! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்! இறைசிந்தனையுடன் இன்றைய நாளைத் துவக்குவோம்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
19 ஃபிப்ரவரி 2025
நேரத்தை திட்டமிட்டு நன்கு செலவழிக்கிறீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குபெரியவா தரிசனம் நன்று.
காணொளியும் சுவாரஸ்யம். இவை மூன்றையுமே நான் ஃபேஸ்புக்கிலும் படித்தேன்.
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார். ஃபேஸ்புக்கிலும் வாசிப்பதற்கு மிக்க நன்றிகள்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
பெரியவர் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகாணொளி கண்டேன் ஜி அவர்கள் பேசும் பொழுதே தெரிகிறது மலையில் ஏறும் சவால்கள்.
ஜி நலமுடன் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
ஆமாம் சார். மலை என்பதால் ஆக்சிஜன் லெவலும் குறையும் என்பதால் மூச்சு வாங்குகிறது! நல்ல முறையில் தில்லிக்கும் திரும்பிவிட்டார்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
உங்கள் ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாகக் கழிவதில் மகிழ்ச்சி. நேர்த்தியுடன்
பதிலளிநீக்குகாணொளி சூப்பர்.
பெரியவா தரிசனம் நன்று சிறப்பு
கீதா
என்னால் முடிந்த அளவு பயனுள்ள முறையில் செலவிடுகிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
vவெங்கட்ஜியின் குரலுடன் !!! சூப்பர் காணொளி
பதிலளிநீக்குகீதா
என்னைக் கவர்ந்த குரல் அல்லவா...:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
உலகிலேயே அதிக உயரத்தில் இருக்கும் சிவன் கோயில்..!!! வாவ்...
பதிலளிநீக்குசிறப்பான பயணம்
கீதா
ஆமாம். கூகிளாரும் அப்படித்தான் சொல்கிறார்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
தங்களின் வேலைகளும் திட்டமிடல், சிறப்பான முறையில் சமஸ்கிருத பயிற்சி அனைத்தும் அருமை. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
குரு காஞ்சி பீடாதிபதியை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
அதுபோல். தங்கள் கணவருக்கு அவர் நண்பர்களுடன் சென்ற பயணம் மூலமாக உலகிலேயே உயர்ந்த கோவிலில் ஈஸ்வரரையும் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது போல், இறையருளும், குருவருளும், ஒருங்கே சேர்ந்து அன்று உங்கள் இருவருக்கும் கிடைத்தது பெறும் புண்ணியம்.
காணொளி கண்டேன். கோவிலைப் பற்றி தங்கள் கணவர் சகோதரர் வெங்கட்ஜியின் குரல் வழி பதிவை கேட்டு ரசித்தேன். அங்கு பனியில் வழுக்காமல் நடந்து ஏறுவது கடினம்தான்.தங்கள் இருவருக்கும் இறைவன் என்றும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பேஸ்புக்கில் படித்தேன், காணொளியை அங்கும் கண்டேன் இங்கும் பார்த்தேன்,
பதிலளிநீக்குஉங்கள் பொழுதுகள் நல்ல பொழுதாக போவது மகிழ்ச்சி.
நல்லதே நடக்கட்டும்.
சமஸ்கிருத பயிற்சி வகுப்பு சிறப்பு எனக்கு இந்தியும் தெரியாது செள ந்தர்யலகரியில் மூன்று பாடல்கள் மட்டும் தெரியும் வெங்கட்சார் குரலுடன் காணொளி அழகு
பதிலளிநீக்கு