செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

காரிகர் காதா (Kharigar Gaathaa) - சிற்பக்கலையின் பாரம்பரியம் - தலைநகர் நிகழ்வு - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சூரியாஸ்தமனம் - நக்ஷத்திரங்களின் ஒளியில் - பாம்பின் சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தலைநகர் தில்லியில் அவ்வப்போது நிகழ்வுகள் ஏதேனும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.  அப்படியான நிகழ்வுகளுக்கு முடிந்தவரை சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.  சென்ற ஜனவரி மாதம் அப்படி நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு.  ஷில்ப் கி விராசத் என்றால் சிற்பக்கலையின் பாரம்பரியம் என்று அர்த்தம்.  புது தில்லியின் சுப்ரீம் கோர்ட் வளாகம், பிரகதி மைதான் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பாரத் மண்டபம், புராணா கில்லா என அழைக்கப்படும் தில்லியின் பழைய கோட்டை, பைரவ் மந்திர் என பிரபலமான பல இடங்கள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள National Crafts Museum உள்ளே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  ஜனவரி மாதத்தின் சனிக் கிழமை ஒன்றில் அந்த நிகழ்விற்குச் சென்று வந்தேன். மிகவும் அழகிய இடம்.  அங்கே நிரந்தரமாக ஒரு அருங்காட்சியகம் இருப்பது மட்டுமல்லாது இப்படியான நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும்.  அங்கே சென்ற போது எடுத்த சில படங்கள் இன்றைக்கு முதல் பதிவாக உங்கள் பார்வைக்கு. 























மேற்கு வங்காளத்தின் கிராமியக் காட்சி...

தமிழகத்தின் பாரம்பரியமான ஐய்யனார் கோயில் குறித்த விளக்கமும் டெரக்கோட்டா கொண்டு தயாரித்த ஐய்யனார் சிலை பொம்மைகளும் அங்கே பார்த்ததும் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி.  அங்கே உள்ளே நுழைந்ததும் இருக்கும் விஷயங்கள் எல்லாம் இந்தப் படங்களில் தந்திருக்கிறேன். உள்ளே இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு.  சில கலைநிகழ்ச்சிகளும் நடந்து கொண்டிருந்தன. அதன் காணொளிகளும் கூட வரும் பகுதிகளில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன்.  தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

18 ஃபிப்ரவரி 2025


5 கருத்துகள்:

  1. அழகிய சிலைகள், அழகிய படங்கள்.  பார்த்துக்கொண்டே வரும்போது...  'அடடே..  நம்ம அய்யனார்..'

    பதிலளிநீக்கு
  2. வாசகம் மிக நல்ல வாசகம்

    நம்ம ஊர் டெர்ரகோட்டா கவர்ச்சிதான் எப்பவுமே. நான் சில வைத்திருந்தேன் திருநெல்வேலியில் காருக்குறிச்சில வாங்கியது சில, குதிரை மான்கள் ஆனை என்று மிக மிகக் குறைவான விலையில்.

    பல பல வீடுகள் ஊர்கள் மாறியதில் இங்கு மாறியதும் வைத்துக் கொள்ள இடம் இல்லை என்று எல்லாம் கொடுத்துவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஐயனார் செட் சூப்பர்.

    ராஜா ராணி போன்ற மார்பிள் பொம்மைகளும் அம்சம்!

    உலோகத்தில் செய்யப்பட்டவையும் வாவ்! நம்ம ஊரில் எவ்வளவு கைவினைக் கலைஞர்கள் இருக்கிறார்கள் அதுவும் மிகத் திறமையுடன் என்று தெரிகிறது.

    படங்கள் எல்லாம் மிக அருமை, ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே
    .
    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தாங்கள் பகிர்ந்த சிற்பக் கலை வேலைப்பாடுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன். ராஜா, ராணி சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுடன் அழகு. டெரக்கோட்டா தயாரிப்பான ஐயனார் சிலைகளும், குதிரை வரிசைகளும் மனம் கவர்ந்தன.தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வாசகம் அருமை.

    ஷில்ப் கி விராசத் என்றால் சிற்பக்கலையின் பாரம்பரியம் என்று அர்த்தம். //

    பாரம்பரிய சிற்பங்களை கண்டு ரசித்தேன்.
    நம் பாரம்பரிய குதிரை சிலைகள் ஐயனார் சிலைகள் அருமை.
    படங்கள் அனைத்தும் அருமை.


    பிரகதி மைதான் பேர் மாற்றப்பட்டு விட்டதா? முன்பு அங்கு பார்த்த வைகளை பதிவாக்கியது நினைவுகளில்.

    புராணா கில்லா என அழைக்கப்படும் தில்லியின் பழைய கோட்டை பார்த்தது நினைவுகளில் வந்து போனது.


    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....