அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பனிச் சிகரங்கள் - பயண முடிவு - பாம்பின் சிகரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தலைநகர் தில்லியில் ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு. அந்த நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் இந்தத் தொடரின் முதல் மூன்று பகுதிகளில் பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம். இது வரை வெளியிட்ட பதிவுகளை பார்த்திருக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம்.
நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்த மேலும் சில படங்கள் இன்றைய பதிவாக உங்கள் பார்வைக்கு.
பாரம்பரியமான வீட்டின் வெளியே வண்டி ஒன்று…
வீட்டுக் கதவின் மேல் பகுதியில் வைக்கப்படும் மரச் சிற்பங்கள்…
மரத்தில் அற்புதமான வேலைப்பாடுகள்…
இராஜஸ்தானின் பாரம்பரிய உடைகள்…
நூல் கொண்டு நெய்யப்பட்ட சரஸ்வதியின் வடிவம் - ஒடிசாவிலிருந்து…
வடகிழக்கு இந்தியாவிலிருந்து காலணிகள்…
மணிப்பூரிலிருந்து துணியானால் ஆன ஷால் (சால்வை)...
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கோனியா சக்ர கலம்காரி கைவேலைகள்…
வாரணாசியின் பாரம்பரியமான ஜரி வேலைப்பாடுகள்…
வடகிழக்கு இந்தியாவிலிருந்து மற்றுமோரு வேலைப்பாடு…
Soul of a Woman என்ற தலைப்பில் சில நூல் உடைகள்…
இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
27 ஃபிப்ரவரி 2025
பாரம்பர்ய வீடு, வண்டி அருமை. ஒடிசா சரஸ்வதி கொஞ்சம் பாவமாக இருக்கிறார்!
பதிலளிநீக்குஷால் முதலான துணிவகைகளும், நூல் பொம்மைகளும் அருமை.
படங்கள் குறித்த தங்களது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. அருமையான மர வேலைப்பாடுகள். பெண்களின் ஆடைகள் மிக அழகு. ஆனா
பதிலளிநீக்குஎங்க ஊர்ல ஒரு சில சந்துகள் இரண்டு அடி அகலம்தான். இந்த மாதிரி கவுன் போட்டுப் போனா சந்து முனையிலேயே சிக்கிக்கிடுமே!
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குஅதானே... இந்த ட்ரெஸ் போட்டுட்டு போனா நிச்சயம் எங்கேயாவது சிக்கிக் கொள்ளும். இல்லை என்றால் அதனை பிடித்துச் செல்ல ஒரு ஆள் போட்டுக்கொள்ள வேண்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மரவேலைப்பாடுகள் எல்லாமே அருமை. வடகிழக்கில் உருவாக்கப்பட்ட அந்தக் காலணி வித்தியாசமான அழகான வடிவமைப்பு. முட்டி வரை boots போல!
பதிலளிநீக்குபெண்களின் நூல் உடைகள் ஆஹா....என்ன ஒரு கற்பனை மற்றும் கைத்திறன்! அத்தனையும் ரசித்தேன். இதெல்லாம் அழகிப் போட்டி. சில திரைப்படவிழாக்களுக்கு பிரபலங்கள் அணிந்து செல்ல என்று இதுக்கெல்லாம் பயன்படுமாக இருக்கும். மற்றபடி எப்படி இதைப் போட்டுக் கொண்டு போவாங்கந்னு யோசிக்கிறேன்.
கீதா
காலணி - முட்டி வரை வரும் அமைப்பு தான்.
நீக்குநூல் உடைகள் பார்க்க அழகு - ஆனால் இவை எல்லாம் தினசரி பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல தான். உங்கள் சிந்தனையும் எனது சிந்தனையும் ஒன்றாகவே இருக்கின்றன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
படங்களைக் கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குபடங்கள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌதமன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் உண்மை மகிழ்ச்சி என்பது கிடைப்பதற்கு அரிதானதுதான்.!
இன்றைய கலைப் பொருட்களின படங்களை பார்த்து ரசித்தேன். ஒவ்வொன்றும் அவ்வளவு அழகானதாக உள்ளது.
நூல் கொண்டு உருவான சரஸ்வதி, வடகிழக்கு இந்தியாவிலிருந்து காலணிகள், சால்வை பெண்களுக்கான பிரத்தியேக ஆடைகள் என அனைத்துமே அருமையாக உள்ளது. மேலும் பல கலைப் பொருட்களை பார்க்க தொடர்ந்து வருகிறேன். படங்களை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவும், பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பதிவும் படங்களும் அருமை. மர வேலைப்பாடுகள் , ஆடை அணிகலங்கள் , வாசகம் எல்லாம் அருமை.
பதிலளிநீக்கு