அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
பாருப்பா உனக்கு அபிஷேகம் பண்ணிண்டே கைதட்டி பஜனையும் பண்றேன். கண்ணப்பன் வாயால தண்ணி கொண்டு வந்து உனக்கு அபிஷேகம் பண்ணலையா? அது மாதிரிதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.
*******
ப்ப்பா நல்ல ஜலதோஷம். மூக்கெல்லாம் ஜிவு ஜிவுன்னு இருக்கு. பாவம் எங்கிட்டர்ந்து இந்த பசு செல்லத்துக்கு வராம இருக்கணும்.
அதுக்கு நீ கொஞ்சம் தள்ளி இருக்கணும் கிருஷ்ணா.
*******
ஹ்ம்ம்ம் கிருஷ்ணா கோகுல் சாண்டல் பவுடர் அங்க கொட்டியிருக்கும்போதே நெனச்சேன்.
டப்பால கொஞ்சம் பாக்கி இருக்குமா.
*******
கிருஷ்ணா எங்கிட்டயும் குடை இருக்கு, nice ஆ நனையலாம்னு பாக்காத
*******
என்ன கிருஷ்ணா இத்தனை நாள் நீல வர்ணனாத்தான இருந்த?
உஜாலா தீந்துடுச்சு ராதா. வாங்கணும்.
*******
தண்ணில நிக்காத கிருஷ்ணா ஒத்துக்காது.
ஒத்தக் கால்ல நின்னு சாதகம் பன்றேம்மா.
அப்புறம் ஜலதோஷம் பாதகம் பண்ணும், வா உள்ள.
*******
பக்கத்துலயே sweets இருக்கு. ஆனாலும் நான் சாப்பிட மாட்டேனே. டயட் ல இருக்கேன்.
ஆனா 2 குறையுதே கிருஷ்ணா?
லேசா பசிச்சுதுன்னு ரெண்டே ரெண்டு மட்டும் தான் எடுத்துண்டேன்மா அது 1 மணி நேரம் முன்னாடி.
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
23 ஃபிப்ரவரி 2025
முதல் படம் அருமை. இரண்டாவது படம் நிஜமாகவே கிருஷ்ணனுக்கு உடம்பு சரியில்லை போல Bபாவம்! தண்ணில நிக்கற கிருஷ்ணன் அழகு. நல்ல கற்பனை.
பதிலளிநீக்குநன்றிகள்.
பதிலளிநீக்குவிஜி