ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபது - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



கிருஷ்ணா ரெண்டு பேர் நம்மள கவனிக்கறாங்க இல்ல?


அது தண்ணில நம்ம பிம்பம் ராதா.பயப்படாத.


நான் மயிலையும் பசுவையும் சொன்னேன் கிருஷ்ணா.


Super சமாளிப்பு ராதா.


*******



ராதா traditional ஆ இருக்கணும்னு மூக்கு குத்திண்ட பாரு சூப்பர்👌🏻


அது ஸ்டிக்கர் மூக்குத்தி கிருஷ்ணா போட்டோக்காக


*******



அப்பா உனக்கு 108 தாமரை மலர்களால் பூஜை பண்றேன். ஸ்கூலுக்கு மட்டும் போகச் சொல்லாத please


*******



நிறைய angle ல வித விதமா photos எடுத்தாச்சு. வா ராதா போலாம்.


இரு கிருஷ்ணா டிரஸ் இன்னும் காயல. இந்த pose லயும் ஒரு நாலஞ்சு snaps எடுத்திடு. 


விடிஞ்சுது...


*******



ஏம்மா இந்த பாட்டி நிலால வடை மட்டும்தான் சுடுவாளா? இந்த pizza burger எல்லாம் பண்ணமாட்டாளாம்மா?


அது தமிழ் பாட்டி கிருஷ்ணா.இத்தாலி பாட்டி இல்ல. ரொம்ப கெட்டுப் போயிட்ட.


*******



பரவாயில்ல இத்தனை நேரம் என்ன காக்க வெச்சதுக்காக கோச்சுக்க மாட்டேன் முன்னாடி வா கிருஷ்ணா.


இல்ல, இந்த angle லேர்ந்து பாத்தாலும் நீ அழகாகத்தான் இருக்க ராதா. அதை ரசிச்சேன்.


*******



Pose குடுத்தது போதுமா நான் வெண்ணைல கை வெக்கலாமா?


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

16 ஃபிப்ரவரி 2025


7 கருத்துகள்:

  1. ரொம்பக் குழந்தைகளாக ராதாவையும் கிருஷ்ணனையும் காட்டி லவ்வர்ஸ் என்று சொல்வது கொஞ்சம்....

    பதிலளிநீக்கு
  2. அப்பனுக்கே பாடம் சொன்னவனை ஸ்கூலுக்கு அனுப்புவானா அந்த அப்பன்?

    நிலாப்பாட்டி பற்றிய கிருஷ்ண சந்தேகம் ரசிக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  3. ஒளிந்து பார்க்கும் கிருஷ்ணனும் அழகு.  அதற்கான வரிகளும் அழகு.

    வெண்ணெய் சாப்பிட அவசரப்படும் கிருஷ்ணன் க்யூட்!

    பதிலளிநீக்கு
  4. வரிகள் செம.....இந்த வாரம் செம கிண்டல் வரிகள் ரொம்ப ரசித்தேன்...ஸ்கூலுக்கு மட்டும் போகச்சொல்லிடாத......இந்த போஸ்ல நிறைய ஸ்னாப்ஸ்!!!!! பிசா பர்கர்!!!!!!

    எல்லாமே ரொம்ப ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இன்றைய படமும் வாசகமும் அருமை. கைக்கொள்ள வேண்டியதும் கூட.

    கிருஷ்ணா ராதை படங்கள் வாசகங்கள் ஹா...ஹா...ரசிக்க வைத்தன.

    இறுதி படம் வெண்ணை கிருஷ்ணா அழகு.

    பதிலளிநீக்கு
  6. படங்களும், அதற்கு கொடுத்து இருக்கும் கவிதை வரிகளும் அருமை.
    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி நன்றி நன்றி.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....