வியாழன், 13 பிப்ரவரி, 2025

நடை நல்லது - என்ன நடக்கும்? - Bபஞ்ஜாரா மார்கெட் - பகுதி இருபத்தி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பந்த்வாடி கிராமம் - பாம்பின் சிகரம் - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, சென்ற வார இறுதியில் தலைநகரில் ஒரு நகர்வலம் சென்று வந்தேன். காலையில் வீட்டிலிருந்து புறப்படும்போது  புத்தகச் சந்தை அல்லது சூரஜ்குண்ட் மேளா செல்வதாக திட்டம். ஆனால் கிடைத்த பேருந்து வேறு ஒரு இடத்திற்கு. அதனால் திட்டத்தில் சிறு மாற்றம்! நகர்வலம் தில்லியின் துவாரகா நோக்கி. அங்கே ஒரு அழகான மார்க்கெட் இருக்கிறது. பெயர் Bபஞ்ஜாரா மார்க்கெட். 


நகர்வலம் சென்ற நாள் தில்லி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் என்பதால் பெரும்பாலான இடங்களில் அது குறித்த சம்பாஷனைகள் கேட்க முடிந்தது. For and Against என நிறைய கேட்க முடிந்தது. ஒரு சில ராஜா காது கழுதை காது விஷயங்கள். ஒரு பஞ்சாபி மூதாட்டி "இலவசம் தப்பில்ல, வேலைக்குப் போக பேருந்து இலவசம்னா தப்பில்ல ஆனா இங்க எல்லாம் குருத்வாரா போய் லங்கர் சாப்பிட்டு வீடு திரும்பும் பெண்களுக்கு எதுக்கு இலவசம்?" என்று கேட்டு சிரித்தார் ஒரு நடத்துனரிடம். 



ஒரு கடையில் தேநீர் அருந்தச் சென்ற போது தேநீர் கொடுத்துவிட்டு விஸ்ராந்தியாக அமர்ந்து என்னிடம் பேசினார் (படம்). ஆட்சி மாறுது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எங்க வாழ்க்கை மாறுமா? எங்களை மாதிரி நடைபாதை கடைகள் வைத்திருப்பவர்கள் என்ன ஆவார்கள்? கடையை காலி செய்து விடுவார்களா என்றெல்லாம் என்னிடம் கேட்டுக் கொண்டு இருந்தார். அவரிடம் எந்த ஆட்சி வந்தாலும் சில விஷயங்கள் மாறாது, நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. அதானே நிதர்சனம். 


அவரவருக்கு அவரவர் பிரச்சனை..... வேறு என்ன சொல்ல?


மார்க்கெட் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அங்கே விதம் விதமான பீங்கான் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், தரை விரிப்புகள் (Carpet) என பலதும் கிடைக்கின்றன.  Bபஞ்ஜாரா என்ற பெயரில் அழைக்கப்படும் மக்கள் நாடோடிகள். ஆனாலும் இன்றைக்கு அவர்களில் பலரும் ஒரே இடத்தில் வசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அவர்கள் பெயரில் இந்த கடைகள் நடத்தப்பட்டாலும், பல கடைகள் மற்றவர்களாலும் நடத்தப்படுகின்றன.  கலைநயம் மிக்க பல பொருட்களை இங்கே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.  விலையும் ஓரளவிற்கு குறைவே.  அவர்கள் சொல்லும் விலையிலிருந்து பேரம் பேசி வாங்குவது உங்கள் திறமை.  பொதுவாகவே பேரம் பேசுவதில் ஒரு சிலருக்கு மட்டுமே பாண்டித்வம் இருக்கிறது - குறிப்பாக பெண்களுக்கு! பலரால் பேரம் பேச முடிவதில்லை - என்னையும் சேர்த்து.  ஆனாலும் இங்கே சில இடங்களில் பேரம் பேசி சில பொருட்களை வாங்கி வந்தேன்.  அந்த Bபஞ்ஜாரா மார்க்கெட் பகுதியில் எடுத்த சில படங்களை உங்கள் பார்வைக்கு இங்கே தருகிறேன். 






































*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

13 ஃபிப்ரவரி 2025


15 கருத்துகள்:

  1. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பஞ்ஜாரா என்றதும் எனக்கு தரம்வீர் பாடல் நினைவுக்கு வந்து விட்டது!

    கைவினைப்பொருட்கள், படங்கள் அழகு. நீங்கள் என்ன வாங்கினீர்கள் என்று சொல்லவில்லையே...

    சின்ன சைசில் மூடியுடன் ஊறுகாய் ஜாடி போல இருக்கும் ஜாடிகள்? கோப்பைகள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஞ்ஜாரா குறித்த சில ஹிந்தி சினிமா பாடல்கள் எனக்கும் நினைவுக்கு வந்தன ஸ்ரீராம்.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நான் வாங்கியவை கடைசி மூன்று படங்களில் இருக்கின்றன. ஊறுகாய் ஜாடிகள், தேநீர் கோப்பைகள் ஆகியவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. ஆனா இங்க எல்லாம் குருத்வாரா போய் லங்கர் சாப்பிட்டு வீடு திரும்பும் பெண்களுக்கு எதுக்கு இலவசம்?" என்று கேட்டு சிரித்தார் ஒரு நடத்துனரிடம். //

    சரியான கேள்வி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கேள்வியாகவே எனக்கும் தோன்றியது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பீங்கான் பொருட்கள் எல்லாம் கவர்கின்றன. எனக்குப் பீங்கான், கண்ணாடிப் பொருட்கள் குறிப்பாக அடுக்களையில் பயன்படுத்துபவை ரொம்பப் பிடிக்கும். அவற்றின் மீது தனிக்காதல் உண்டு எனக்கு!!!!! அந்த டிசைன் போட்ட விளிம்பில்லாத டீ கப்புகள் ரொம்ப அழகா இருக்கு எல்லாமே.

    Bபாஞ்சரா market நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பீங்கானில் நிறையவே பொருட்கள் இங்கே கிடைக்கின்றன. தில்லி வரும் சமயம் முடிந்தால் பாருங்கள். குட்காவ்ன் பகுதியிலும் இப்படி ஒரு பஞ்ஜாரா மார்க்கெட் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இலைகளை கொண்டு வாழ்க்கையை சுட்டிக்காட்டியது அருமை.

    நகர்வலத்தில், கண்ட இடங்கள்,அனைவரிடமும் பேசிய பேச்சுக்கள் அத்தனையும் சுவாரஸ்யமாக இருக்கிறது அவரவர் பிரச்சனை அவரவருக்கு.. . அது நியாந்தானே...!

    பீங்கான் பொருட்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. கண்களை கவர்கிறது. எனக்கு பேரம் பேசி வாங்கத் தெரியாது. கேட்பதை கொடுத்து விடுவேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இவ்வளவுதான் வாழ்க்கை படம் நன்றாக இருக்கிறது. வாழ்க்கை தத்துவத்தை சொல்கிறது.
    நகர் வலம் அருமை. Bபஞ்ஜாரா மார்க்கெட் பீங்கான் சாமான்கள் படம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பிள்ளையார் செலக்சன் நண்பருக்காக பிள்ளையார் சிலை ஏதாவது வாங்கினீர்களா?

    எல்லாம் அழகாக உள்ளன.
    .ஜாடிகள், வண்டிலுடன் கப்ஸ் எனக்கு பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....