ஞாயிறு, 2 மார்ச், 2025

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி இரண்டு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு 

பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது 

பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று 


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



உன்னோட பேசிக்கிட்டிருந்தா உலகமே மறந்துடுது கிருஷ்ணா.


Thanks. ஆனா பசிக்குதே இந்த அரிசியைக் கொண்டுபோய் நாமதான் dinner செய்யணும் கிளம்பு ராதா.


*******



அம்மா நேத்தும் இதே கதையத்தான் சொன்ன.நாளைக்கு புது கதை யோசிச்சு சொல்லு. என்ன இப்ப தொட்டில்ல போடு. தூக்கம் வருது.


*******



எந்த பலத்துல மயில்பீலி உன் தலையில் நிக்குது கிருஷ்ணா?


அத அப்புறம் சொல்றேன் கையை சுட்டுடுச்சு, முதல்ல விளக்கை கீழே வரிசைல வை.


*******



நான் இந்த மோரைக் குடிக்கற வரைக்கும் flute ஐ சும்மா வெச்சுக்கத்தான் சொன்னேன் ராதா.


தெரியும் கிருஷ்ணா. நீ வாசிக்கும்போது மட்டும் இசை உருகி ஓடுதே அப்படி என்ன இருக்குன்னு பாத்தேன்.



*******



அம்மா உன் வாகனத்தை ஓவரா புகழாத, அண்டைய விட்டு அகல மாட்டேங்குது. முதல்ல சிங்கமாமாவுக்கு நல்ல paste ம் brush ம் வாங்கணும்.


*******



ஆஹா இனி ஒரு வாரத்துக்கு கவலையில்லை. அம்மா கொஞ்சம் தாராளமா சுக்கு, ஜீரகம் போட்டு கஷாயம் மட்டும் பண்ணி வெச்சுடு.


*******



நாவல் பழம் சூப்பர் பாட்டி. ஆனா இந்த காலா ஜாமூன்னு ஒண்ணு பண்ணுவாங்களே அது உங்களுக்கு தெரியாதோ?


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

2 மார்ச் 2025


6 கருத்துகள்:

  1. படங்களைவிட, வரிகளை ரசித்தேன். அழகிய கற்பனைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் சிறந்த கற்பனையும், அழகான படங்களுக்கு ஏற்றபடியான அவர்களது வாசகத்தையும் படித்து ரசித்தேன்.

    சிங்க மாமாவுக்கு டூத் பேஸ்ட் வாசகமும், குட்டிக் கிருஷ்ணனுக்கு நிறைய வெண்ணெய் கிடைத்த சந்தோஷ படமும், குழந்தை கிருஷ்ணர் சொல்லும் வாசகமும் மனதை கவர்ந்தது. சகோதரிக்கு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. பொருத்தமான வசனங்கள் ரசிக்க வைத்தது.

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. ரசித்தமைக்கு நன்றிகள் பல தோழர்களே.
    விஜி

    பதிலளிநீக்கு
  5. எல்லா படங்களும் பொருத்தமான வாசகமும் அருமை.

    //ஆஹா இனி ஒரு வாரத்துக்கு கவலையில்லை. அம்மா கொஞ்சம் தாராளமா சுக்கு, ஜீரகம் போட்டு கஷாயம் மட்டும் பண்ணி வெச்சுடு.//

    இது மிகவும் கவர்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  6. வரிகளை வாசித்துச்சிரித்துவிட்டேன். அத்தனையும் அருமை!!!! செம கற்பனைபா!!!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....