அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
தலைநகர் தில்லியில் ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்வு - ”காரிகர் காதா (Kharigar Gaathaa) - ஷில்ப் கி விராசத்” எனும் நிகழ்வு. அந்த நிகழ்வில் எடுத்த சில படங்களை உங்களுடன் இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளில் பகிர்ந்து கொண்டது உங்களுக்கும் நினைவில் இருக்கலாம். இது வரை வெளியிட்ட பதிவுகளை பார்த்திருக்கவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம்.
நிகழ்வுக்குச் சென்ற போது எடுத்த மேலும் சில படங்கள் மற்றும் காணொளிகள் இன்றைய பதிவாக - இத்தொடரின் நிறைவுப் பகுதியாக - உங்கள் பார்வைக்கு.
நூல் கொண்டு இப்படியும் ஆடைகள் தயாரிக்கலாம்…
லக்னோ பகுதியில் உபயோகித்த ஷராரா எனும் உடை மாதிரி…
பயணத்திற்குப் பயன்பட்ட வண்டி ஒன்று…
பயணத்திற்குப் பயன்பட்ட மற்றுமொரு வண்டி…
திறந்தவெளி அரங்குகளில் அலங்காரங்கள்…
மரத்தில் நிகழ்வு குறித்த பதாகை….
நடனக்காட்சி ஒன்று படமாக…
நடனக்காட்சி ஒன்று காணொளியாக…
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சோஹ்ராய் ஓவியங்கள் சில…
இந்த சோஹ்ராய் ஓவியங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் பிரபலமானவை. இந்த ஓவியரிடம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன். பொதுவாக இவர்களது ஓவியங்களில் பறவைகள் மற்றும் விலங்குகளே வரைபொருளாக இருக்கும் என்கிறார் அவர். அதைப் போல எல்லா ஓவியங்களும் மூன்று கோடுகள் கொண்டு முடியும் என்கிறார். அதற்குக் காரணமாக சொல்வது முதல் கோடு இயற்கையை வழிபடும் விதமாகவும் இரண்டாம் கோடு இறைவனை வழிபடும் விதமாகவும், மூன்றாவது கோடு அப்படி வழிபடுவதால் கிடைக்கும் நல்ல எண்ணங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கிறது என்கிறார். அவரிடம் பேசியதில் இப்படி சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு மனிதரிடமும் பேசும்போது நாம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இவருடனான சம்பாஷணை எனக்கும் மீண்டும் உணர்த்தியது.
பீஹார் மாநிலத்தின் சிக்கி க்ராஃப்ட் - ஒரு வித புல் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள்…
கணேஷா சிலையொன்று…
சதீஸ்கட் மாநிலத்தின் பாரம்பரிய வீட்டின் மாதிரி…
இராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய இசை - காணொளியாக….
(Headphone பயன்படுத்த வேண்டியிருக்கலாம்!)
இன்றைய பதிவில் பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும் படங்கள் வரும் பகுதிகளில் தருகிறேன். தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
4 மார்ச் 2025
சோஹ்ராய் ஓவியங்கள் + ஓவியருடன் உரையாடல் புதிய தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.
நீக்குபடங்களும், படங்களில் உள்ள பொருள்களும் அருமை. காணொளிகள் ரசனை.
பதிலளிநீக்குகோட்டோவியம் மகள் வரைந்ததா? இயல்பாக உள்ளது.
பதிலளிநீக்குபாட்டி பேத்திக்குச் சொல்லும் அறிவுரை ஆஹா!!!
பதிலளிநீக்குஉடைகள் படங்கள் ஓவியங்கள் படங்கள் எல்லாமே அருமை. புல் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் செம. எவ்வளவு கற்பனை, கைத்திறன்!
கீதா
ஒவ்வொரு மனிதரிடமும் பேசும்போது நாம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதை இவருடனான சம்பாஷணை எனக்கும் மீண்டும் உணர்த்தியது. //
பதிலளிநீக்குஅதே ஜி! அப்படியே டிட்டோ செய்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் இது!
ஜார்கண்ட் ஓவியர் சொன்ன விஷயம் அற்புதம் மூன்று கோட்டில் இருக்கும் விஷயங்கள். புதிய விஷயம் தகவல்.
ஓவியங்களும் செமையா இருக்கு.
கீதா
கீதா
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சோஹ்ராய் ஓவியங்கள் - பெயரும் தெரிந்து கொண்டேன் ஜி.
பதிலளிநீக்குஇதில் யானை, ஆமை போன்று வரையப்பட்டவை ரொம்ப அழகா இருக்கு.
முதல் நடனக்காட்சி காணொளியில், அந்தக் கலைஞர்கள் செய்வன பிரமிக்க வைத்தது. படுத்துக் கொண்டு அது ஒரு யோகாசனா கடினமான ஒன்று அதில் கால்களில் மற்றொரு கலைஞர் நிற்பதும், இருவர் உடம்பில் நிற்பதும்..படுத்திருப்பவர் நகர்வதும் என்று இதற்கு எல்லாம் எவ்வளவு சக்தி வேண்டும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்று ஒரு கலை அதுவும் பழம்பெரும் கலை ஒன்று இருப்பது சிறப்பிக்க வேண்டிய ஒன்று.
ரசித்துப் பார்த்தேன் ஜி
கீதா
இராஜஸ்தானின் பாரம்பரிய பாட்டு ரொம்ப ரசித்தேன் நல்லா பாடுறார். இதே மெட்டில் ஹிந்திப்பாடல், தமிழ்ப்பாடல் இருக்கிறது என்று தோன்றுகிறது என்ன பாட்டு என்று சொல்லத் தெரியவில்லை. மோஹன ராகம் பேஸ்....தமிழ்ப்பாடல் வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் என்பதை நினைவூட்டியது.....அந்தப் பாடல் ராஜஸ்தான் பகுதியில் தான் ஷூட் செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். இக்கருவி வாசிப்பில் தொடங்கும் அந்தப் பாடல். இந்தக் கருவி ராவண்ஹதா என்று நினைக்கிறேன். ராவணன் இசைத்த வீணை என்ற பொருளில் ஒரு வடிவம் என்பதால் ஆனால் எனக்குத் தோன்றும் வீணையும் வயலினும் சேர்ந்த ஒன்றோ என்று.
பதிலளிநீக்குஒரு பஜனைப்பாடலும் நினைவுக்கு வருகிறது,
ரொம்ப ரசித்தேன் ஜி
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பாட்டி பேத்திக்குத் தரும் அன்பான அறிவுரை அருமை.
சிலைகள், ஓவியங்கள், நூல் கொண்டு தயாரிக்கப்பட்ட உடைகள் என அனைத்தும் அற்புதமாக இருக்கிறது. திறந்தவெளி அரங்கின் அலங்காரங்கள் மிக நன்றாக உள்ளது.
காணொளிகள் அனைத்தும் அருமை. அவரவர் நாட்டின் பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளான பாடல்கள், வாத்தியங்கள், நடனமாடும் முறை என அத்தனையும் சிறப்பாக உள்ளது. நடனமாடும் போது அவர்கள் உடல்களை வளைத்து, ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று கொண்டு வாத்தியத்தை இசைத்துக் கொண்டே, நடனமாடுவது என்பது கடினம்தான். ரசித்துப் பார்த்தேன்.
அதுபோல் சோஹ்ராய் ஓவியங்கள் அனைத்தும் கண்களை கவர்கின்றன. புல் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருள்கள் நன்றாக உள்ளது. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாசகம் அருமை பாட்டி, பேத்தி படம் அருமை.
பதிலளிநீக்குப்டங்கள் எல்லாம் அருமை.
நடன நிகழச்சி மிக அருமை. இரண்டு சங்குகளை வாயில் வைத்து ஒலி எழுப்பிக் கொண்டு சர்க்கஸ் போல சாகஸம் செய்வது வியப்பு. எத்தனை விதமாக ஏறுகிறார்கள் ஒருவர் மேல் இருவர் நிற்க அவர் படுத்துக் கொண்டு நகர்ந்து போவது மிக வியப்பு. எல்லாமே வயிற்றுக்குதான். பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். ஒருவர் காசு போட்டார்.
இராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய இசையும் நன்றாக இருந்தன.
படங்களும் காணொளிகளும் அருமை
பதிலளிநீக்குசோஹ்ராய் ஓவியங்கள் நன்றாக உள்ளன.அவை பற்றிய விளக்கமும் தந்தது நன்று.
பதிலளிநீக்குபுல் ஆல் தயாரான கூடை அழகு.
காணொளி கண்டோம் அருமை.