அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஆடிமாத அம்பாள் தரிசனம், சாரதாம்பாள் கோவில், கோவை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
பகுதி இருபத்தி ஒன்பது பகுதி முப்பது பகுதி முப்பத்தி ஒன்று
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்...
Thanks கிருஷ்ணா உனக்குத்தான் என் மேல் எவ்வளவு பிரியம்!
ஆமாம் ராதா. ஆனா நான் இந்த பாட்டை சூப்பர்சிங்கருக்கு பாடலாம்னு இருக்கேன்னு சொல்ல வந்தேன்... சரியா பாடறேனான்னு பாரு...
ஆனாலும் உனக்கு .... ஜாஸ்தி கிருஷ்ணா.
*******
அரவ நண்பா கொஞ்சம் நெளியாம, அரவம் செய்யாம இருந்தாத்தான் நான் தியானம் செய்ய முடியும். சும்மா இரு இல்ல இடத்த காலி பண்ணு கொஞ்ச நேரம்.
*******
அம்மா, எதிர்வீட்டு மாமி வீட்டு வெண்ணெய் பானைல தவறுதலா என் கை பட்டுடுச்சு. தொரத்திக்கிட்டு வரா. காப்பாத்து..
அதென்ன கிருஷ்ணா எப்பவுமே தவறுதலாத்தான் உன் கை படுது?
அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வந்து தூக்கிகிட்டு போ என்னை…
*******
கன்னுக்குட்டி செல்லம் உனக்கு சந்தனத்துக்கு பதிலா குங்குமத்துல பொட்டு வெச்சிருந்தா நல்லா எடுப்பாத்தான் இருந்திருக்கும். அடுத்த தடவ அப்படி வெச்சு ஃபோட்டோ எடுத்துக்கலாம். இப்ப கேமராவை நேரா பாரு செல்லம்...
*******
நீ வாசி கிருஷ்ணா நான் கண்ண மூடிக்கிட்டு ரசிக்கிறேன்...
சரி ராதா, குறட்டை விடாம ரசி, வாசிக்கறத disturb பண்ணாம....
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
எதுக்குமா இப்போ எனக்கு சால்வை?
புது necklace, பிறர் கண்ணு பட வேண்டாம்னுதான் கிருஷ்ணா...
போத்தி விடறதுக்கு அத போட்டு விடாமயே இருந்திருக்கலாம்,
ஹும்...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
அழகான வழவழப்பான கன்னம்மா உனக்கு...
உம்ம்ம்மா😘
இல்லாட்டாலும் லஸ்ஸி கண்டிப்பா உனக்கு உண்டு கிருஷ்ணா...
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
24 ஆகஸ்ட் 2025
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. முயற்சிக்கவும் "அவன்" துணை கண்டிப்பாக வேண்டும்.
இன்றைய படங்கள் அனைத்தும் கண்களை கவரும் வண்ணம் நன்றாக உள்ளது. குட்டிக் கிருஷ்ணா ஓடி வரும் அழகே அருமை. படங்களுக்கேற்ற வாசகங்களும் மிக அருமையாக உள்ளது.
கடைசி படம் "கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள் வெறி கொள்ளுதடி" என்ற பாரதியின் பாடலை நினைவுபடுத்தியது. ஐஸ் வைக்கும் வரிகளுடன் கண்ணனின் அழகான படத்தை ரசித்தேன். "என்ன தவம் செய்தனை யசோதா..!"
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
படங்களையும் வரிகளையும் ரசித்தேன். சூப்பர் சிங்கர் வரி டாப். அதற்கு என் வரிகள் :
பதிலளிநீக்கு"ஸ்னேகா மாதிரி அபப்டி சிரிக்காதே ராதா... "
"தேங்க்ஸ் கண்ணா.. அழகா இருக்கா?"
"அது அவங்களுக்கு அழகா இருக்கும். நீ உன் பாணியிலேயே சிரி!"
Super.
நீக்குவிஜி.
வாசகம் சூப்பர்.
பதிலளிநீக்குமுடிவை நினைத்துவிட்டால் நாம் செய்யும் முயற்சிகளில் படபடப்பு வந்துவிடும். தடங்கல் கூட ஏற்படும் சரியாகச் செய்ய முடியாமலும் போகும். பலனை எதிர்பாராமல் செய்யும் எதுவுமே எல்லா நலத்திற்கும் நல்லது!!
கீதா
முதல் படத்திற்கான வரி, கன்னாபின்னானு சிரித்து ரசித்தேன்!!!!! செம.
பதிலளிநீக்குஎல்லா வரிகளும் படங்களும் வழக்கம் போல ரசித்தேன்.
"அம்மா சால்வை எல்லாம் போத்தினா கஷ்டம்னு நினைச்சேன்...இல்லை இல்லை போர்த்தி விடு. வெண்ணை திருட சௌகரியமா இருக்கும"
பக்கத்துவீட்டு மாமி இன்னிக்கு அம்மாகிட்ட சொல்லிண்டிருந்தாங்களே இன்னிக்கு வெண்ணை நிறைய கிடைச்சுதுன்னு... அந்த மாமி வீட்டுக்குப் போறதுக்குள்ள கொஞ்சம் ஆட்டைய போட்டிடலாம்!
கடைசிப் படம் - கூடக் கொஞ்சம் வெண்ணைக்கு ஐஸ் வைக்கறியா இல்லை? இன்னிக்கு நீ திருடிச் சாப்பிட்டதை நான் கண்டுக்காம விட்டதுக்கு இந்த முத்தமா செல்ல கள்ளப் பயலே!
கீதா