அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினாறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி வெங்கடேஷ் அவர்கள் தங்கியிருக்கும் வளாகத்தில் அவ்வப்போது சத்சங்க நிகழ்வுகள் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்களாம். அந்த நிகழ்வுகளில் விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய, பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இங்கேயும் உங்கள் பார்வைக்கு. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே! ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
பிறந்த நாள் வாழ்த்து - 14.04.2025
தமிழ் புது வருடம் இன்று ஆரம்பம்;
Verdant சத்சங்கம் இனிய ஆரம்பம்;
தாரக நாமத்தில் லயிக்க வைத்தது (Smt)லதா;
(Smt)பார்வதி, கௌசல்யாவாக செப்பியது ராம கதா;
(Smt)ஜெயஶ்ரீ மூலம் உளம் புகுந்தது கீதா;
(Smt)கிரிஜாவின் ராமச்சந்திரா செவியில் ரீங்காரம் சதா;
கௌசல்யா கரங்களில் தவழ்ந்தான் ராமன்;
கேட்போர் மனங்களிலும் நிறைந்தான் ராமன்;
ராம கோஷத்தால் அனுமன் சிலிர்த்தான் ;
உடன் கரம்குவித்து முன்னே அமர்ந்தான்;
கண்ணீர் உகுத்து மெய் கரைந்தான்;
நம் பாபம் யாவையும் அதில் கரைத்தான்;
சரணாகதி செய்வாய் - கீதை மொழி;
நாம் கடைத்தேற வேறு என்ன வழி?
மனம் முழுக்க நாம மணம்;
பிரியாது அதை இனி ஒரு கணம்!
தொடரட்டும் நாம வேள்வி எஞ்ஞான்றும்!
பரவட்டும் நல்லதிர்வு(கள்) எவ்விடமும்!
நன்றிகள் பல்லாயிரம் உண்டு🙏🏻🙏🏻
வாழிய அடியார்கள் பல்லாண்டு!
🌹🌹🌹
அடியார்க்கும் அடியேன்,
விஜி வெங்கடேஷ்.
14.04.2025.
*****
Verdant சத்சங்கம் - 24.04.2025
கீதையின் ஸ்லோகம் மெல்லென விரிய;
காதை அது மயிலிறகால் வருட;
பாதை எதுவென பளிச்செனத் தெரிய;
போதையும்(அறியாமை எனும் மயக்கம்) தெளியும் உன்னதம் புரிய;
சிறு சிறு கதைகள் மனதைக் கவர;
சகாதேவன் ஸ்படிக மாலை அணிந்திருக்க;
அது பீஷ்மரின் வாய்மொழியை(விஷ்ணு சஹஸ்ரநாமம்) அதில் பதித்துக் கொள்ள;
குசேலர் ஏழ்மையை ஏற்றது மனதை நெகிழ்க்க;
அபிராமி அந்தாதி பிறந்த கதை கூறக் கூற;
கூறுவோர் வாக்கில் அவள் புகுந்துவிட;
கண்கள் கலங்கி கண்ணீரால் நிரம்ப;
குஞ்சுக் காலில் சதங்கையோடு எங்கள் மடியில் அவள் தவிழ;
செம்பவள வாயில் சிறு விரல் அளைய;
கருநீலக் கண்கள் இங்குமங்கும் அலைய;
முத்தமிட்டு முத்தமிட்டு பட்டுக் கன்னங்கள் சிவப்பேற;
ஐந்து பாட்டோடு அவளைப் பிரிய முடியாமல் தவிக்க;
இரண்டாம் சத்சங்கம் இனிதே நடந்ததே👌🏻👌🏻👌🏻
*****
Verdant சத்சங்கம் - 24.04.2025
கீதையின் ஸ்லோகம் மெல்லென விரிய;
காதை அது மயிலிறகால் வருட;
பாதை எதுவென பளிச்செனத் தெரிய;
போதையும்(அறியாமை எனும் மயக்கம்) தெளியும் உன்னதம் புரிய;
சிறு சிறு கதைகள் மனதைக் கவர;
சகாதேவன் ஸ்படிக மாலை அணிந்திருக்க;
அது பீஷ்மரின் வாய்மொழியை(விஷ்ணு சஹஸ்ரநாமம்) அதில் பதித்துக் கொள்ள;
குசேலர் ஏழ்மையை ஏற்றது மனதை நெகிழ்க்க;
அபிராமி அந்தாதி பிறந்த கதை கூறக் கூற;
கூறுவோர் வாக்கில் அவள் புகுந்துவிட;
கண்கள் கலங்கி கண்ணீரால் நிரம்ப;
குஞ்சுக் காலில் சதங்கையோடு எங்கள் மடியில் அவள் தவிழ;
செம்பவள வாயில் சிறு விரல் அளைய;
கருநீலக் கண்கள் இங்குமங்கும் அலைய;
முத்தமிட்டு முத்தமிட்டு பட்டுக் கன்னங்கள் சிவப்பேற;
ஐந்து பாட்டோடு அவளைப் பிரிய முடியாமல் தவிக்க;
இரண்டாம் சத்சங்கம் இனிதே நடந்ததே👌🏻👌🏻👌🏻
*******
இன்றைய பதிவு உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
6 ஆகஸ்ட் 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....