அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
பகுதி இருபத்தி ஏழு பகுதி இருபத்தி எட்டு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
நதிக்கு மேல ஊஞ்சல் இப்போதான் பாக்கறேன் நாதா. பிடிப்ப உட்டுடாதீங்க please.
பிடிப்பெல்லாம் போகனும்னுதான் எல்லோரும் என்கிட்ட வராங்க தேவி.
அது ஊர்ல. நான் இப்ப ஊஞ்சல்ல.
*******
எவ்ளோ நேரமாச்சு, இந்த ராதாவ இன்னும் காணோம். வர வழில ஃப்ரெண்ட்ஸ் அப் பாத்திருப்பா. டிவி சீரியல் கதை ஓடிக்கிட்டிருக்கும். சரி. ஒரு குட்டித் தூக்கம் போடலாம்.
*******
என்ன இப்படி குறு குறு ன்னு பாக்காத பாரு. எனக்கு flow வா சொல்ல முடியல. மறந்துடுது.
ஆமாமா, அதுல எத்தனை உட்டான்சோ, பாவம்.. இல்ல நாதா?
*******
மின்னல் பயங்கரமா வெட்டுது உள்ள வந்து தியானம் பண்ணுங்க நாதா.
கவலப் படாத தேவி, பின் பக்கம் மின்னல்லேர்ந்து மின்சாரம் எடுக்க device வெச்சிருக்கேன். electricity செலவு மிச்சம். ok?
*******
மார்க்கெட் ல வாசனப் பூ தான் தேடினேன் நாதா. சிவராத்திரிக்கு எல்லோரும் வாங்கிட்டு போய்ட்டாங்க. இந்த துலுக்க ஜெவந்தி தான் கெடச்சுது. sorry.
பரவாயில்ல பாரு, எல்லாம் எனக்கு வந்து சேந்துடுச்சு. relax.
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
தண்ணில உக்காந்துகிட்டு ஏன் தியானம் பண்றீங்க நாதா? இதோ, ஆசனம் கொண்டு வரேன்.
பவர் கட் ஆகி நானே வேர்த்து கொட்டி தெப்பமா உக்காந்திருக்கேன், நீ வேற ஆசனம் பாசனம்னு! சட்டுனு battery hand fan கொண்டா தேவி.
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
ப்ரயாக்ராஜ் மஹா கும்பமேளா இன்னிக்கி சிவராத்திரியோட முடியுதே நான் முழுக்கு போடணும், உள்ள ஆழமில்லாம வழுக்காம இருக்கான்னு பாக்கச் சொன்னா அங்கேயே settle ஆயிட்டீங்களே நாதா.
கண்ணை மூடிக்கிட்டு அங்கயே இருந்தா எப்படி தேவி? இங்க வா, கையப் பிடி, ஒரே முங்கு - பயம், குளிர்… its gone!
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
10 ஆகஸ்ட் 2025
படங்களும், வரிகளும் வழக்கம்போல சுவாரஸ்யமான கற்பனை.
பதிலளிநீக்கு