அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது பகுதி பத்து
பகுதி பதினொன்று பகுதி பன்னிரண்டு பகுதி பதிமூன்று
பகுதி பதினான்கு பகுதி பதினைந்து பகுதி பதினாறு
பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது
பகுதி இருபது பகுதி இருபத்தி ஒன்று பகுதி இருபத்தி இரண்டு
பகுதி இருபத்தி மூன்று பகுதி இருபத்தி நான்கு
பகுதி இருபத்தி ஐந்து பகுதி இருபத்தி ஆறு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
கிருஷ்ணா தூங்கு தாலாட்டு பாடறேன்.
பாடாத.தூக்கம் போயிடுது.சும்மா தட்டு.நானே தூங்கிக்கிறேன்.மயில் பீலியை மட்டும் எடுத்துடு உறுத்துது.
*******
இதுமாதிரி நான் அடிக்கடி joke சொல்றேன், நீ சிரி. அப்பத்தான் பயமில்லாமல் இருக்கு நரசிம்மா.
இன்னிக்கி புதனும் சுவாதியும் சேர்ந்திருக்கு. அதனால ஸ்பெஷல் ஆ என்னை சந்தோஷப் படுத்தறியா பிரஹ்லாதா? பேஷ் பேஷ்.
*******
அம்மா நான் இப்பிடியே தாச்சிக்கறேன் தொட்டில் வேண்டாம்.
சரிதான், நானும் தூங்கணும் கிருஷ்ணா, படுத்தாத. தூங்கு இப்போ சமத்தா.
*******
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்...
அம்மா, சுத்தி இருக்கற எல்லா மலைலயும் எதிரோலிக்குது. சீக்கிரம் வா.
*******
*******
கைய வெச்சுண்டு ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டியான்னு கேட்டியேம்மா ஒரு நிமிஷம் ஆயிடுத்து check பண்ணிக்கோ
*******
Bed நான் பிறந்தபோது வாங்கினது. இப்ப எப்படி போறும்? சரி, இப்படி படுத்துப் பாக்கலாம் இன்னிக்கி..
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
27 ஜூலை 2025
- முதல் படம்... அன்னை மடியில் கண்ணன் உறங்கவும் அந்தப் படம்... வரிகளை மீறி வசீகரிக்கிறது.
பதிலளிநீக்கு- நல்லவேளை சீறிவரும் சிங்கத்தைக் கூட நம்பலாம், சிரித்து வரும் பெண்ணை நம்பக் கூடாதுன்னு தான் ஆட்டோபின்னால எழுதி வச்சிருப்பாங்க... படிச்சிருக்கேன். சிரித்து வரும் சிங்கத்தை நம்பக்கூடாதுன்னு எழுதலை!!
- அன்னை மார்பில் கண்ணன் உறங்கும் படம்..."கண்ணா நீ தூங்கடா பாடல் நினைவுக்கு வருகிறது.
- கண்ட இடத்துல வேலை சொருகி வைக்காதேன்னு சொல்லியிருக்கேன் இல்லை முருகா? எசகுபிசகா குத்திடப்போகுது மதுரைக்காரங்களைப் பார்த்துமா கத்துக்கலை? இது மாதிரி "பொருள்"களை முதுகுக்குப் பின்னால் வைக்கணும்!
- பதிவைப் படித்து தூக்கம் தூக்கமா வருது.. நானும் பார்க்கிறேன், சமாளிக்க முடியலை..
அதென்ன கண்ணன் தூங்கும் படங்களா அணிவகுத்துருக்கு இன்னிக்கு?!!!
படங்கள் அத்தனையும் சூப்பர்...அதுவும் அந்த நீலக்கலரும், மலைமீது முருகனும் ஆஹா! அதற்கான வரிகளும் வழக்கம் போல ரசித்தேன்,
பதிலளிநீக்குகீதா