வியாழன், 24 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


உதகை படகு இல்லம்








சென்ற பகுதியில் நாங்கள் பொட்டானிக்கல் கார்டனில் எடுத்துக் கொண்ட சிறப்பு மிக்க புகைப்படம் பற்றிய கதைகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்! உண்மையிலேயே சிறப்பான தருணம் அது என்பேன்! எதேச்சையாக அமைந்த தருணம்! அங்கேயே இன்னும் சில இடங்களும் பார்க்க வேண்டியிருந்தது!


திகட்டத் திகட்ட கார்டனில் உள்ள அழகினை ரசித்த பின் நாங்கள் மூவரும் வெளியே வந்தோம்! மதியமாகி விட்டது! மூன்று மணிநேரம் எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை! நல்லதொரு பொழுதுபோக்காக அமைந்தது! நண்பர் மோகனுக்கு கால் செய்து சொன்னோம்! அவர் வருவதற்குள் வெளியே இருந்த கடைகளில் உள்ள பழங்கள், மலர்கள் என்று பார்வையிட்டுக் கொண்டிருந்தோம்!


YouTube உபயத்தால் இங்கே வைக்கப்பட்டிருந்த பழங்களின் பெயர்கள் நினைவில் இருந்தது! அவற்றை காண்பித்து என்னவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்! இது star fruit! சின்ன வயசுல சாப்பிட்டதா நினைவு இருக்கு! இது ரம்புட்டான், இதுக்கு பேரு மங்குஸ்தான்! இது தான் தெரியுமே strawberry! நாம ரிஷிகேஷில் freshஆ வாங்கி சாப்பிட்டோமே ஞாபகம் இருக்கா! அப்புறம் இது ப்ளம்ஸ்! கோவைல இருந்தவரை ஊட்டில இருந்து ப்ளம்ஸ் வரும்! நிறைய சாப்பிட்டுருக்கேன்!


கண்ணா! இந்த மஞ்சள் நிறப் பூ இருக்கே! இதை தண்ணில போட்டு வெச்சா அப்படியே இருக்கும்னு சொல்லுவாங்க! ஊட்டில இருந்து யாராவது வரும் போது கொண்டு வருவாங்க! என்று நினைவில் இருக்கும் சில விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது நண்பர் மோகன் தன் காரில் அங்கே வந்துவிட்டார்! அடுத்து என்ன! மதிய உணவு தான்! எனக்காக vegetarian restaurant என்று கேட்டதில் மெயின் ஏரியாவிலேயே A2B இருந்தது! நல்லவேளை! அவரை அதிகம் தேட வைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டேன்! எங்கு சென்றாலும் எனக்கு இது ஒரு பிரச்சினை…:)


மகளும் நானும் அங்கே சப்பாத்தி குருமா சாப்பிட என்னவர் மினி மீல்ஸ் சாப்பிட்டார்! நண்பர் மோகன் அப்போது தான் பர்கர் சாப்பிட்டதாகவும் அதனால் காஃபி போதும் என்று குடித்தார்! மீண்டும் கோத்தகிரிக்குச் செல்ல நேரம் இருக்கே! பயணம் இப்போது அல்ல  என்பதால் வயிற்றில் கொஞ்சம் இடம் கொடுத்து தைரியத்துடன் தயிர்சாதமும் வாங்கி சுவைத்தேன்…:) அருமையாகவே இருந்தது!


அடுத்து நாங்கள் சென்ற இடம் உதகை படகு இல்லம்! அங்கேயும் நண்பர் மோகன் எங்களை இறக்கி விட்டுவிட்டு தன் பணியைத் தொடர கிளம்பி விட்டார்! நல்லா டைம் எடுத்து பொறுமையா சுத்துங்க சார்! நிறைய activities இங்க இருக்கு! எல்லாம் முடிச்சிட்டு சாயந்திரம் 5:30 மணிக்கு நாம ஸ்டேஷன்ல இருந்தா போதும்! என்று சொல்லி விட்டுச் சென்றார்! ஸ்டேஷன் எதுக்கு?? இங்கே நாங்கள் எங்கள் நேரத்தை எப்படிச் செலவிட்டோம்?? சொல்றேன்..🙂


பஞ்சாபி குடும்பம்:



நாங்கள் உதகை படகு இல்லத்துக்கு வந்து சேர்ந்த போது மழையும் சாரலாக எங்களுடன் பின் தொடர்ந்தது! இங்கு நுழைவுக் கட்டணத்தை செலுத்திய பின்னர் உள்ளே சென்று படகு சவாரி செய்வதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒரு இடம் இருந்தது!


இந்த இடத்துக்கும் ஒரு பின்புலக் கதை உண்டு! ஃப்ளாஷ் பேக்கில் சென்றால் பொட்டானிக்கல் கார்டனுக்கு நாத்தனாரின் குழந்தைகளுடன் சென்றோம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா! அன்று மாலை தனியே என்னுடன் படகில் சவாரி செய்யலாம் என்று அழைத்து வந்திருந்தார் என்னவர்! ஆனால்! எத்தனையோ எடுத்து சொல்லியும் படகில் பயணிக்க நான் வரலை என்று சொல்லிவிட்டேன்…:) பயம்!! அதுவரை எந்தப் படகிலும் பயணித்ததில்லையே!! என்ன செய்ய..🙂 


அவரும் என்னை compel பண்ணலை! சரி! பரவாயில்ல! பயப்படாத! இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிண்டிருக்கலாம் என்று சொன்னார்! இருவரும் ஏரியின் எதிரே இருந்த படிகளில் அப்போது அமர்ந்திருந்தோம்…:) அதுவும் ஒரு சரித்திரத்தில் இடம் பெற்ற இடமல்லவா…:) மகளிடம் சொல்லி அங்கு அமர்ந்தும் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்! ஆனால்! இம்முறை அங்கு நான் போட்டிங் செய்யப் போகிறேன்…:)


Pedal boatல் என்னால் பெடல் செய்வது கடினம் என்பதால் வேண்டாம் நாம Motor boatல் போவோம் என்றார் என்னவர்! 6 பேர் செல்லக்கூடிய படகு அல்லது 8 பேர் 10 பேர் செல்லக்கூடிய படகுகள் தான் இருந்தன! நாங்கள் 6 பேர் செல்லக்கூடிய படகினை தேர்ந்தெடுக்கலாம் என்கிற போது அங்கே ஒரு அப்பாவும் ஐந்தாறு வயதுடைய மகளும் யாருடனாவது ஷேர் செய்து கொள்ளலாம் என நினைத்து நின்று கொண்டிருந்தார்கள்!


என்னவரும் அவர்களை எங்களுடன் பயணிக்க சம்மதிக்க எல்லோருமாக எங்கள் படகுக்கு காத்திருந்தோம்! அவர்கள் பஞ்சாபின் ஜலந்தரிலிருந்து விடுமுறையில் இங்கே வந்திருக்கிறார்களாம்!


Teri naam kya hai? என்று நான் அவளின் பெயரைக் கேட்டதும்… Pihu என்றாள்! உடனே எங்களிடம் Aaj meri birthday! என்று புன்னகையுடன் சொன்னாள்!


நாங்கள் மூவரும் அவளிடம் கைகுலுக்கி வாழ்த்தியதும்.. Wow! boating tumaari birthday wish hai kya?? என்றேன்! அவள் அப்பாவும் அவளும் சிரித்துக் கொண்டனர்! அவளுக்கு 2 வயதில் ஒரு குட்டித்தம்பி இருக்கிறானாம்! தம்பி போட்டிங் செய்ய பயப்படுவதால் அம்மாவும் தம்பியும் அங்கே நிற்பதாகச் சொன்னாள். அவள் எங்களுடன் நன்கு ஒட்டிக் கொண்டாள்!


எங்கள் படகும் வந்துவிடவே நாங்களும் படகு சவாரி செய்யத் தயாரானோம்…!! மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

24 ஜூலை 2025


5 கருத்துகள்:

  1. காய்கறி பழங்கள், பூக்களின் படங்கள் அருமை. கண்களையும் மனதையும் கவர்கிறது. கேரட் பார்க்க சூப்பராக இருக்கிறது. ஆனால் இந்த வகை கேரட்களில் ஸ்வீட் இருக்காது என்று தோன்றுகிறது!


    நான் ஒரேமுறை சென்ற ஈட்டு விஜயத்தில் போட் ஹவுஸில்தான் அமிதாப், பர்வீன் பாபி ஷூட்டிங் பார்த்தேன். தி கிரேட் காம்ப்ளர் படத்தின் பாடல் காட்சி என்று நினைக்கிறேன். தூய வெள்ளை நிற பேண்ட்ஸும் ப்ளூ கோட்டும் அணிந்து உன்னதமாக இருந்தார் அமிதாப்.

    பதிலளிநீக்கு
  2. ஊட்டி கேரட் ஆஹா தளதளன்னு.

    மங்குஸ்தான், ரம்பட்டான், அட! துரியன் பழம் இது பல மருத்துவ குணங்கள் உள்ள பழம். பழங்களின் ராஜான்னும் சொல்லப்படும். avacado எல்லாம் செமையா இருக்கு.

    பதப்படுத்தப்பட்ட காய்ந்த மலர்க்க்கொத்து என்று நினைக்கிறேன். பைன் கோன் எல்லாமே வீட்டில் முன்பு வைத்திருந்தேன். இப்ப எல்லாம் போட்டாச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. மகளிடம் சொல்லி அங்கு அமர்ந்தும் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்!//

    அந்த வரலாற்று சிறப்பு மிக்கப் புகைப்படத்தைக் காணலையே!!!!! ஹாஹாஹா

    படகுப் பயணம் நன்றாக இருந்திருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இன்றைய வாசகம் நல்லாருக்கு. ஆனால் இது பொதுவில் சொல்லபப்டுவதுதானே! இல்லையா.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படங்கள் நன்றாக இருக்கின்றன. பலா போன்று இருப்பது துரியன் பழம். ஊட்டியில் விளைகிறதா?

    படகு இல்லத்தின் பின்னும் இப்படி ஒரு சுவையான நினைவுகூர ஒரு சம்பவம் இருக்கிறது இல்லையா!

    உங்களுக்குப் பழைய நினைவுகளை இனிமையாக அசைபோடக் கிடைத்த பயணம் என்றும் சொல்லலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....