சனி, 4 ஆகஸ்ட், 2018

புரியாத புதிர் – சற்றே இடைவெளிக்குப் பிறகு…


சற்றே இடைவெளிக்குப் பிறகு படங்கள் கொண்டு ஒரு புதிர். இரண்டு படங்கள் இங்கே தருகின்றேன். கூடவே அதற்கான கேள்விகளும்…..
படம்-1:

தலைநகரின் பிரதான, மிக முக்கியமான ராஜ பாட்டை…. அதில் இப்படி கக்கா போகும் மாதிரி அமர்ந்து என்ன செய்கிறார். பக்கத்தில் தண்ணீர் பாட்டில் வேறு இருக்கிறது! ஊரெல்லாம் ஸ்வச்ச் பாரத் முழக்கங்கள் முழங்க இவரோ ராஜபாட்டையில் இப்படி! என்ன செய்கிறார் என்று சொல்ல முடிகிறாதா?

படம்-2:இந்தப் படம் ஒரு காணொளியில் இருந்து க்ராப் செய்யப்பட்டது. சமீபத்தில் எனது அலுவலக தோழி ஒருவர் ஒரு நகைச்சுவையுடன், காணொளியை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். தன் உடல் எடை அதிகரித்து விட்டதற்காக, ஜிம் போகப் போவதாக மருமகள் சொல்ல, மாமியார் இதைச் செய்தால் போதும், என்று சொல்லி விட்டாராம். என்ன சொன்னார். அந்த பெண்மணி என்ன செய்கிறார் சொல்ல முடிகிறதா?

இந்த இரண்டு படங்கள் பற்றிய தகவல்கள், இன்னும் சில அனுபவங்களுடன் இன்று மாலை கதம்பம் பகுதியில் வெளிவரலாம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

22 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  முதலாவது தன்னுடன் அழைத்துப் போன செல்லத்திற்கு ஏதாவது முதலுதவி, இல்லை தாக சாந்தி அந்த மாதிரி அளிக்கிறாறோ...

  இரன்டாவது தயிர் கடைதல், இல்லை கால் பெரு விரலை மாறி மாறி இரு கைகளால் தொடுவது இந்த பயிற்சியே போதுமென்று சொன்ன மாமியார் பேச்சை மதித்து அதன்படி செய்கிறாறோ மருமகள்.

  ஏதோ எனக்குத் தோன்றிய ஊகங்கள். சரியா.. தவறாவென தங்கள் பதில் கண்டு தெளிகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதிர்களுக்குமான விடை இன்றைய பதிவில். நீங்கள் சொன்ன விடைகளில் ஒன்று சரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 2. தெரியவில்லை... மாலை வரை காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவில் பதில்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. இன்றைய பதிவில் பதில்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. 1.தன்னை வீட்டா உயரத்தில் குறைந்த யாருக்கோ எதோ உதவி செய்கிறார் .
  இரண்டாமவர் உட்கார்ந்த இடத்திலிருந்தே எதோ மூவ்மெண்ட் செய்கிறார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடைகள் இன்றைய பதிவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 5. இடம்பொருள் தெரியவில்லை முதல் படத்தில் அவரே புகைப்படமெடுக்கிறாரோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் படத்தில் புகைப்படம் எடுக்கிறார் - அலைபேசி மூலமாக....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
  2. இரண்டாவது படத்திற்கான விடையும் இன்றைய பதிவில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 6. முதல் படத்திலிருப்பவர் 1 புகைப்படம் எடுக்கனும். இல்லன்னா பாப்பாவை பிடிச்சுக்கிட்டிருக்கனும்

  இரண்டாவது படத்திலிருப்பவர் தயிர் கடையுறார்ன்னு நினைக்குறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலாவது புகைப்படம் எடுக்கிறார். இரண்டாவதும் சரி தான். இன்றைய பதிவில் விளக்கங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
  2. அட!எனக்கும் மூளை வேலை செய்யுதே!!

   நீக்கு
  3. ஹாஹா...

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 7. முதல் படத்தில் அவர் பக்கத்தில் பாட்டில் இருக்கிறது வளர்ப்பு செல்லம் அவர் முன்னே இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ராஜி சொல்வது போல் தயிர் கடைகிறார் என்று நினைக்கிறேன் தயிர்கடைதல் நல்ல உடற்பயிற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடைகள் இன்றைய பதிவில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. முதல் படம் குழந்தைக்கு தண்ணீர் புகட்டுகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை. விடைகள் இன்றைய பதிவில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. முதல் படத்தில் கை கழுவுறார் போல,
  இரண்டாம் படத்தில் உடற்பயிற்சி செய்றாங்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடைகள் தனிப்பதிவாக இன்று....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....