வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் –கச்சோடி - ஜக்தீஷ் கோவில் – கங்கௌர் காட்ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 13

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கச்சோடி, மட்ரி - சட்னி வகைகள்....
உதய்பூர் நகரிலிருந்து....
 
இந்தப் பயணத் தொடரின் கடந்த இரண்டு பகுதிகளில் உதய்பூரின் நகரிலுள்ள சிட்டி பேலஸ் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் அதன் அருகிலேயே உள்ள இரண்டு இடங்களைப் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னால் கொஞ்சம் ப்ரேக் – ஸ்னாக்ஸ் ப்ரேக்! காலை உணவகத்தில் பூரி சப்ஜி தேநீர் சாப்பிட்டு புறப்பட்டது. தொடர்ந்து இடங்களைப் பார்த்துக் கொண்டே வந்ததில் மதியம் தாண்டி விட்டது. அதனால் சாப்பிடுவதற்கென்று எங்கேயும் நிற்க முடியவில்லை. சிட்டி பேலஸ் பார்த்து வெளிவந்த போது மதிய உணவு வேளையைத் தாண்டி விட்டது. அப்போது சாப்பிட யாருக்குமே பிடிக்கவில்லை. கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் சுகமாக இருக்கும் என மனது சொல்ல, அதற்கே எல்லோரும் “Yes” சொல்ல, சிட்டி பேலஸிலிருந்து வெளி வரும் இடத்தில் உள்ள மார்க்கெட்டில் ஒரு கடையில் வெளியே பெஞ்சுகள் போட்டிருக்க அங்கே அமர்ந்தோம்.


ஜக்தீஷ் மந்திர் - படிக்கட்டுகள் ஏறிச் செல்லலாம் வாங்க...
உதய்பூர் நகரிலிருந்து....
 
பாட்டிலில் இருந்த ஒரு ஜூஸ் சிலர் கேட்க, மற்றவர்களுக்கு தேநீர்.  பாட்டில் திறந்த பிறகு பார்த்தால் அதில் ஏதோ மிதக்க, அனைத்தையும் திருப்பிக் கொடுத்தோம். அதே கடையில் கச்சோடி, ராஜஸ்தானி மசாலா மட்ரி [கொஞ்சம் தடிமனா அப்பளம் மாதிரி இருக்கும்] போன்றவையும் இருக்க, கச்சோடி வேண்டாம் என சில மசாலா மட்ரிக்களையும் வாங்கி தேநீருடன் சுவைத்தோம். மட்ரியின் சுவை நன்றாகவே இருந்தது. தில்லியிலேயே வேறு வகை மட்ரிக்களை சாப்பிட்டு இருந்தாலும் இந்த மசாலா மட்ரி இன்னும் நன்றாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருந்தது. ராஜஸ்தான் பகுதிகளில் விதம் விதமான தின்பண்டங்கள் உண்டு. கார சாரமாக இருக்கும் அவற்றை தேநீருடன் சாப்பிடுவார்கள். ப்யாஜ் கச்சோடி என்பது இங்கே நிறைய சாப்பிடுவதுண்டு. அதனுடன் சிவப்பு கலர், பச்ச கலர், மஞ்சள் கலர்களில் காரசாரமாக சட்னிகள் தருவார்கள்!


ஜக்தீஷ் மந்திர் - வாயிலில் ஒரு ஓவியம்...
உதய்பூர் நகரிலிருந்து....
 
நாங்கள் மசாலா மட்ரியுடன் தேநீர் சுவைத்த பிறகு எவ்வளவு எனக் கேட்க, நாங்கள் திருப்பிக் கொடுத்த திறந்த ஜூஸுக்கும் காசு கொடுத்தே ஆக வேண்டும் என்று சொன்னார் கடைக்காரர். நல்ல வேளை திறக்காமல் கொடுத்ததற்கும் கேட்கவில்லை. திறக்காமல் இருந்தால் நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுவோம், நீங்கள் திறந்து விட்டீர்களே என்று வாதம் செய்தார்! அடேய் மங்குனிப் பாண்டியா…. திறந்ததால் தானே அதில் இருக்கும் குறை தெரிந்தது என்று சொல்ல, அவர் ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு மேலும் அவரிடம் வாதம் புரிந்து கொண்டிருக்க விருப்பமில்லை. காசு கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். கடையிலிருந்து சில அடி தூரத்திலேயே கடைத்தெருவிலேயே அமைந்திருக்கிறது ஜக்தீஷ் மந்திர் என அழைக்கப்படும் கோவில்.


ஜக்தீஷ் மந்திர் - கோபுரச் சிற்பங்கள் ஒரு பார்வை...
உதய்பூர் நகரிலிருந்து....
 
இந்தக் கோவிலுக்கு, கடைத் தெரு அமைந்திருக்கும் வீதியிலிருந்து 32 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கே குடிகொண்டிருப்பது ஸ்ரீ ஜகன்னாத் ராய் என அழைக்கப்படும் விஷ்ணுவின் ஸ்வரூபம். பெரிய கோவில் என்றாலும் கடைகளுக்கும் வீடுகளுக்கும் நடுவே அமைந்திருப்பதால் இதன் முழு படமும் எடுப்பது கடினமாக இருந்தது. 1651-ஆம் ஆண்டு மஹாராணா ஜகத் சிங் அவர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் நிறைய சிற்பங்கள் உண்டு. படிகள் முடிந்ததும் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கும் ஒரு மண்டபம் உண்டு. விஷ்ணுவின் கோவிலாக இருந்தாலும், கோவில் வளாகத்தில் நம்ம தோஸ்த் கணேஷாவுக்கும் இடம் உண்டு. சூர்யதேவ், ஷக்தி மற்றும் சிவனுக்கும் சிறு ஆலயங்கள் வளாகத்தில் இருக்கின்றன.  1651-ஆம் கட்டிய கோவிலுக்கு அப்போதே 15 லட்ச ரூபாய் ஆனதாகச் சில குறிப்புகள் இருக்கின்றன.


ஜக்தீஷ் மந்திர் - சுற்றுக் கோவில்களில் ஒன்று...
உதய்பூர் நகரிலிருந்து....
 
கோவிலில் மூன்று நிலை கோபுரம் உண்டு. கோவிலுக்குள்ளேயும், கோபுரத்திலும் நிறைய சிற்பங்கள் உண்டு. வழக்கம் போலவே இந்தக் கோவிலிலும் கேமராவிற்குத் தடை! அதனால் படங்கள் எடுக்க இயலவில்லை. ஜக்தீஷ் மந்திரில் குடிகொண்டிருக்கும் விஷ்ணுவையும் மற்ற தெய்வங்களையும் தரிசித்து ஒரு சுற்று வந்து சிற்பங்களையும் மற்ற விஷயங்களையும் ரசித்து கீழே இறங்கினோம். வெளியே இருந்தபடியே கோவில் படங்கள் சில எடுக்க முடிந்தது. அவற்றையே இந்த பதிவில் சேர்த்திருக்கிறேன். கோவிலிலிருந்து புறப்பட்ட பிறகு நண்பர் கஜேந்திரா தனது மனைவி வழக்கமாக வாங்கும் துணிக்கடை அருகே இருப்பதாகச் சொல்ல ஒரு ஷாப்பிங் போக குழுவினர் சிலர் ஆசைப்பட்டார்கள். சரி என எல்லோரும் கடை வீதியில் நண்பர் கஜேந்திராவின் பின்னர் நடந்தோம். 


கங்கௌர் காட் நுழைவாயில்....
உதய்பூர் நகரிலிருந்து....

 
கங்கௌர் காட் பகுதியிலிருந்து மாளிகைகள்....
உதய்பூர் நகரிலிருந்து....

அப்படி நடந்து சென்றபோது பிச்சோலா ஏரிக்கரையில் இருக்கும் Gகங்gகௌர் Gகாட் கண்களில் பட அங்கே முதலில் சென்றோம். அந்த இடத்திலிருந்து பிச்சோலா ஏரியும் ஏரியில் இருந்த மாளிகைகளும், மலைப்பிரதேசமும் ரொம்பவே அழகாய் தெரியும். இங்கே சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தினை படம் எடுப்பதற்காகவே சிலர் வருவதுண்டு. சின்னச் சின்ன கடைகள், பாரம்பரிய விஷயங்கள் ஆகியவற்றையும் இங்கே பார்க்க முடியும். பிச்சோலா ஏரிக்கரையில் சில படங்கள் எடுத்த பிறகு வெளியே வந்தோம். அதன் அருகிலேயே இருக்கும் இன்னுமொரு இடம் Bபாgகோர் கி ஹவேலி – ஹவேலி என்பதும் மாளிகைக்கான சொல் தான். ஆனால் மாலை ஆகி விட்டதால் நாங்கள் அங்கே செல்ல வில்லை. தற்போது அங்கே ஒரு அருங்காட்சியகம் செயல்படுகிறது. மாலை நேரங்களில் சில கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. கங்கௌர் காட்டில் சூரிய அஸ்தமனம் பார்க்க நிற்காததும், பாகோர் கி ஹவேலி போகாததும் கொஞ்சம் வருத்தம் தந்தது எனக்கு!


கங்கௌர் திருவிழா....
படம்: இணையத்திலிருந்து....ஜல் ஜுல்னி ஏகாதசி ஊர்வலம்...
படம்: இணையத்திலிருந்து....
 
இந்த கங்கௌர் காட் என்ற பெயர் எப்படி வந்தது? மேவார் மக்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று கங்கௌர் திருவிழா என்பது. கண் எனப்படுவது சிவபெருமானையும் கௌரி என பார்வதி தேவியையும் பூஜித்து கொண்டாடப்படும் திருவிழா தான் 18 நாட்கள் நடக்கும் கங்கௌர் திருவிழா. திருவிழாவின் கடைசி நாளில் பாரம்பரிய உடைகள், நகைகள், மருதாணி அணிந்து இந்த பிச்சோலா நதிக்கரைக்கு வந்து பூஜைகள் முடித்து சிலைகளை ஏரியின் நடுவில் கொண்டு பூஜை செய்து கரைப்பார்கள். திருவிழா மிகவும் கோலாகலமாக நடத்துவார்கள். கரை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் உதய்பூர் நண்பர்.  அங்கே நடக்கும் இன்னுமொரு திருவிழா ”ஜல் ஜுல்னி ஏகாதசி”. இந்த ஏகாதசியில் பகவான் கிருஷ்ணருக்கான பூஜைகள் நடத்துவார்கள். இந்த மாதிரி திருவிழா சமயங்களில் அங்கே இருந்தால் இன்னும் நிறைய விஷயங்களைப் பார்க்க, தெரிந்து கொள்ள முடியும்! பார்க்கலாம் வாய்ப்பு கிடைக்கிறதா என!


கங்கௌர் காட் பகுதியிலிருந்து...
உதய்பூர் நகரிலிருந்து....
 
கங்கௌர் காட்டிலிருந்து வெளியே வந்து கஜேந்திரா அவரது மனைவி வழக்கமாகச் செல்லும் கடைக்கு அலைபேசி மூலம் அழைக்க, கடை மூடிவிட்டதாகத் தெரிந்தது.  என்னுடன் இருந்த நண்பர்களுக்கு பர்ஸில் இருக்கும் பணம் தப்பித்தது என்ற நிம்மதிப் பெருமூச்சு - சாலையில் இருக்கும் வாகனங்களின் சப்தத்திலும் எனக்குக் கேட்டது! அங்கிருந்து சாலைக்கு வந்து, எங்கள் வாகனம் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு இரண்டு ஷேர் ஆட்டோக்களில் பயணித்தோம். எங்கள் வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் எங்கே சென்றோம், என்ன பார்த்தோம் என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

34 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்! காஃபி குடித்த்த கையோடு முதல்படமாக சிற்றுண்டி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம். காஃபி குடித்த கையோடு சிற்றுண்டி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சிவப்பு கலரு சிங்குச்சா.. பச்சை கலரு சிங்குச்சா மஞ்சக்கலரு சிங்குச்சா என்று சாப்பிடுவார்கள் போலும்! மட்ரியைப் பார்த்தல் பூரி போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவப்பு கலரு சிங்குச்சா.... ஹாஹா.... விதம் விதமான சட்னிகள் வடக்கில் ரொம்பவே பிரபலம்.

   மட்ரி - நம்ம ஊர் தட்டைக்கு அண்ணன் மாதிரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. காசு கொடுத்த கையோடு அந்த ஜூஸ் பாட்டில்களை வாங்கித் திறந்து கீழே கொட்டியிருக்க வேண்டும் நீங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா நல்ல ஐடியா... இது தோன்றவில்லை அப்போது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. கோபுரச் சிற்ப படம் அருமை. கோவில் படம், உதய்பூர் மாளிகை படம் எல்லாமே நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. கண் என்றால் கண்பத் அதாவது கணபதி இல்லையோ!!! எரிக்கரைப் படம் ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண் என இங்கே சிவனைக் குறிக்கிறார்கள்.... ஏரிக்கரை - ரொம்பவே பிடித்திருந்தது அந்த இடம். சூரிய அஸ்தமனம் வரை அங்கே நிற்கத் தோன்றியது... ஆனால்.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அப்போதே 15 லட்சங்கள் செலவு என்றால் பிரமாண்டமான கோவிலாகத்தான் இருக்குமோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். மார்பிள் கற்களால் இழைத்திருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 7. இப்போ ஃபெப்ரவரியில் குஜராத் போனப்போ அங்கேருந்து மட்ரி வாங்கி வந்தோம். அது ஒரு சுவை. ராஜஸ்தான் மட்ரி இன்னொரு சுவை! இரண்டுமே பிடித்தவை தான். நீங்க அஜ்மேர் போயிருந்தா அருகிலிருக்கும் நசிராபாதில் கசோடா (கசோடிக்கு அண்ணன்) வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். அங்கு மட்டுமே கிடைக்கும். மிகப் பெரிய எண்ணெய்ச் சட்டியில் போட்டு வேகவிடுவார்கள். அளவும் பெரிது, காரமும் அதிகம். இத்தோடு வடமாநிலங்களின் சிறப்பு உணவான ஜிலேபிகளும் நெய்யில் பொரித்து ஜீரா சொட்டச் சொட்டக் கொடுப்பார்கள். அருமை! நான் சொல்வது இமர்த்தி எனப்படும் உளுந்தில் நம்மூரிலும் செய்யப்படும் ஜாங்கிரி அல்ல. இங்கே அதையும் ஜிலேபி என்போம். வட மாநில ஜிலேபிகளே வேறே இல்லையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மட்ரி வடக்கில் எல்லா மாநிலங்களிலும் உண்டு. வாரணாசியில் ஒரு கடையில் மட்ரி வாங்கினோம். ரொம்பவே நன்றாக இருந்தது. கச்சோடா சாப்பிட்டதுண்டு. இமர்த்தி சுவை தனிதான் - ஜிலேபியை விட சுவை நிச்சயம் அதிகம் தான். இங்கே இமர்த்தி குளிர் காலங்களில் நிறையவே சாப்பிடுவார்கள் என்பதால் நானும் சாப்பிடுவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. //திறந்த ஜூஸுக்கும் காசு கொடுத்தே ஆக வேண்டும் என்று சொன்னார் கடைக்காரர்//

  நல்லவேளை எல்லோரும் திறக்காமல் இருந்தீர்களே!

  எல்லா படங்களும் நன்றாக இருக்கிறது. விழா படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. படங்கள் அழகு அண்ணா,பயணப் பதிவுடன்
  உங்கள் தளத்தில் பயணம் செய்வது சந்தோஷம் அண்ணா..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   நீக்கு
 11. தொட்டு விட்டாலே பணம் தரணும் போல...

  படங்களும் விளக்கங்களும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொட்டுவிட்டாலே பணம்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 13. ஆடிப் பெருக்குக்கு ஊரில் இல்லையே என்ற ஆதங்கத்தினால் முதலில் உணவுப் படமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆடிப்பெருக்குக்கு ஊரில் இல்லை என்பதால் முதலில் உணவுப் படமா? ஹாஹா.. அப்படி இல்லை. அமைந்து விட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. வடநாட்டில் நம்மாளுங்க உணவுக்குதான் திண்டாடுவாங்கன்னு என் அப்பா சொல்வார். அதுக்கு தகுந்த மாதிரிதான் இருக்கு உங்க படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மாளுங்க உணவுக்கு திண்டாடுவது பிடிவாதத்தால் - எங்கே போனாலும் நம்ம ஊர் உணவு தேடுவதால்! எங்கே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட பழகிக் கொள்வது நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 15. பயணம் நல்லது தான். பயணங்கள் தரும் அனுபவம் அலாதியானது. எப்படியும் இந்தியாவை முழுமையாகச் சுற்றாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  https://newsigaram.blogspot.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவை முழுமையாகச் சுற்றாமல் விட மாட்டீர்கள் போலிருக்கிறது! ஹாஹா.... உங்கள் வாக்கு பலிக்கட்டும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  இனிமையான தின்பண்டங்களுடன் பயணம் இனிமையாக இருக்கிறது. ஜக்தீஷ் மந்திர் கோபுரச் சிற்பங்களும், ஓவியமும் மிக அருமையாக உள்ளது.
  பிச்சோலா ஏரியும், அங்கிருந்த மாளிகைகள் மலைகளும் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. உங்கள் புண்ணியத்தில் நாங்களும் உங்களுடன் அனைத்து இடங்களை சுற்றிப் பார்த்த உணர்வு கிடைக்கிறது. இனியும் தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 17. ஏரிக்கரை மாளிகைகள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது என்றால் கலை நயத்துடன் ஆன சிற்பங்கள் ஓவியங்கள் எல்லாம் அருமை. ஜக்த்தீஷ் மந்திர் கோபுரம் ரொம்ப அழகாக இருக்கின்றது. பிச்சாலா ஏரி மனதைக் கவர்கிறது. ஸ்னாக்ஸ் எல்லாம் சூப்பர். (துளசி: மட்ரி எல்லாம் சாப்பிட்டது இல்லை...) தொடர்கிறோம் ஜி.

  கீதா: அக்கருத்துடன், மட்ரி ரொம்பப் பிடிக்கும். மசாலா மட்ரி மகனுக்குச் செய்து கொடுத்துவிட்டேன். இப்போது மட்ரியுடன் ஊறுகாயும் ஹல்டிராம் என்று நினைக்கிறேன் அதில் வருகிறது. ஒருவீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். வடநாட்டு ஜிலேபி ரொம்பப் பிடிக்கும். மைதாவில் செய்து சுகர் சிரப்பில் க்ரிஸ்பாக இருக்கும். அதே போல இமர்த்தியும் பிடிக்கும் இங்கு ஜாங்கிரி விட இமர்த்தி ப்டித்தது. வீட்டில் செய்திருக்கேன் ஜிலேபியும், வட நாட்டு இமர்தியும் ஆனால் ஷேப் அவ்வளவு பெர்ஃபெக்டாக எனக்கு வராது. அதற்கு ப்ராக்டீஸ் வேணும்...அருமையான பயணம் தொடர்கிறோம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மட்ரி நன்றாகவே இருக்கும் துளசிதரன் ஜி!. கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....