வெள்ளி, 2 மார்ச், 2018

எத்தனை நாள் ஆசையோ – சில காணொளிகள்நடனம் ஆட வேண்டும், பாட்டு பாட வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், அப்படிச் செய்ய வேண்டும் என ஒவ்வொருக்கும் எத்தனையோ ஆசைகள். ”அத்தனைக்கும் ஆசைப்படு!” என யாரும் சொல்லாமலேயே ஆசைப்படுவது தானே மனித இயல்பு.  உதாரணத்திற்கு நடனத்தினையே எடுத்துக் கொள்ளுங்களேன். சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம். எதிரே ஒரு கல்யாண ஊர்வலம் – கால்களைத் தன்னால் ஆட வைக்கும் ஒரு டோல் இசைக்கிறது! ஆனால் ”அட சாலையில் இருக்கும்போது ஆட முடியுமா?” என்ற நினைவு வர, நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்கிறோம். ஆசைப்பட்டவுடன் ஆட முடிவதில்லை! அப்படி ஒருவர், யாரைப் பற்றியும் கவலை இன்றி களத்திலிறங்கி ஆடினால் எப்படி இருக்கும்?
சமீபத்தில் மூன்று பதிவுகளாக சூரஜ்குண்ட் மேளாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்தப் பதிவில் அங்கே எடுத்த சில காணொளிகள் – புகைப்படப் புதிர் பதிவில் கேட்டிருந்த Sufi Whirling நடனமும் இங்கே காணொளியாக…. ஒவ்வொன்றாய் பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்….

நடனம் – 1: எத்தனை நாள் ஆசையோ?


நடனம் – 2: Tanoura/Surfi Whirling நடனம்


நடனம் – 3:      ஹரியானாவின் பாரம்பர்ய நடனம் – களத்தில் குதித்த இன்னுமொரு பெண்… இந்தப் பெண், அங்கே இரும்பு சாமான்கள் விற்றுக் கொண்டிருந்தார். இசை கேட்டு தானாகவே களத்தில் குதித்து விட்டார்.


நடனம் – 4: ரொம்ப வெட்கமா இருக்கு… ஆனாலும் ஆடுவோம் என ஆடிய இளைஞி…. ஆனால் இந்தக் காணொளியில் வருவது போல சில தொல்லைகள் வரலாம்!


உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 2. வெங்கட் ஜி ரொம்ப நல்லாருக்கு! ரசித்தேன்..

  முதல் பாராவை அப்படியே என் மீது ஒட்டிவிடலாம் ஹா ஹா ஹா...ஆம் இப்படியான கலை ஆசைகள் உண்டு!!

  காணொளியில் பார்வையாளர்க்களில் சிலர் இறங்கி ஆடுவது முன்பும் நீங்கள் சில பகிர்ந்த நினைவு...இளம் பெண்கள் ஆடிய நினைவு...ரொம்ப நன்றாக இருக்கிறது ஜி..ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த ஆசைகள் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் செயல்படுத்த முடிவதில்லை....

   இப்படி சில காணொளிகள் சென்றவருடத்திலும் பகிர்ந்து இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. காணொளிகள் நல்ல தெளிவு இரசிக்க வைத்தன... ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. ஆண்கள் ஆடக்கூடாதா என்ன? ரசிக்க வைக்கும் காணொளிகள். ஆனால் அப்படி நடனமாட கொஞ்சம் கூச்சத்தை விட்டிருக்கவேண்டும்! இல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்கள் ஆடலாம் - தவறில்லை. ஆனால் சம்பந்தமில்லாத பெண் ஆடும்போது களத்தில் குதித்து அவர்களை மிரளச் செய்யக் கூடாது அல்லவா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. வட இந்தியர்கள் எந்த inhibition ம் இல்லாமல் நடனமாடுவார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....