ஞாயிறு, 25 மார்ச், 2018

ஐயம் பேக்!


ஐயம் Bபேக்!இரண்டு வாரங்களாக பதிவுலகம் பக்கமே வர இயலவில்லை. சனிக்கிழமை [10 மார்ச்] அன்று கணினியில் அடுத்த வாரத்திற்கான பதிவுகளைத் தட்டச்சு செய்து கொண்டிருந்தபோது திடீரென கணினி கண்களைச் சிமிட்டி மொத்தமாக நின்றுபோனது. பார்த்தால் Charge-ஆகவே இல்லை. எனக்குத் தெரிந்த கணினி நிபுணர்கள் சிலர் “ஊதிப்பாரு, ஒயர ஆட்டிப் பாரு, ஒரு தட்டு தட்டிப்பாரு” என்றெல்லாம் யோசனைகள் சொல்ல அதெல்லாம் சரி வராது எனத் தோன்றியது. மடிக்கணினி வாங்கி ஆறு-ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது – சரி மொத்தமா உயிர விட்டுடுச்சு போலன்னு தோன்றியது. சரி எதுக்கும் நண்பரின் அலுவலகத்திற்கு வரும் கணினிப் பொறியாளரிடம் காண்பிக்கச் சொல்லலாம் என நண்பரிடம் ஞாயிறன்று கொடுத்து வந்தேன்.


பேட்டரி போயிடுச்சு, சார்ஜர்ல ஒண்ணும் பிரச்சனை இல்லை. இரண்டையும் மாத்தணும்னா, இவ்வளவு பழைய மடிக்கணினிக்கு பேட்டரி இப்பல்லாம் வரது இல்லை! Compatible Battery, Charger இரண்டும் சேர்த்து – கம்பெனி ஷோரூம்ல 7000 ரூபாய் ஆகும்னு சொல்ல, கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. அவரே புதுசா வாங்கினாலும் ஒரு வருடத்துக்கு மேலே வேலை செய்யறது கஷ்டம் எனச் சொல்லி, கொஞ்சம் தூசு தட்டி, பேட்டரி சார்ஜ் ஆகலைன்னாலும் நேரடியா பவர்ல போட்டு வேலை செய்யலாம்னு சொல்லி, நண்பரிடம் கொடுத்து விட்டார். அவர் வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வர இயலாமல் அலுவலகத்தில் வேலைப்பளு! தினம் தினம் இரவு வீட்டுக்கு வரும்போதே எட்டரை மணி!

ஒரு வழியா இன்னிக்கு நண்பர் வீட்டுக்குப் போய் மடிக்கணினியை வாங்கிக் கொண்டு வந்தாச்சு! இனிமே பதிவுகளும் வரும்! அது சரி இந்த இடைப்பட்ட இரண்டு வாரத்துல கணினி இல்லாம என்ன செஞ்சீங்கன்னு கேட்டா, அலுவலக நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்! ஆங்கிலப் புத்தகங்கள் தான் – ஆர்.கே. நாராயண் புத்தகங்கள் இரண்டு முடித்து விட்டேன் – Talkative Man மற்றும் The Painter of Signs! இரண்டும் படிக்க முடிந்தது. தவிர வாங்கி வைத்து படிக்காமல் இருந்த சில தமிழ் புத்தகங்களும் படிக்க முடிந்தது – அட இந்தப் புத்தகம்லாம் வாங்கி வச்சுருக்கோமே, படிக்கவே இல்லையேன்னு இப்பதான் தோணுச்சு! இப்படி நிறைய படிக்க வேண்டிய புத்தகங்கள் இருக்கு! படிக்கணும்!

குஜராத் பயணத்தொடர் ஆரம்பிச்சதிலிருந்தே ஏதோ தடங்கல். மூணு பகுதி எழுதிய பிறகு இடைவெளி! இப்ப திரும்பவும் இரண்டு வார இடைவெளி! நாளைக்கு அடுத்த பகுதி வெளியிட Schedule செஞ்சாச்சு! தொடர்ந்து எழுதி முடிச்சிடறேன்!  So, I am back! நண்பர்களின் பதிவுகளும் கொஞ்சம் கொஞ்சமா படிச்சு முடிச்சிடணும்! பார்க்கலாம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

10 கருத்துகள்:

 1. வாங்க வெங்கட்ஜி!!

  எனது லேப்டாப்பும் பேட்டரி எல்லாம் போய் இப்போது பவரில்தான் வொர்க் செய்கிறது...நானும் கம்பேட்டபிள் பாட்டரிதான் போட்டுருக்கேன்...ஆனால் அது 1500-2000க்குள்...முதலில் பவர் இல்லாத சமயம் 4 மணினேரம் தாக்குப் பிடித்ததது அப்புறம் பொகப் போக குறைந்து ஒரு மணினேரம் இப்போது ஒரு 10 நிமிடம்...ஆனால் பவரில் போய்க்கொண்டிருக்கு. அந்த பெட்டரி மைத்துனர் அமெரிக்கா போய் வந்தப்ப வாங்கிக் கொண்டுவந்து அவரே ரிப்பெர் செய்து கொடுத்திட இன்னும் பல பிரச்சனைகளுடன் ஓடிக் கொண்டிருக்கு. மெமரி ப்ராப்ளம் எல்லாம் இருக்கு வயதாகிவிட்டது!!அதற்கு...

  ஸோ புத்தக விமர்சானங்கள் வரும்னு சொல்லுங்க...இடையில் இப்படியாக கேப் கிடைத்தால் நல்லதே வாசிக்கவும் நேரம் கிடைக்கும்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணினிக்கு வயதாகி விட்டது! எத்தனை நாள் தான் வேலை செய்யும் பாவம்!

   புத்தக விமர்சனம் - வரலாம்! வராமலும் போகலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. குஜராத் ஏதோ மாயம் செய்து விட்டது போல! இப்போது சார்ஜர் இல்லாமல் நேரடியாக ப்ளக்கில் சொருகி வேலை பார்க்கிறீர்களா? புத்தகங்கள் படிப்பது நல்ல விஷயம். அதையும் தொடருங்கள்... இதையும் தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் அப்படியே தான். பேட்டரியும் பழசு தான். பேட்டரியை எடுத்துவிட்டும் பயன்படுத்தலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இப்போதான் தோணுது. குஜராத் பயணக் கட்டுரை ஆரம்பித்ததிலிருந்து தடங்கல். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 5. வாழ்த்துகள் நண்பரே. எனது மடிக்கணினி யும் கடந்த இரண்டு வாரமாக திரை வர்ணப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. வாங்கி நான்கு வருடத்திற்கு மேலாகிறது. ம்ம்ம்... முடிந்தவரை ஆங்கிலம் கலந்து பேசுவது எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.

  #082/2018/SigarambharathiLK
  2018/03/25
  காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...
  https://newsigaram.blogspot.com/2018/03/KAALANGAL-YAARUKKAAGAVUM-KAATHTHIRUPPATHILLAI.html
  பதிவர் : கவின்மொழிவர்மன்
  #சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
  #சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....