சனி, 10 மார்ச், 2018

கதம்பம் – ஸ்ரீதேவி – ஆட்டோ அட்ராசிட்டி – மரச்சீனி அப்பளம்திருச்சிடா! திருச்சின்னா வெயில்டா!வெயில் ஜோரா இருக்கு. சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் வேலை இருந்தது. அடிக்கிற வெயிலுக்கு குளுகுளு ஜிகிர்தண்டா!! வழக்கமாக வாங்கும் கடையில் வாங்கி ருசித்தோம். முப்பது ரூபாய். வயிறு குளுகுளு என்றானது…


ஆட்டோ அட்ராசிட்டி

நேற்று இரவு வீட்டுக்குத் திரும்ப ஆட்டோ ஒன்றை விசாரித்தேன். சரியான கட்டணத்தை ஆட்டோக்காரர் சொல்ல, பேரம் பேசாமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தோம்.

வண்டியை எடுத்ததும், "தப்பா சொல்லிட்டேன், பேசினதை விட சேர்த்து கொடுங்க "என்றார். நீங்க சரியா தான் சொன்னீங்க, அதனால தான் நான் குறைச்சு கேட்கலை என்றேன்.

இல்லம்மா! கட்டாது! என்று சொல்லி வண்டியின் வேகத்திலும் ஒரு திமிறல். வீட்டை வந்தடைந்ததும், இறங்கிய பின் இங்க தான இருக்கு. இதுக்குப் போய் அதிகமா கேட்கறீங்களே?? என்றேன். நான் சரியா தான் கேட்டேன் என்றார். முகத்திலும் கடுகடுப்பு!!

இந்தாங்க!! நீங்க கேட்ட காசு! வெச்சுக்கோங்க!! என்று சொல்லி வீட்டுக்குள் சென்றேன்.

இப்படியும் மனிதர்கள்!!

மார்க் தம்பியின் நினைவூட்டல் – சென்ற வருடத்தில் எழுதியது…

சிலர் பேசும் போது வெடுக்கென்று ஏதாவது சொல்லி விடுவார்கள். அடுத்தவர்களின் மனம் புண்படுமே என்ற எண்ணமே இல்லாமல். நல்ல வார்த்தைகளுடன் மென்மையாக பேசுபவர்கள் மிகக்குறைவே. இரண்டாவது ரகத்தில் ஒரு பெண்மணி இங்கு.

இன்று வாசலில் வந்த பூக்காரம்மாவிடம் வாடிக்கையை வாங்கிக் கொண்ட பின் பக்கத்து வீட்டு பெண்மணி என்னிடம் "வாக்கிங் போகலையா?" என்றார். நானும், இதோ போகணும் என்றேன்.

உடனே பூக்காரம்மா, எங்கேம்மா போற? என்றார். மாடில தாம்மா! என்றதும், வெளில எல்லாம் நீ போகாதம்மா!! மாடில நட! அதுவும் இந்த நேரத்திலேயே போய்டு!! நேரங்கழிச்சு போகாத! தைரியமா போய் நட!! என்று அக்கறையுடன் ஆயிரம் அறிவுரைகள்.

நானும் சரிம்மா! எங்கேயும் போகமாட்டேன்..கவலைப்படாதீங்க என்று சொல்லி, வழக்கம் போல் மூட்டுவலியின் காரணமாக, அவரால் படி இறங்க முடியாது என்பதால் லிஃப்டில் பட்டனை அழுத்தி கீழே அனுப்பி வைத்தேன். வெளியே வந்துட்டீங்களா! என்றும் கூப்பிட்டு உறுதி செய்து கொண்டேன்.

அன்றாடம் பார்ப்பவர்களிலேயே இப்படியும், அப்படியுமாக எத்தனை பேர்.

ஸ்ரீதேவி – மறக்க முடியாத பாடல்மரச்சீனி (அ) மரவள்ளிக்கிழங்கு அப்பளம்!!எனக்கு மிகவும் பிடித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வாங்கியிருக்கிறேன். உங்களுக்கும் பிடிக்குமா??? வாங்க ! வாங்க !

What a Combination Sirji!வத்தக்குழம்பும், கொத்தவரங்காய் பருப்புசிலியும்!!

வாங்க சாப்பிடலாம்!!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்
புதுதில்லி.

30 கருத்துகள்:

 1. மரச்சீனி அப்பளாம் எனக்கு மிகவும் பிடித்தது. முன்பெல்லாம் கேரளா (திருவனந்தபுரம், பாலக்காடு) அல்லது நெல்லைலதான் கிடைக்கும். இப்போ எங்கயும். இதுல ரொம்ப மெல்லிசா இருக்கறது நல்லா இருக்காது.

  வத்தக்குழம்பு, பருப்புசிலி காம்பினேஷன் அருமை

  மீண்டும் கோகிலா பாடல் மிகவும் ரசிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவையிலும் மரச்சீனி அப்பளாம் கிடைக்கும் நெல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  2. ஆமாம் குறிப்பிட மறந்துட்டேன். அதன் காரணம், பாலக்காடு மிக அருகில் என்பதால்தான் (அதனால் மலையாளிகள் கோவையில் அதிகம்)

   நீக்கு
  3. மலையாளிகள் கோவையில் அதிகம்! பெரும்பாலான இடங்களில் இவர்கள் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 2. மரச்சீனிக் க்8ழங்கு அப்பளம்....வாவ் ரொம்ப பிடிக்கும்....எங்கள் ஊரில்...இது ரொம்ப பாப்புலர்..பிறந்த வீட்டில் ஒவொரு வருடமு செய்வோம்.ஓலைப்பாயில்......

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓலைப்பாயில் செய்வீர்களா? இப்போதும் கிடைக்கிறதா என்ன.... பெரும்பாலானவர்கள் ப்ளாஸ்டிக் ஷீட்டுக்கு மாறிவிட்டார்களே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  2. மரச்சீனி அப்பளம் இங்கும் கிடைக்கிறது

   நீக்கு
  3. அங்கேயும் கிடைக்கிறதா.... எஞ்சாய்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. திருச்சியை விட வேலூர் அதிக வெய்யில் இல்லையோ... திருச்சி சமீபத்தில் வேறு விஷயத்தில் பிரபலம் ஆகிவிட்டது!

  ஆட்டோக்கள் மாறுவதில்லை!

  வத்தக்குழம்பு ஈர்க்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ரெண்டு ஊருமே வெயிலில் போட்டி போடும்.....

   கீதா

   நீக்கு
  2. ஆட்டோக்கள் மாறுவதில்லை - உண்மை!

   திருச்சி - வேலூர் இரண்டுமே அதிக வெயில் நகரங்கள் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஆமாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. வத்தக்குழம்பும்....பருப்பு உசிலி கொம்போ....வாவ் யும்மி...அட்டகாசமா இருக்கே....

  ஆட்டோ..இங்கும் அப்படியே....அதனால் ஏறும் முன்...உறுதிப் படுத்திக் கொண்டுதான் ஏறுவது.வழக்கமாக்கிக் கொண்டேன்...காரணம் உங்க அனுபவம் எனக்கும் ஏற்பட்டது......ஆனால் ஆட்டோ அபூர்வமாத்தான் ஏறுவது என்றாகி விட்டது

  ஜ்8கிர்தண்டா....ஆஹா பிடிக்கும்..ஆனால் நான் ரொம்ப சுவீட்டு...ஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க ரொம்பவே ஸ்வீட்டு! :)

   ஆட்டோ அனுபவங்கள் - என்ன சொல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. ஆட்டோ எப்பொழுதுமே பெரும்பாலும் இப்படித்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. முகநூலில் பகிர்ந்ததை படித்து விட்டேன் முன்பே.
  பருப்பு உசிலியும் வத்தக்குழம்பும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. வத்தக்குழம்பு கொத்தவரங்காய் ப்ருப்புசிலி பிடிக்கும் மரவள்ளிக்கிழங்கு அப்பளம் பிடிக்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 8. வத்தக்குழம்பு வகையறாவினை ருசித்தேன். ஆட்டோ நிலை எங்கும் இதேதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. முறுமுறு அப்பளத்துடன் -
  சுவையான பதிவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. பொதுவாகவே எனக்கு அப்பளம் பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. சமீபத்தில் தெப்பக்குளம் போனப்போ மரச்சீனிக்கிழங்கு அப்பளம் வாங்கணும்னு நினைச்சுட்டு மறந்துட்டேன். முகநூலிலேயே பார்த்தேன். வத்தக்குழம்பும், பருப்பு உசிலியும் நல்ல கூட்டு! ரொம்பப் பிடிச்சதும் கூட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 12. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....