ஞாயிறு, 4 மார்ச், 2018

அசத்தல் ஓவியங்கள் – கலா மேளா – புகைப்பட உலாLalit Kala Academy சார்பில் தலைநகர் தில்லியில் ஃபிப்ரவரி 4 முதல் 18-ஆம் தேதி வரை முதலாம் உலகளாவிய கலா மேளா நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து பல ஓவியர்களும், சிற்பிகளும் வந்திருந்தார்கள். தினமும் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நேரம் – என்றாலும் என்னால் கடைசி தினம் தான் செல்ல முடிந்தது. அன்று நான் பார்த்த சில ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இதோ உங்கள் பார்வைக்கு – இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக….


எல்லா மாநிலங்களிலிருந்தும் ஓவியர்களும் சிற்பிகளும் வந்திருந்தார்கள் என்றாலும், நான் பார்த்தவை பெரும்பாலும் தமிழர்கள் வைத்திருந்த ஓவியங்களை மட்டுமே.  மற்ற ஸ்டால்களில் இருந்த ஓவியங்களைப் பார்த்தாலும், பெரும்பாலும் ஓவியர்களோடு பேசவோ, இல்லை அந்த ஓவியங்களைப் படம் எடுத்துக்கொள்ளவோ இல்லை. இனிமேல் ஒவ்வொரு வருடமும் இப்படியான மேளாக்களை நடத்தலாம் என திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்திலிருந்து வந்திருந்த ஓவியர்களிடம் பேசும்போது ஓவியங்கள் விற்பனை ரொம்பவே குறைவு என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

M Rama Suresh அவர்களின் ஓவியங்கள் ரொம்பவே அழகு. அவரைச் சந்திக்க முடியவில்லை என்பதில் வருத்தம். முதலில் அவரது ஓவியங்களைப் பார்க்கலாம்…. சென்னை திருவான்மியூரில் இவரது ஸ்டுடியோ இருக்கிறது. இவரது ஓவியங்களின் தனித்தன்மையே யாரும் முகம் காட்டுவதில்லை என்பது தான்!

இவரது ஓவியங்கள் இருந்த இடத்திலேயே திரு கே. ஷ்யாம்குமார் அவர்களின் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களும் இருந்தன. அவரது படைப்புகள் சில கீழே. அதே இடத்தில் இருந்த திரு கண்ணன் அவர்களின் இரண்டு ஓவியங்களும் கீழே உண்டு.

மேலுள்ள நான்குமே திரு ஷ்யாம்குமாரின் படைப்புகள். கீழே இருப்பவை இரண்டும் திரு கண்ணன் அவர்களில் படைப்புட்கள்...
அங்கே பார்த்த மற்ற சில ஓவியங்கள் இங்கே தந்திருக்கிறேன். மேலும் சில ஓவியங்கள், சிற்பங்கள் படங்களாக என்னிடம் உண்டு. அவற்றை வேறொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


வளரும் கலைஞர்.....
உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. முதுகு காட்டும் ஓவியங்கள் அழகு. ஒன்றிரண்டை உங்கள் அனுமதியுடன் எடுத்துக் கொள்கிறேன். பின்னர் உதவும். மற்றவைளையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஓவியரைச் சந்தித்திருந்தால் அவரிடம் கேட்டு இருக்கலாம் - ஏன் முதுகு காட்டும் ஓவியங்கள் மட்டுமே என! அழகான ஓவியங்கள் - அவற்றில் இருக்கும் Detailing பிடித்திருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பின்புற ஓவியங்கள் புதுமையாக இருக்கிறதே அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. 1980 களில் ஒரு ஆண்டு பி எச் நிறுவனங்கள் இணைந்து தலை நகரிலொரு கலா மேளா நடத்தினர் என் மனைவியும் திருச்சியிலிருந்து சென்றிருந்தாள் கலை நிகழ்ச்சிகளில் பின்னல் கோலாட்டம் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாளப்போது பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்துக்குச் சென்று பிரதமரை சந்திதனர் கலாமேளாஎன்னும் தைப்பை பார்த்ததும் அந்த நினைவுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலா மேளா - உங்கள் நினைவுகளையும் மீட்டெடுக்க உதவி இருப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. முகம் காட்ட மறுத்த ஓவியங்கள் அழகு.
  மற்ற ஓவியங்களும் அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. எல்லா ஓவியங்களும் அருமை அருமை!!!

  திரு ராம சுரேஷ் அவர்களின் முகம் காட்டா ஓவியங்கள் ரொம்பவே கவர்கிறது. நுணுக்கங்கள்!!! ஆம் அவர் ஸ்டூடியோ திருவான்மியூரில்....சாட்சி ஆர்ட்...அவரது தளம் https://www.saatchiart.com நல்ல கலைஞர்!!!

  நான் வரைவதில் ஆர்வம் உண்டு...முன்பு செய்து கொண்டிருந்தேன்...இப்போது செய்வதில்லை...ஆனால் கொஞ்சம் மாதங்கள்...ஒரு வருடம் மேல் இருக்கும்... பெயின்டிங்க் செய்ய அதைக் குறித்து அறிய நெட்டில் தேடிய போது இவரது தளம் பார்த்தேன்...சில படங்கள் முகம் கொஞ்சம் தெரியும் படி இருந்தாலும் நேராக இல்லாமல் சைட் போஸ் அல்லது குனிந்தபடி என்று அழகாக இருக்கும்...

  கடைசிபடமும் அழகு என்றால் அதற்கு மேலே உள்ள படங்கள் க்ளாசிக்....

  எல்லாமே ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது விசிட்டிங் கார்ட்-ல் ஒரு இணையதள முகவரி இருந்தது. ஆனால் அது வேலை செய்யவில்லை என்பதால் தான் கொடுக்கவில்லை. அவர் பற்றிய மேலதிகத் தகவல்கள் தந்தது நல்ல விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. முதலிரண்டு ஓவியங்களும், கோவிலில் பக்தர், தேங்காயோடு இருக்கும் படமும் மிக மிக அருமை. அதிலும் முதல் ஓவியம் டாப் கிளாஸ். மிகத் திறமையான ஓவியர். பாராட்டுதலுக்கு உரியவர். பகிர்ந்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அவரது ஓவியங்களில் மிகவும் பிடித்தது, இங்கே முதலாவதாக பகிர்ந்தது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 9. //ஏன் முதுகு காட்டும் ஓவியங்கள் மட்டுமே என!...//

  முதுகு காட்டும் ஓவியங்களை எளிமையாக பின் பக்க போஸ் என்று கொள்ளலாம் என்றாலும் ஓவியத்தைப் பார்த்த மாத்திரத்தில் நம் கற்பனைக்கேற்ப இன்னொரு செய்தியை அவை சொல்வதாகவும் இருப்பது தான் அர்த்தபூர்வமாக அழகாக இருக்கிறது.

  உதாரணத்திற்கு அந்த 3-வது ஓவியத்தைப் பாருங்கள். அந்த பிர்மாண்ட இரண்டு
  கால்களும் கோமதீஸ்வரர் சிலை உருவத்தின் ஓவிய வார்ப்பு என்றால் நேராக நமக்குக் காட்சியளிக்கும் சிலையின் முதுகு திருப்பல் எப்படியிருக்கும் என்பதனை ஓவியமாகக் காட்டுதலாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் கற்பனையைத் தூண்டிவிடக்கூடிய சக்தி இந்த ஓவியங்களுக்கு இருக்கிறது - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 10. ஆஹா என்ன ஒரு ஓவியங்கள் நம்பவே முடியவில்லை.. இப்படித்திறமைசாலிகளாக இருக்கிறார்களே என நினைக்க எப்பவுமே வியப்புத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திறமைசாலிகள் எங்கெங்கும் இருக்கிறார்கள். என்றாலும் வெளித்தெரிவதில்லை என்பது தான் கஷ்டம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 11. முக பாவத்தைக் கொண்டு வருவதை விட
  முதுகு பாகத்தை வரைவது மிகவும் எளிது .....
  என்னைப் பொறுத்தவரை ! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 13. மிக மிக அருமை. நன்றி வெங்கட், நீங்கள் இது போல போய்ப் பார்ப்பதால்
  எங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கிறது.

  உலகிற்கு முதுகைக் காடினாலும் அவர்கள் முன்னிருக்கும் உலகத்தைப் பற்றிய கற்பனை விரிகிறது. அந்தப் பெண் குழந்தைகளின் அழகே தனி.
  பூஜா செய்பவரின் நேர்த்திக் கண்களைப் பறிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ரசித்ததை அனைவரும் ரசிக்க பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 15. தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே http://www.tamilaruvi.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராபின்சன்.

   நீக்கு
 16. திரு ராம சுரேஷ் அவர்களின் ஓவியங்கள் அனைத்தும் அற்புதம். அதேபோல் கடைசி ஓவியமும். மற்ற ஓவியங்களும் மிக நன்றாக இருக்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹேஷ்.

   நீக்கு
 17. முதுகு காட்டும் ஓவியங்கள் புதிய யுக்திதானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   நீக்கு
 18. அற்புதமான ஓவியங்கள். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....