எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, November 2, 2016

கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்.....தமிழகத்தின் தஞ்சைப் பகுதிகளில் பொய்க்கால் குதிரை நடனம் மிகவும் பிரபலம். கால்களில் மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு, குதிரை உருவத்தினை சுமந்தபடி ஆடும் பொய்க்கால் குதிரை நடனத்தினை நம்மில் பலரும் பாத்திருக்க வாய்ப்புண்டு.  இதே மாதிரி குதிரை நடனம் ராஜஸ்தானிலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?  ராஜஸ்தானிலும் இப்படி குதிரை உருவத்தினை தனது இடுப்பில் மாட்டிக்கொண்டு, அலங்கார உடைகள் அணிந்து பாரம்பரிய இசை இசைக்க, சுற்றிச் சுற்றி நடனமாடுவார்கள்.  அந்த நடனத்திற்குப் பெயர் கச்சி கோடி [Kachhi Godi] நடனம்.சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா சமயத்தில் ராஜஸ்தானிலிருந்து ஒரு குழு தலைநகரின் IGNCA-வில் தொடர்ந்து இந்த கச்சி கோடி நடன்ம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.  நடனம் ஆட மூன்று பேர், இசைக்குழுவில் நான்கு-ஐந்து பேர் என சுமார் பத்து பேர் கொண்ட குழு. அவ்வப்போது இடைவெளி கொடுத்து நாள் முழுவதும் ஆடியபடியே இருந்தார்கள் அந்த மூன்று பேரும். அதில் ஒருவர் பொய்க்குதிரையைச் சுமந்தபடி ஆட, மற்ற இருவரும் [ஒரு பெண், ஒரு ஆண்] முக்கிய ஆட்டக்காரருடன் ஆடுகிறார்கள். ராஜஸ்தானின் ஷேகாவத்தி பகுதியில் தான் இந்த நடனம் முதன் முதலாக ஆடினார்கள் என்றும் அங்கே இருந்த கொள்ளைக்காரர்களின் வீர பராக்கிரமங்களை பாடல் மூலம் தெரிவிக்க நடனம் ஆடுபவர்கள் கைகளில் கத்திகளோடு நடனமாடுவார்கள் எனத் தெரிகிறது.  ஆனால் நான் பார்த்த நாட்டியக்காரர்கள் கத்தியுடன் ஆடவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே குதிரை வேடமிட்டிருந்ததால் கத்தியுடன் ஆடவில்லை போலும்.  ஆனாலும் சுற்றிச் சுற்றி மூவரும் ஆடுவதைப் பார்க்கும் நமக்கே தலைசுத்துகிறது. ஆனால் சுற்றும் அவர்களோ எந்தவித தயக்கமோ, சோர்வோ இல்லாது தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். குதிரையின் உருவம் மூங்கில் குச்சிகள் மற்றும் பேப்பர் கூழ் கொண்டு அமைக்கப்படுகிறது. அதன் மேல் வண்ண வண்ண உடைகளும், அந்த உடைகளில் இருக்கும் வேலைப்பாடும், சுற்றிச் சுற்றி ஆடும்போது அந்த ஆடையில் மின்னும் கண்ணாடிகளும் என அனைத்துமே பார்க்கும் உங்களை நிச்சயம் கவரும்.

நடுநடுவே இடைவெளி என்றாலும் தொடர்ந்து நாள் முழுவதும் இப்படி ஆடுவது, அதுவும், தொடர்ந்து எட்டு நாள் விழாவிலும் இப்படி ஆடுவது பிரமிக்க வைக்கிறது. நடனமாடிய மூவருமே ஒருவருக்கொருவர் சளைக்காது ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  

வழக்கம் போல, நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். இந்த முறை காமிரா உள்ள அலைபேசியும் எடுத்துச் சென்றிருந்ததால் காணொளியும் எடுத்தேன்.  Youtube-லும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இங்கேயும் உங்கள் பார்வைக்காக, இரண்டு காணொளிகளைச் சேர்த்திருக்கிறேன்.  நீங்களும் பார்த்து ரசிக்க இதோ கச்சி கோடி நடனம்....


மீண்டும் ச[சி]ந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.....22 comments:

 1. ராஜஸ்தானில் பொய்க்கால் குதிரை
  வியந்து போனேன் ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை
  அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. படங்களுடன், தகவல்கள் அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 4. தமிழ்நாட்டைவிட அங்கு அலங்காரம் இன்னும் அதிகமாக இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. பொய் கால் குதிரை நடனம் பக்கத்தில் ஆடுபவர்கள் எல்லாம் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 6. ராஜஸ்தானிலும் பொய்க்கால் குதிரை ஆட்டமுண்டு என்பது புதிய தகவல். யூ டியூப்பிலும் பார்த்து ரசித்தேன். என்னமாய் சுற்றுகிறார்கள்? வெறும் இசையுடன் ஆடும் ஆட்டம் மிகவும் ரசிக்கத் தக்கதாய் உள்ளது. மிகவும் நன்றி வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி.....

   Delete
 7. இவையெல்லாம் நமது தேசத்தின் பாரம்பர்யக் கலைகளாகின்றன...

  அந்தக் கலையும் சிறப்புற்று கலைஞர்களும் நல்வாழ்வு வாழ வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு ஜி....

   Delete
 8. #எட்டு நாள் விழாவிலும் இப்படி ஆடுவது பிரமிக்க வைக்கிறது#
  நடனம் ஆடுபவர்களுக்கும் எட்டு குதிரை சக்தி வந்து விடுகிறதோ :)

  ReplyDelete
  Replies
  1. எட்டு குதிரை சக்தி.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. படங்கள் அழகு...
  வீடியோ பார்க்கிறேன்....
  நமது பாரம்பரியக் கலைகள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதில் சந்தோஷமே...

  ReplyDelete
  Replies
  1. வீடியோவும் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கலாம்...

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. வெளிறிய பின்புலத்தில் எடுக்கப் பட்ட படங்ள் இருந்த பதிவில் தொடங்கி இப்போ வண்ணமயமான புகைப்படங்களில் ... செமை ஜி
  தொடர்க

  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 11. தகவல்கள் அருமை. காணொளியும் பார்த்தோம். சிறப்பாக இருக்கின்றது மிக்க நன்றி ஜி

  கீதா: என்ன ஓர் ஒயிலான நடனம். குதிரையின் உடைகளும் ராஜஸ்தான் கலை நயத்தை மிளிர வைக்கிறது. கிட்டத்தட்ட குஜராத், ராஜஸ்தான் பூவேலைப்பாடுகள் ஒரே போன்றுதான் இருக்கும் என்றாலும் குஜராத் கச் வொர்க் எனப்படும் வேலைப்பாட்டிற்குப் புகழ் பெற்றது.

  நம்மூரிலும் பொயிக்கால் குதிரை ஆட்டம் உண்டென்றாலும் இப்போது குறைந்து வருகிறது மட்டுமின்றி ஆடும் முறையும் முன்பு போல் இல்லை. தமிழ்நாட்டில் பொங்கல் சமயத்தில் கனிமொழி அவர்கள் தமிழ் சங்கமம் நடத்திய போது பார்த்திருக்கிறேன். அப்போது மிக நன்றாக ஆடினார்கள்.

  நமது நாடு பாரம்பரிய கலைகளுக்குப் புகழ்பெற்றது..வட இந்திய கிராமங்களில் பாதுகாத்து வருகிறார்கள் என்று தோன்றுகிறது சரியாகத் தெரியவில்லை என்றாலும்..

  ReplyDelete
 12. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....