படம்: இணையத்திலிருந்து...
08-11-2016
நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசாங்கம்
அறிவிப்பு செய்திருப்பதை நீங்கள் அனைவருமே இந்நேரம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப்
பதிவு இந்த முடிவு நல்ல முடிவா இல்லை கெட்ட முடிவா என்பதைப் பற்றியது அல்ல. சாதாரண
மனிதர்கள் இதில் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
சின்னச் சின்னதாய் சில பிரச்சனைகள் இருக்கலாம். கவலைப்பட வேண்டியதெல்லாம், வீட்டில்
மூட்டை மூட்டையாக பணமாக வைத்திருப்பவர்கள் மட்டுமே.
இப்படி
யாரிடமுமே மூட்டை மூட்டையாக இல்லை என்று சொல்லாதீர்கள். தலைநகர் தில்லியில் இப்படி இருப்பவர்கள் பலரை நான்
பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய தேதியில் என்னிடம் ஒரு 500 ரூபாய் நோட்டு
கூட இல்லை! இன்றைக்கு தான் பணம் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன் – ஆனால் அலுவலகத்திலிருந்து
வீடு திரும்பும்போதே மணி ஒன்பது. சரி நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம் என திரும்பிவிட்டேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று.
அடடா,
இப்படி திடீரென அறிவிப்பு வந்தால் என்ன செய்வது? எங்களிடம் இருப்பதெல்லாம் செல்லாக்
காசு தானா? என்ற கவலை சாதரணர்களுக்குத் தேவையில்லை. டிசம்பர் 30-ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை உங்கள்
அருகில் உள்ள வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றில் மாற்றிக் கொள்ளலாம். ”ஐயா, அதுக்குள்ள மாத்த முடியவில்லை…. என்றாலும்
கவலை வேண்டாம். மார்ச் 31 வரை தகுந்த அடையாள
அட்டையைக் காண்பித்து உங்கள் பணத்தினை மாற்றிக் கொள்ளலாம்!” உங்களிடம் இருப்பது உங்கள்
பணம், வரி ஏய்ப்பு செய்யவில்லை என்றால் எதற்கு கவலைப் பட வேண்டும்.
இன்னும்
இரண்டு நாட்களுக்கு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், விமான நிலையம், ரயில் நிலையம்,
பேருந்து நிலையம் ஆகியவற்றில் நவம்பர் 11 நள்ளிரவு வரை இந்த நோட்டுகள் வாங்கிக் கொள்வார்கள். மற்ற நோட்டுகள் வழக்கம்போலச் செல்லும்.
இடுகாடு/சுடுகாடு/மயானம்
ஆகிய இடங்களிலும் நவம்பர் 11 வரை இந்த 500/1000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 11 நள்ளிரவு
வரை செல்லும் [இங்கே எதற்கு என்ற ஒரு சின்ன சந்தேகம்… மூட்டைமூட்டையாக கள்ளப் பணம்
வைத்திருக்கும் பல பண முதலைகளுக்கு இந்த செய்தி தந்த அதிர்ச்சியில் மரணம் ஏற்படலாம்
என்பதாலோ?]
மற்றபடி
உங்கள் அவசரத் தேவைக்கு காசோலை, Draft, Credit/Debit Card ஐ பயன்படுத்தலாம்.
இன்னும்
சில நாட்களுக்குள் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும். [இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் NGC எனப்படும் Nano GPS Chip இருக்கும். அதன் மூலம் புதியதாய் யாரும் கருப்புப் பணம் சேர்க்க முடியாது. கூடுதல் விவரங்கள் இணையத்தில் உண்டு. தனியாக பதிவு செய்கிறேன்].
இன்றைக்கு
வேறு பதிவு போடுவதாகத் தான் இருந்தேன் – Schedule செய்தும் வைத்திருந்தேன். ஆனால் இரவு
வீடு திரும்பும்போது பார்த்த செய்தி என்பதால் இதை இன்று பதிவிடுகிறேன்… அதற்குள் இந்தச்
செய்தியை வைத்து நிறைய முகப்புத்தக இற்றைகளும், ஜோக்குகளும் வர ஆரம்பித்து விட்டன. சில புகைப்படங்களில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளில் சுண்டல் கட்டித் தருவது போல வந்து கொண்டிருக்கிறது! நான் படித்த சில துணுக்குகள்
கீழே…..
Don’t worry friends….. I will
accept all your Rs.500 and Rs.1000 notes without asking any question….. at
Rs.12 per kg.!
1 min silence for all those who have their weddings tomorrow and
day after. They will get only blank
envelopes!
அம்மா தாயே…. அம்பது நூறு போதும்மா.. ஐநூறு, ஆயிரம் வேண்டாம்மா….
பின்ன மோடின்னா தாடி வெச்சுக்கிட்டு, கண்ணாடி போட்டுக்கிட்டு, குர்தா போட்டுக்கிட்டு
ஃப்ளைட் ஏறி நாடு நாடா சுத்தறவர்னு நினைச்சீங்களா? மோடி டா!
அமெரிக்கர்கள் வோட்டில் பிசி….. இந்தியர்கள் நோட்டில் பிசி…..
என்னைப்
பொறுத்த வரை இந்த விஷயத்திற்காக அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று தான் சொல்லுவேன். இதுவும் கடந்து போகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…..
மீண்டும்
ச[சி]ந்திப்போம்…..
நட்புடன்
வெங்கட்.
புது
தில்லி.
அன்புள்ள வெங்கட்ஜி ..... வணக்கம்.
பதிலளிநீக்கு’அமெரிக்கர்கள் நோட்டில் பிசி….. இந்தியர்கள் நோட்டில் பிசி…..’
இந்த மேற்படி ஜோக் கீழ்க்கண்டபடி இருக்க வேண்டும் .....
’அமெரிக்கர்கள் வோ-ட்-டி-ல் பிஸி….. இந்தியர்கள் நோட்டில் பிஸி…..
எனது தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வை.கோ. ஜி!
நீக்குசாதரணமக்களுக்கு கவலையில்லை)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
நீக்குசுடச்சுட ஒரு பதிவு. நானும் எனது அனுபவங்களோடு எழுத வேண்டும்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவும் படித்தேன். நல்ல பகிர்வு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
அதிரடி முடிவு! அச்சே தின் ஆ கய்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குபடம் சூப்பர்...நானும் கவலைப்படலை ஆனா கள்ள நோட்டினை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் நடந்தால் சரிதான்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குசரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்! ஆனால் இதைப் புரிந்து கொள்பவர்கள் யாரும் இல்லை! :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குஎங்கும் இதே பேச்சு..அதிரடி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!
நீக்குஒருநாள் டைம் கொடுத்திருக்கலாம் ,வெளியூர் சென்று இருப்பவர்கள் பாடு கஷ்டம்தானே :)
பதிலளிநீக்குஅப்படி கொடுக்காததற்கும் காரணம் இருக்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
விரைந்த பதிவு. நல்ல பணம் (Good money) வைத்திருப்பவர்களுக்குக் கவலையில்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஎனது நண்பர் ஒருவர் என்னுடைய கணக்கில் 25,000 ரூபாய் போட்டிருந்தார். அதை எடுப்பதற்கு மதியம் வங்கிக்குப் போனேன். ஏடிஎம் வேலை செய்யவில்லை. அங்கு ஒரே கூட்டம். அதனால் திரும்பி வந்தேன். எடுத்திருந்தால் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் பயப்பட தேவை இருக்காது. இப்போது என்னிடம் இருப்பது மூன்று 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே. அதை மெதுவாக மாற்றிக்கொள்ளலாம்.
பதிலளிநீக்குஎன்ன பயணத்தில் இருப்பவர்களுக்கு சிரமம். திருமணம் வைத்திருப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ஓரிரு நாட்கள் பிரச்சனை இருக்கும். அதன்பின் இயல்பு நிலைக்கு வந்துவிடும். மிக நல்ல தேவையான நடவடிக்கை.
த ம 3
பயணத்தில் இருப்பவர்களுக்கு சில சிரமங்கள் உண்டு! உண்மை தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.
ஆமாம் ஆமாம் ஆமாம்....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குநல்லது நடந்தால் சரி...
பதிலளிநீக்குநல்லது நடக்கும் என நம்புவோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
விரிவான தகவல்கள் ஜி நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஆம்! இதுவும் கடந்து போகும்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குநானோ ஜிபிஎஸ் உண்மையா ?
பதிலளிநீக்குதம +
உண்மை என்று நான் சொல்ல வேண்டுமா? பொறுத்திருங்கள் தெரிந்து விடும்.... :) சில மாற்றங்கள் இருக்கலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!
நானோ ஜிபிஎஸ் சிப்ஸ் ஒன்றும் இல்லை என்று இன்றைய செய்தித்தாள் சொல்கிறதுஹவாலாக் காரர்கள் 30% கமிஷனில் நோட்டுகளை வாங்கிக் கொள்கிறார்களாம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஇந்த அதிர்ச்சி வைத்தியம் தேவையென்றாலும், திரும்பவும் 2000 ரூபாய் தாளை அறிமுகப்படுத்துவது சரியாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குநல்ல முடிவுதான்...
பதிலளிநீக்குபண முதலைகள் அலற வேண்டிய நிலையில் அன்றாடங்காய்ச்சிகளான நம் மக்கள் ஒரு நோட்டு ரெண்டு நோட்டுக்காக குய்யோ முறையோன்னு கத்துவது தேவையில்லாதது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குநல்ல முடிவுதான் சில நடைமுறைப் பிரச்சனைகள் இருந்தாலும்...நல்லது நடந்தால் இந்த முடிவு நல்லதுதான்....
பதிலளிநீக்குநடைமுறை பிரச்சனைகள் இன்னமும் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது. ஆனாலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இன்னும் பலரிடம் இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!