எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, November 1, 2016

ஏமாற்றம் தந்த ஹெலிகாப்டர் சேவை.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 62

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தவாங்க் மோனாஸ்ட்ரி...

தவாங்க் மோனாஸ்ட்ரியில் பிரம்மாண்ட புத்தர் சிலையும், அழகிய சுவர் ஓவியங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் வந்து சேர்ந்தோம். கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு – வழக்கம் போல எனக்கு சைவ உணவும், மற்ற நண்பர்களுக்கு அசைவ உணவும். நண்பர் ஜார்ஜும் வந்து சேர அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட வேண்டும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தினோம்.  ஹெலிகாப்டர் பயணத்திற்கு முன்பதிவு செய்வதில்லை. ஏன் என்றால் தட்பவெப்ப நிலை பொறுத்தே பயணிக்க முடியுமா முடியாதா என்பதை முடிவு செய்வார்கள். 


படம்: இணையத்திலிருந்து....

முன்பெல்லாம் தவாங்கிலிருந்தே பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர் சேவை இருந்தது. நிறைய விபத்துகள் ஏற்பட, இந்த சேவையை கட்டாயமாக நிறுத்த வேண்டிய சூழல். ஒரு விபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் இறந்து போனது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  2011-ஆம் வருடம் நடந்த ஒரு விபத்தில் பயணித்த 17 பேரும் உயிரிழந்தார்கள். 2015-ஆம் ஆண்டிலும் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து விபத்துகள் ஏற்படக் காரணம் ஹெலிகாப்டர் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் மலைப்பகுதிகள் – கொஞ்சம் கவனம் தவறினாலும் மலைகளில் மோதி விபத்து ஏற்படலாம்.


படம்: இணையத்திலிருந்து....
  
நாங்கள் பும்லா பாஸ் சென்றிருந்த போது நண்பர் ஜார்ஜ் ஹெலிகாப்டர் சேவை அடுத்த நாள் இருந்தால் ஏற்பாடு செய்வதாகச் சொல்லி இருந்தார். அதுவும் சமீப காலத்தில் தவாங்கிலிருந்து புறப்பட்ட பல ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாக, தவாங்க் – கௌஹாத்தி ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையும், தவாங்கிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லும்லா என்ற இடத்திலிருந்து தான் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது.  நாங்கள் புறப்பட வேண்டிய அன்றும் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தி இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல, எங்கள் திட்டத்தினை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம். 

ஹெலிகாப்டர் மூலம் பயணித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கும் – வேறு சில இடங்களுக்குப் பயணித்திருக்கலாம். ஆனாலும் ஆபத்தான மலைகள் நிறைந்த பாதைகளில், மேகக் கூட்டங்களுக்கு நடுவே ஹெலிகாப்டரில் பயணிப்பது கொஞ்சமல்ல நிறையவே ரிஸ்க் என்பதால் மேக மூட்டமாக இருக்கும் சமயங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை நிறுத்தி விடுகிறார்கள்.  எங்களுக்கும் வேறு வழியில்லை.  மீண்டும் கரடு முரடான சாலைகளில் தான் பயணிக்க வேண்டும்.

இந்த வடகிழக்கு மாநிலங்கள் பயணத்தில் பல வாகனங்களில் பயணித்திருந்தோம். ஹெலிகாப்டர் பயணமும் வாய்க்கும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேறவில்லை என்பதில் வருத்தம் தான். 

ஹெலிகாப்டர் தான் பயன்படுத்தப் போகிறோம் என்ற எண்ணத்தில், நாங்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனம் [ஓட்டுனர் ஷம்பு] தவாங்க் சுற்றி முடித்தபிறகு அங்கேயே கணக்கை முடித்து விட்டுவிடுவதாகத் தான் பேசி இருந்தோம். ஆனால் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தி விட மீண்டும் ஷம்புவோடு பயணிக்க அவரது முதலாளியிடம் பேசினோம். ஓட்டுனர் ஷம்புவிற்கு அதில் அத்தனை விருப்பமில்லை! திரும்பி போகும்போது வேறு பயணிகளை அழைத்துச் சென்றால் அவருக்கு அந்த காசு கிடைக்கும் என்பது அவரது எண்ணம். எங்களையே அழைத்துச் சென்றால், நாங்கள் கொடுக்கும் காசு முதலாளிக்குச் சென்றுவிடும்....

இருந்தாலும் வேறு வழியில்லை. ஓட்டுனர் ஷம்புவின் வாகனத்தில் தான் செல்ல வேண்டும். அவரிடமும் பேசி அவர் வாகனத்திலேயே தேஸ்பூர் சென்று, கணக்கு முடித்து, அங்கிருந்து கௌஹாத்தி செல்ல வேண்டும்.  இந்த ஏற்பாடுகளை முடித்து அன்றைய தினம் பார்த்த இடங்களைப் பற்றிய எண்ணங்களோடு உறங்கச் சென்றோம்.  நானும் நண்பர் பிரமோத்-உம் உறங்கச் செல்ல, மற்ற நான்கு பேரும் அன்றைய தினத்தினை மகிழ்ச்சியோடு முடிக்க மீதி இருந்த சரக்குகளை காலி செய்தார்கள்.  இத்தனை இருந்தும் அவர்களுக்கு ஒரு வருத்தம் – அந்த வருத்தம் அருணாச்சலப் பிரதேசத்தின் நாட்டு சரக்கு அடிக்க முடியாததே.....

அந்த வருத்தத்தினை நண்பர் ஜார்ஜுடன் பகிர்ந்து கொண்டார்கள் போலும்...  அவர் எதற்கு கவலைப் படுகிறீர்கள் என அதற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.  அந்த ஏற்பாடு எங்களுக்கு இன்னுமொரு மலையாளியை அறிமுகம் செய்தது! மலையாளி எப்படி அருணாச்சல நாட்டுச் சரக்கு ஏற்பாடு செய்வார் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்! கொஞ்சம் ஸ்வாரஸ்யமான விஷயம் அது!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்....
புது தில்லி.

24 comments:

 1. ஓ... ஹெலிகாப்டர் பயணம் இல்லையா? வருத்தமான விஷயம்தான்.தம இன்னும் சப்மிட் ஆகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஏமாற்றம் தான். ஹெலிகாப்டர் பயணம் செய்ய முடியும் என நினைத்தது நடக்கவில்லை. அதுவும் இந்த மார்க்கத்தில் மலைகளுக்கு நடுவே பூட்டான் நாட்டின் Air Space-ல் ஹெலிகாப்டர் பயணிக்கும் என்று கேள்விப்பட்டதிலிருந்து இங்கே ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஆசை இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ஹெலிகாப்டர் புதிய அனுபவத்தைத் தந்திருக்கும்
  பயணிக்க இயலாதது வருந்துதற்கு உரியதுதான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. அந்த அனுபவம் கிடைக்காததில் வருத்தம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. என்ன இருந்தாலும் -
  அவரவர் கவலைகள் அவரவர்களுக்குத் தான் என்றாகின்றது..

  பயணத்தின் வர்ணனை அழகு..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. அவரவர் கவலை அவரவர்க்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. சுவாரசியமான செய்திக்காகக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. ஹெலிக்காப்டர் ஏமாற்றிவிட்டது வருத்தம் தான்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 6. அடுத்தமுறை ஹெலிகாப்டரில் பயணியுங்கள் ஜி
  மலையாளி எங்கும் இருப்பார், எதிலும் இருப்பார் ஜி

  ReplyDelete
  Replies
  1. ஹெலிகாப்டரில் பயணிக்கும் வாய்ப்பு இரண்டு மூன்று முறை நழுவிவிட்டது - இங்கேயும் ஜம்முவிலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. எத்தனை திட்டமிடல்கள் சுவாரசியம்

  ReplyDelete
  Replies
  1. திட்டமிட்டால் தான் இப்படி பயணங்கள் செய்ய முடிகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் தமிழ் மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. அனுபவங்களும் பயணங்களும் தொடர்கின்றன! ஹெலிஹாப்டர் பயணங்கள் அப்பப்போது ஆபத்தானதாஅக்வே முடிகின்றது. சில வருடங்கள் முன் சுவிஸில் எங்கள் பகுதிக்கு வந்த ஐந்து இந்திய சுற்றுலா பயணிகளும் இதே போல் விபத்தில் இறந்தார்கள்.திரில்லாக வித்தியாசமான அனுபவம் தேடி மலைகளினூடான பயணம் எப்போதும் ஆபத்தானதே!

  உங்கள் பயண அனுபவங்களோடு தொடர்கின்றேன்!

  ReplyDelete
 10. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா...

  ReplyDelete
 11. ஹெலிகாப்டர் பயணம் அமையாததது வருத்தம் என்றாலும், ஆபத்து இல்லாமல் பயணிக்க முடிந்ததே! மலையாளி அருணாச்சல நாட்டுச்சரக்கை சப்ளை செய்த கதையை அறிய ஆவல். தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி.....

   Delete
 12. ஹெலி ரொம்ப ரிஸ்க்ஜி

  தொடர்க

  தம +

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். அதுவும் ஒரு அனுபவம் கிடைத்திருக்குமே என்று தான் அதில் பயணம் செய்ய நினைத்திருந்தோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 13. ஹெலிக்காப்டர் பயணம் மிஸ் ஆனது வருத்தம் என்றாலும் அதுவும் நன்மைக்கே..அதுவும் மிகவும் ரிஸ்க் வாய்ந்த பயணம் அது.ஜி அருமையான பயணத் தொடர் தொடர்கின்றோம் ஜி.

  கீதா: இப்படித்தான் நேபால் நைமிச்சாரண்யம் சென்ற குழுவினரில் இந்த ஹெலிகாப்டர் சேவையை எடுத்துக் கொண்ட வர்களில் அதில் செல்ல இடம் இல்லாமல் ரோடு வழி சென்றவர்கள் உயிர் பிழைக்க...ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக...அதுவும் ஒரே வாரத்தில் இரு விபத்துக்கள் ..ஒரு குழு உறவினர்கள் ரோடில், ஒரு குழு விபத்தில் இறக்க...
  என்றாலும் அதுவும் ஒரு அனுபவம்தான்...ஆசை உண்டு....

  சுவாரஸ்ய நிகழ்வை வாசிக்க இதோ அடுத்த பதிவிற்குச் செல்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....