எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 11, 2016

ஃப்ரூட் சாலட் 183 – காதல் – கணவன் – மனைவி – சயன கோலத்தில் புத்தன்இந்த வார செய்தி:

Chai pe Charcha….  களம் புதிது: ஆஸ்திரேலியாவில் சாதித்த ‘சாய்வாலி’நம் நாட்டில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் தேநீருடன்தான் தொடங்குகிறது. புத்துணர்ச்சி பெறுவது முதல் எடை குறைப்புவரை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பரிமாணத்துடன் இடம்பெற்றுவிடுகிறது தேநீர். தேநீரைத் தன் உற்சாகத்துக்கு மட்டுமல்ல, வியாபாரத்துக்கான உத்தியாகவும் பயன்படுத்திவருகிறார் உப்மா. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் உப்மா விரதியின் அடையாளம் விதவிதமான சுவைகளில் தயாராகும் தேநீர் வகைகள்!

சண்டிகரைச் சேர்ந்த உப்மா, தேநீர் தயாரிப்பதற்காக ‘ஆர்ட் ஆஃப் சாய்’ வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவருகிறார். அத்துடன் தேயிலை கலவைகளை ஆன்லைனில் விற்பனையும் செய்துவருகிறார். இந்தியக் கலாச்சாரத்தில் தேநீர் குடிப்பதற்காக மக்கள் எப்போதும் ஒன்றுகூட விரும்புவார்கள்.

“இங்கே மகிழ்ச்சியான நேரங்களிலும் கடினமான நேரங்களிலும் தேநீர் தவறாமல் இடம்பெறுகிறது. ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் நான் எவ்வளவோ தேடிப் பார்த்தும் ஒரு டீயைக் குடிக்க முடியவில்லை. அப்போதுதான் டீத்தூள் கலவை தயாரிக்கும் ஐடியா பிறந்தது” என்று சொல்லும் இவர், முதலில் இந்தத் தொழிலைத் தன் குடும்ப உறவுகள், நண்பர்களிடமிருந்து தொடங்கியிருக்கிறார். பின்னர், அருகிலுள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் தேயிலைக் கலவையை விற்பனைக்கு வைத்திருக்கிறார். இன்று நிற்கக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டு இருக்கிறார்.

வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடரும் உப்மாவுக்கு, அவருடைய தாத்தாதான், மூலிகைகள், வாசனை மசாலாக்களைக் கொண்டு ஆயுர்வேத தேநீர் போடக் கற்றுத்தந்திருக்கிறார். மெல்போர்னில் ‘சாய்வாலி’ (பெண் டீ விற்பனையாளர்) என்ற பெயரில் ஆன்லைனில் தேயிலை கலவையை விற்பனை செய்துவருகிறார். அருமையான மணமும் சுவையும் ஆஸ்திரேலியர்களின் ருசியுணர்வைத் தூண்ட 26 வயதில் உப்மா, வெற்றிபெற்ற தொழில் முனை வோராக மாறியிருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான இந்திய ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் சமூக விருது வழங்கும் விழாவில், சிறந்த பெண் தொழிலதிபர் விருதை கடந்த வாரம் சிட்னியில் பெற்றிருக்கிறார். விருதைப் பெற்ற உப்மா, “ஆஸ்திரேலிய மக்கள் காபிக்கு மாற்று ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தனர். இதுவே சரியான நேரம் என்று டீ விற்பனைத் தொழிலைக் கையில் எடுத்தேன். ஆஸ்திரேலிய சமூகத்துக்கு, டீ மூலம் இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்” என்று சொல்லியிருக்கிறார்.

      தமிழ் இந்து நாளிதழிலிருந்து

இந்த வார முகப்புத்தக இற்றை:

கணவன் – மனைவி – கீ போர்டில்!


இந்த வார குறுஞ்செய்தி:

பலசானியான மனிதனைக் கூட பலவீனமாக்கும் ஆயுதம் அன்பு…

இந்த வார காணொளி:

இது ஒரு காதல் கதை. அநாவசிய வசனங்கள் இல்லாது, பின்னணியில் அற்புத இசை ஒலிக்க, மிக அழகாய் சொல்லப்பட்ட காதல் கதை.  பார்த்து ரசிக்கலாமே….


இந்த வார புகைப்படம்:

சயன கோல புத்தன்...

பொதுவாக சயனக்கோலத்தில் விஷ்ணு சிலைகள் மட்டுமே பார்த்திருக்கிறோம். இந்தியாவின் சில இடங்களில் பள்ளி கொண்ட ஈஸ்வரர் சிலையும் உண்டு – ஆந்திரத்தில் உள்ள சுருட்டப்பள்ளியில் சிவன் சயனக் கோலத்தில் இருக்கிறார்.  இதே சயனக் கோலத்தில் புத்தர் சிலை பார்த்ததுண்டா....  சமீபத்தில் தில்லியில் நடந்த தேசியக் கலாச்சாரத் திருவிழாவில் பத்து அடி நீளமான சயனத் திருக்கோல புத்தரை காட்சியில் வைத்திருந்தார்கள்.  அந்த புத்தர் சிலை இன்றைய பதிவில் உங்கள் பார்வைக்கு.....இந்த வார இசை:

மேற்கு வங்கத்தின் பாரம்பரிய கலையான புதுல் நாச் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அந்த பொம்மலாட்டம் போது பாடிய இசைக்கலைஞர்கள் பாடிய ஒரு பாடல் இந்த வார இசையாக…


இந்த வார கார்ட்டூன்:


எல்லோரையும் செல்ஃபி மோகம் பிடித்து ஆட்டுகிறது. இப்படி எல்லாருமே செல்ஃபி எடுத்துக் கொண்டால் புகைப்படம் எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள் என்ன செய்வது…. இதைச் சொல்லும் ஒரு கார்ட்டூன்…


படித்ததில் பிடித்தது:

அது ஒரு வானம் வஞ்சம் தீர்த்த வறண்ட கிராமம்!

பல குடும்பங்கள் ஊரை காலிசெய்துவிட்டு நகரத்தார் வாகனங்களுக்கு ரோடு போட சாலையோரமாய் குடிபெயர்ந்துவிட்டார்கள்!

ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் ஊரோடு ஒட்டிக்கொண்ட ஒரு சில குடும்பங்களில் ராமசாமியின் குடும்பமும் ஒன்று!

ராமசாமிக்கு மூன்று பிள்ளைகள்! இது தவிர ஒரு ஒரு தாய் ஆடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன, அதோடு நான்கு முருங்கை மரங்களும் இருக்கின்றன! ஆடும் குட்டிகளும் வருடாந்திர செலவுகளுக்கும், முருங்கை மரங்கள் வாராந்திர செலவுகளுக்கும் உதவுகின்றன! சீசன் வரும்போது ஐந்து கிலோ பத்து கிலோ என்று காய்க்கின்ற முருங்கைகள் மற்ற நாட்களில் ஒரு கிலோ இரண்டு கிலோவோடு நிறுத்திக்கொள்ளும்!

எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டால் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்! முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை, ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்செல்ல, சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே, இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார்! அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது, வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா, கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போன ராமசாமி, அய்யா மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல, ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன் இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது! தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும்! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் வரும்! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்.........

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

46 comments:

 1. கடைசி கதை சூப்பர்!😊

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி!

   Delete
 2. சயன கோலத்தில் புத்தர் காஞ்சீபுரத்தில்கூட இருந்தார். மண்ணைப்போட்டு மூடிவிட்டார்கள். சாய்வாலி முதல் அனைத்தும் அருமையாக இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. புத்தர் சிலையைப் பார்க்கும் போதே உங்கள் நினைவு தான் வந்தது ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 3. சாய்வாலி போற்றுதலுக்கு உரியவர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. அந்தக் காணொளி அருமை. ஆனால் கடைசி வரி சோக இசை ஏனோ?

  கடைசிக்கு கதை.. ஆஹா..

  புத்தியுள்ளவர்கள் பிழைப்பார்கள் என்பதற்கு அடையாளம் சாய்வாலி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. சாய்வாலி - சாதித்துவிட்டார். கதை அருமை அண்ணா..தன்வினை தன்னைச்சுடும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 7. அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 8. இந்த வார பழக்கலவை அனைத்தும் அருமை. உரையாடல் இல்லாத அந்த காதல் கதையை இசை பின்னணியில் காணொளியில் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. இதே சயனக் கோலத்தில் புத்தர் சிலை பார்த்ததுண்டா.... //
  இலங்கையில் பார்த்து இருக்கிறோம்.
  கடைசி கதை மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. அதுதான் மயேமயே என்பார்கள்.மற்றவனை ஏமாற்றினால் மற்றவனும் ஏமாற்றுவான் .
  சயனைட் கோலத்தில் உள்ள புத்தர் சிலை அஜந்தாவிலும் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. சயனைட் கோலம்! :) ஒரு சின்ன தட்டச்சுப் பிழை எப்படி மாற்றி விடுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 11. முருங்கைக்காய் கதை முன்னரே வாசித்திருக்கிறேன்...
  செல்பி சூப்பர்....
  மற்றவை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. அனைத்தும் அருமை! குறிப்பாக செல்பி ஜோக்குகளும் கடைசி கதையும். சயன புத்தர் புகைப் படத்தை வேறு எங்கோ பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 13. கதை அருமை நண்பரே.!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 14. கதை அருமை நண்பரே.!

  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் முறையாக கருத்து! :) அதற்கும் நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 15. கதம்பக் கோவை ரசித்தேன் கதை நன்றாக இருக்கிறது சாய்வாலி பிழைத்டுக் கொள்வாள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 16. சயனக்கோல புத்தர் பார்த்தது இல்லை! கடைசி குட்டிக்கதை சூப்பர்! சாயா தயாரிக்கும் பெண் பற்றிய செய்திகள் புதுமை! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 17. சயனக் கோல புத்தர் என்னை அதிர வைத்துவிட்டார் ..
  வெளிநாடுகளில் இருக்கிறார்
  ஆனால் இங்கே ?
  தம +

  ReplyDelete
  Replies
  1. இச்சிலை இங்கே தான் இருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 18. அது சயனக் கோலத்தில் ( சயனைட் அல்ல )தவறுக்கு
  மன்னிக்கவும் . auto suggestion error.

  ReplyDelete
  Replies
  1. தானாகவே மாறும்போது இப்படித்தான் ஆகிவிடுகிறது! இதில் மன்னிப்பு எதற்கு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 19. கடைக்காரர் வாங்கறதுக்கு ஒரு கல் விற்க ஒரு கல் என்று தனித்தனி கல் வைத்திருந்தாரோ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

   Delete
 20. செல்ஃபி கார்ட்டூன் அருமை. ராமசாமி கதையை ஆங்கிலத்தில் வெண்ணெயாகப் படிச்சிருக்கேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 21. சாய்வாலி சாதித்துவிட்டார்! நல்ல தொழில்....இற்றை மற்றும் குறுஞ்செய்தி அருமை...செல்ஃபி கார்ட்டூன் சூப்பர் ரசித்தோம்...காணொளியும் நன்றாக இருக்கிறது...

  கதை டாப்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 22. சுருட்டுப் பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயம் சென்றுள்ளோம். அருமையான கோயில்.

  கீதா: பல தடவை சென்றுள்ளேன் ஜி. படங்களுடன் அக்கோயிலைப் பற்றி பதிவு எழுதுவதாக உள்ளேன் ஜி.

  ReplyDelete
  Replies
  1. சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயம் பற்றி உங்கள் பதிவை படிக்க ஆர்வலுடன் நானும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 23. புத்தர் சயனக் கோலம் அருமை இதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறோம் இப்படி ஒரு படத்தை. பகிர்விற்கு மிக்க நன்றி ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....