எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 19, 2016

Sorry for the break! – பிசியோ பிசி!


அன்பின் நண்பர்களுக்கு,நலம் தானே…..  நான் இங்கே நலம். நாடு முழுவதும் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது பற்றிய பேச்சு மட்டுமே இருக்கும் வேளையில் அதை விடுத்து வேறு விஷயங்கள் பேச யாருமே இல்லை. எங்கே திரும்பினாலும் இந்தப் பேச்சு தான். அரசின் இந்த செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள்….  அது சரியா தவறா என்று சொல்லும் அளவுக்கு நான் பொருளாதார நிபுணன் அல்ல! அதனால் இவ்விஷயம் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே வலைப்பூவில் உலவுவது, குறிப்பாக நான் தொடரும் நண்பர்களின் பதிவுகளைப் படித்து கருத்து இடுவது குறைந்திருக்கிறது. எனது பதிவுகளுக்கு வரும் கருத்துகளுக்கும் பதில் எழுத முடியவில்லை.  கடந்த ஒரு வாரமாக வலையுலகப் பக்கமே எட்டிப்பார்க்காமல் வேலை.  முன்னரே எழுதி வைத்திருந்த சில பதிவுகளை தினம் தோறும், தானாகவே வெளி வரும் வகையில் சேமித்து வைத்திருந்தது தான் வந்தது. அப்பதிவுகளுக்கு வந்த கருத்துகளை மட்டும் நேற்றைய முன் தினம் வெளியிட முடிந்தது. 

மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிக்கவோ, அப்பதிவுகளுக்கு தமிழ்மணம் வாக்களிக்கவோ, கருத்துகளை எழுதவோ இயலவில்லை. எங்கே அடுத்த பயணம் சென்றுவிட்டேனோ என்று கூட உங்களில் சிலர் நினைத்திருக்கலாம்! :) சில சமயங்களில் இப்படித்தான் நினைத்தபடி இருக்க முடிவதில்லை.  மற்றவர்களின் விடுபட்ட பதிவுகளைப் படிக்கவே பத்து நாட்களாவது வேண்டும் என நினைக்கிறேன். எப்படியும் நேரம் எடுத்துப் படிக்க வேண்டும்.  படித்து விடுவேன்….. 

எனது பதிவுகளும் எழுத வேண்டும், மற்றவர்களின் பதிவுகளையும் படிக்க வேண்டும் – அலுவலக வேலைகளுக்கு நடுவே, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு பதிவுலகில் சுற்றுவது தற்போது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. விரைவில் அனைவருடைய விடுபட்ட பதிவுகளையும் படித்து விடுவேன்! “என்னுடைய பதிவுகளைப் படிக்கவோ, கருத்து இடவோ உங்களுக்கு நேரமில்லையா?” என்று யாரும் கேட்பதற்கு முன்னராகவே பதில் சொல்லும் நோக்கத்துடன் நானே முன் ஜாக்கிரதையாக இப்பதிவினை வெளியிட்டு இருக்கிறேன். 

எனது அலுவல்களும் விரைவில் முடிந்து சகஜ நிலை திரும்ப வேண்டும் என்ற ஆசை உண்டு – ரூபாய் நோட்டு பிரச்சனைகளும் விரைவில் தீரும் என்ற நம்பிக்கையும் உண்டு! 

தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

48 comments:

 1. சில சமயங்கள் எனக்கும் சொந்த வேலை மற்றும் அலுவலக வேலை அப்படித்தான் வந்துவிகிறது , Carry on !

  ReplyDelete
  Replies
  1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 2. மெதுவாக வாங்க வெங்கட். ஆபீஸ் வேலைகளின் கனம் சீக்கிரம் குறையட்டும்.

  ReplyDelete
  Replies
  1. விரைவில் குறைந்து விட வேண்டும்.... பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. மெதுவாக வாருங்கள் அண்ணா...
  நானும் உடல்நலமின்மை காரணமாக வலையில் அதிகம் உலாவவில்லை....

  ReplyDelete
  Replies
  1. அடடா.... உடல் நலமில்லையா.... கவனமாக இருங்கள் குமார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 4. முதலில் பிழைப்பு பிறகு வலைப்பூ 500,1000,2000,3000,3500 ரூபாய் பிரச்சினைகளை தீர்த்து விட்டு வாருங்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. பிரச்சனைகள் விரைவில் தீர்ந்து விடும் என நம்புவோம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. வாருங்கள்.. வாருங்கள்.. காத்திருக்கிறோம்..!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் விடுபட்ட பதிவுகளும் படிக்க வேண்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடராமன் ஜி!

   Delete
 7. Noted.Pl come to normal. All the best

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 8. உங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதில் பிஸியாகிவிட்டீர்கள் போல சரி சரி உங்களின் வேலைகளை முதலில் கவனித்து விட்டு வாருங்கள் அதற்குள் உங்கள் தளத்தில் படிக்க விடுபட்டதை நானும் படித்துவிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. பணத்தை மாற்றுவதில் பிஸி! :)) ஹா... ஹா...

   இருந்தால் தானே மாற்றுவதற்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 9. பணிகளை முடித்துவிட்டு வாருங்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. தங்களுடைய இனிய பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. உங்கள் பணிசுமைகள் குறைந்தபின் வலைபக்கம் வரலாம்.
  வாழ்க வலமுடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 12. அனைவருக்கும் வரும் பிரச்சனை தான்....பராவாயில்லை....மெதுவாக வாங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 13. வலைப்பூவின் எழுதப்படா சட்டமும் எழுதப்பட்ட சட்டமும் இதுதான்
  எவ்வளவு பிரேக் வேண்டாலும் எடுத்துக்கொள்ளலாம்
  இன்னொரு சட்டமும் உண்டு
  இதற்கென மன்னிப்பு கேட்க வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. எழுதப்படா சட்டமும் எழுதப்பட்ட சட்டமும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 14. எங்களைப் போன்று பணி ஓய்வு பெற்றோருக்கே தவிர்க்கமுடியாத பணிகள் இருக்கும்போது, பணியில் இருக்கும் தங்களைப்போன்றோர்களுக்கு நிச்சயம் பணிச்சுமை இருக்கும். ஓய்வு கிடைக்கும்போது வலையுலகம் வாருங்கள். பதிவுகளையும் பின்னூட்டங்களையும் தாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சில நாட்களாகவே படிக்க இயலவில்லை. எனது பதிவுகளும் சில நாட்களுக்குத் தடைபடலாம்! அதனால் தான் இந்தப் பகிர்வு. விரைவில் சரியாகி விடும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. 'நானும் நிறைய பேர் ஆபீஸ் வேலைகளில் பிஸியாகிவிட்டதைப் பார்க்கிறேன். பணிகளை முடித்துவிட்டு வாருங்கள்.

  கில்லர்ஜியின், 'முதலில் பிழைப்பூ, அப்புறம் வலைப்பூ'வை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பிழைப்பூவும் வலைப்பூவும்! நானும் ரசித்தேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 16. பொறுமையாக வாருங்கள்.காத்திருக்கிறோம். தம1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 18. பல நாட்கள் முன் கூட்டியே பதிவு செய்ய முடியாத நிலைதான் எனக்கும் , என் பதிவு வெளியாகிற நள்ளிரவு நேரத்தைப் பார்த்தாலே தெரியும் !
  பணியில் இருக்கிற நமக்கு சிரமம் இருக்கத்தான் செய்கிறது ,வலையுலக உறவகள் தரும்உற்சாகம் விழித்திருந்து எழுத தூண்டுகோலாய் இருக்கிறது !
  லேட்டா வந்தாலும் பரவாயில்லை ,லேட்டஸ்ட் பதிவுகளுக்கு வாங்க ஜி :)

  ReplyDelete
  Replies
  1. லேட்டஸ்ட் பதிவுகளுக்கு வாங்க! : வருகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 19. Replies
  1. தங்களது மீள் வருகைக்கு மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. சகஜ நிலை திரும்பி வர வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமாரன்.

   Delete
 21. வேலைதானே முக்கியம், முடிச்சிட்டு மெதுவா வாங்க !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 22. நாங்களும் வேலைப்பளுவால் வர இயலாமல் போனது. உங்கள் பழைய பதிவுகளையும் வாசிக்க வேண்டும். தங்களது பணிச்சுமையும் தெரிகிறது. தொடர்கிறோம். நாங்களும் வந்தாயிற்று...

  ReplyDelete
  Replies
  1. இப்போது பலருக்குமே இந்த வேலைப்பளு இருப்பது புரிகிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 23. தவிர்க்க இயலாத காரணங்கள் இடைவெளியை ஏற்படுத்தி விடுகின்றன,. சிறிது இடைவேளையும் நல்லதுதான்.

  ReplyDelete
  Replies
  1. சிறிது இடைவேளையும் நல்லது தான்! உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 24. நீண்ட தூரப் பயணத்திற்குப் பின்
  நானும் இன்னும் சரியான ஒரு நிலைக்கு
  வரவில்லை.
  இன்னும் ஒருவாரத்தில் நானும்
  சரியாகி விடுவேன் என நினைக்கிறேன்

  சீக்கிரம் சகஜ நிலை வர
  வழக்கம்போல்
  அற்புதப் பதிவுகள் தர
  வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 25. பயணம் முடித்து தமிழகம் திரும்பி விட்டீர்களா..... நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகம் வந்தது எப்படி இருக்கிறது.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....