எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 5, 2016

தேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள் – மின்னூலாக….


அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கடிதம் எழுதும் முயற்சி. தில்லி வந்த புதிதில் அப்பா-அம்மாவிற்கு ஒவ்வொரு வாரமும் கடிதம் எழுதி வந்திருக்கிறேன். நிறைய கடிதங்கள் எழுதுவார். உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதுவது அவருக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதமாவது எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். பல சமயங்களில் தன்னுடைய எண்ணங்களை கடிதம் மூலம் வெளிப்படையாக எழுதி அதனால் மனஸ்தாபங்களும் உண்டானதுண்டு. தில்லி வந்து, பணிக்குச் சேர்ந்த புதிதில் எனக்கும் நிறைய கடிதங்கள் எழுதுவார். அதற்கு பதில் கடிதங்களும் நான் எழுதியதுண்டு. குடும்பத்தினர் தவிர நண்பர்கள், குறிப்பாக கல்லூரி நண்பர்களுக்கும் கடிதம் எழுதியதுண்டு. 

தொலைபேசி, அலைபேசி, சமூக வலைத்தளங்கள், Face Book, WhatsApp என வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கடிதம் எழுதும் கலையையே பலரும் மறந்து விட்டோம். தபால் துறையே இழுத்து மூடிவிடுவார்களோ என நினைக்கும் அளவுக்கு கடிதம் எழுதும் பழக்கம் குறைந்திருக்கிறது – அலுவலகங்கள் தவிர வேறு யாருமே கடிதங்கள் எழுதுவதில்லை. நானும் கடைசியாக கடிதம் எழுதியது எப்போது என்று எத்தனை சிந்தித்தாலும் நினைவுக்கு வரவில்லை. கடிதம் எழுதுவது பற்றிய சிந்தனை கூட வருவதில்லை என்பது தான் சோகம். எனது கடிதங்கள் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்.

இப்போது இந்த கடிதம் எதற்கு என்ற விஷயத்துக்கு வருவோம்……

வலைப்பூ என ஆரம்பித்து ஏழு வருடங்கள் முடிந்து எட்டாம் ஆண்டாக எழுதிக் கொண்டிருப்பது பற்றியும், 1200 பதிவுகள் எழுதிவிட்டது குறித்தும் சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  இதெல்லாம் மனதுக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியைத் தரும் விஷயம்.  பணிச்சுமைகளுக்கு இடையே, தனிமையில் வீட்டில் இருக்கும் போது எனக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு வலைப்பூவில் எழுதுவதும், மற்ற நண்பர்களின் வலைப்பூக்களில் வரும் படைப்புகளைப் படித்து கருத்து எழுதுவதும் தான்.  அப்படி எழுதும் எழுத்துகளை அச்சில் பார்ப்பது என்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை….

எனது பயணக் கட்டுரைகளை புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று என்னிடம் பலரும் சொல்லும் போது, எனக்கும் ஆசை உண்டாகும்.  எனது மனைவி, பதிவுலக நண்பர்கள், மற்ற நண்பர்கள் என பலரும் இப்படிச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்றாலும் புத்தகமாக வெளியிடாமல் இதுவரை அந்த யோசனையிலேயே இருக்கிறேன்.

நம் எழுத்துகளை புத்தகமாக வெளியிடுவதில் சில சிக்கல்கள் உண்டு. நமது எழுத்துகளை அச்சிடுவதற்கு ஒரு பதிப்பகம் தயாராக இருக்க வேண்டும், அவர்கள் இஷ்டப்படி மாற்றாமல் நாம் எழுதுவதை அப்படியே வெளியிட மனது வேண்டும், மேலும் புத்தகம் வெளியிட செலவும் செய்ய வேண்டும், இப்படி வெளியிட்ட புத்தகங்கள் விற்பனையும் ஆக வேண்டும்…. இப்படி பல விஷயங்கள் அதில் உண்டு.

புத்தகமாக அச்சில் வெளியிடுவதில் சிக்கல்கள் இருந்தால் மின்னூலாகவாது வெளியிடலாமே என்று சொல்ல, இதுவரை இரண்டு மின்னூல்கள் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது – அந்த நூல்கள் – ஏரிகள் நகரம் மற்றும் மத்தியப் பிரதேசம் அழைக்கிறது – ஆகிய இரண்டும் தான். ஏரிகள் நகரம் இன்று வரை 9659 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசம் அழைக்கிறது மின்னூலுக்கு அத்தனை வரவேற்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் – 2519 முறை மட்டுமே தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.  
இப்போது மகிழ்ச்சியான ஒரு செய்தி – எனது மூன்றாவது மின்னூல் நேற்று வெளிவந்திருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம் சென்று வந்த அனுபவங்களை என்னுடைய வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன். அந்த தொகுப்பு இப்போது “தேவ் பூமி ஹிமாச்சல் – பயணக்கட்டுரைகள்” என்ற தலைப்பில் மின்னூலாக வெளியாகியிருக்கிறது.  தன்னுடைய பணிச்சுமைகளுக்கு இடையே தமிழ் மின்னூல்களை வெளியிட்டு வரும் நண்பர் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது குழுமத்தினருக்கு எனது மனம் நிறைந்த நன்றி….

இந்த மின்னூலை Kindle கருவிகள், Android அலைபேசிகள், PDF வடிவம் என எதிலும் தரவிறக்கம் செய்து படிக்க முடியும். மின்னூலை தரவிறக்கம் செய்ய கீழே கொடுத்திருக்கும் சுட்டி மூலம் வேண்டிய வடிவத்தில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்…. எனது வலைப்பூவின் வலது ஓரத்திலும் இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி தந்திருக்கிறேன்.


இந்த கடிதம் மூலம் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.  தொடர்ந்து பதிவுகள் மூலம் சந்தித்து வந்தாலும் இப்படி ஒரு கடிதமாக எழுதுவதும் நல்ல உணர்வையே தருகிறது.  வாரத்திற்கு ஒரு கடிதமாவது எழுத வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. பதிவாக இல்லாவிடினும், கடிதம் எழுதி யாருக்காவது அனுப்ப வேண்டும் என எண்ணுகிறேன். எந்த அளவிற்கு இதை செயல்படுத்துவேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கடிதம் எழுதுகிறேனோ இல்லையோ, பதிவுகள் எழுதுவதில் தடை இருக்காது – அலுவல்கள், பயணங்கள் இருக்கும் சமயம் தவிர மற்ற நாட்களில் பதிவுகள் தொடர்ந்து வரும்!

எனது இந்த மூன்றாவது மின்னூலை தரவிறக்கம் செய்து படிப்பதோடு, மற்ற நண்பர்களுக்கும் தரவிறக்கம் செய்து படிக்க உதவுங்கள் – ஹிமாச்சல் பிரதேசத்தின் இந்த பகுதிகளுக்கு பயணம் செய்யும் போது, அவர்களுக்கு இந்தப் பயணக் கட்டுரைகள் உதவியாக இருக்கலாம்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

30 comments:

 1. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. மூன்றாவது மின்னூலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
  கடிதம் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்த காலம் கல்லூரியில் படித்த காலம்....
  இப்போது எல்லாம் வாட்ஸப்பில் போகிறது...
  தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 4. தங்களது எழுத்துகள் இன்னும் பல மின்நூல்களை உருவாக்கட்டும் ஜி
  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. Venkat nice to see you with letter .you are right. Letter writing will start and stop at school syllabus very soon.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜூ.

   Delete
 6. எனக்கும் எனது சில படைப்புகளை மின்னூலாக்க விருப்பம் எப்படி என்பது தெரியவில்லை. பிரதி லிபியில் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டு சில சந்தேகங்களைத் தீர்க்க அவர்கள் பெங்களூரிலிருப்பதால் வர அழைப்பு விடுத்துஇருந்தேன் அவர்களும் வருவதாகச்சொல்லி இதுவரை வரவில்லை. இப்படி நான் இருக்கும் போதுமூன்று படைப்புகள் மின்னூலாக்கி வெளியிருப்பது பாராட்டுக்குரியது

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்..... பாருங்கள் ஐயா.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. வாழ்த்துக்கள். கடிதப் போக்குவரத்து நிலைத்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். (காயத்தையும்) அடிக்கடி எடுத்துப் படிக்கலாம். நேரில் பேசுவதுபோன்றே இருக்கும். அது 20 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. மிக்க ஸந்தோஷமும், வாழ்த்துகளும். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா..

   Delete
 11. பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் !

  வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 12. Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. விரைவில் நூல் வடிவிலும் வரும் என்றே நம்பகிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. நூல் வடிவில் வருவது சந்தேகமே.....


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
  2. கிண்டிலில் முயற்சிக்கிறேன்

   தம +

   Delete
  3. நன்றி மது. படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 14. வாழ்த்துகள் ஜி!!பாராட்டுகளும்! மேலும் மேலும் தங்கள் பயணக் கட்டுரைகள் வெளிவர வேண்டும்.

  கீதா: வெங்கட்ஜி யாராவது என்னிடம் இந்த ஊர் போகப் போகிறோம் என்று சொன்னால், வட இந்தியா என்றால் உடனே நான் உங்கள் தள முகவரி கொடுத்து பார்க்கச் சொல்லி விடும் வழக்கம். இப்படித்தான் பஞ்ச்த்வாரகா போக வேண்டுமெ என்று சொன்ன இரு குடும்பங்களுக்கு உங்கள் தள முகவரி கொடுத்துப் பார்த்து விவரங்கள் எடுத்துக் கொள்ளச் சொன்னேன்.

  வாழ்த்துகள் பாராட்டுகள் ஜி!! வளரட்டும் தங்கள் பயணங்களும் கட்டுரைகளூம்!!!

  ReplyDelete
 15. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி.

  முடிந்த அளவிற்கு பயணங்கள் பற்றி எழுத வேண்டும் என்பதே விருப்பம். பார்க்கலாம் எவ்வளவு பயணங்கள் செய்ய முடிகிறது என! இந்த வருடம் சென்று வந்த பயணங்கள் பற்றி இன்னமும் எழுத ஆரம்பிக்கவே இல்லை....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....