திங்கள், 31 அக்டோபர், 2016

லூசாடீ நீ!தீபாவளி முடிந்து விட்டது. தீபாவளி நினைவுகள் இன்னும் விட்டு விலகவில்லை. குறிப்பாக இரண்டு நிகழ்வுகள்..... 

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் அத்தனை ஆர்வம் இல்லை. சிறு வயதில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கினாலே நிறைய இருக்கும் – அதில் கொஞ்சம் எடுத்து கார்த்திகைக்கு எடுத்து வைத்து விடுவார்கள். மீதியிருப்பதை மூன்று பங்காகப் பிரித்து எனக்கும் சகோதரிகளுக்கும் கொடுப்பார் அம்மா.  அப்போது பட்டாசு நிறைய இல்லையே என ஏக்கம் இருந்தாலும், இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் என்றாலும் வாங்கத் தோன்றவில்லை. மகளுக்காக கொஞ்சம் வாங்கித் தானே ஆக வேண்டும். பட்டாசு வாங்க மகளை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். திருவரங்கத்தின் வெள்ளை கோபுரம் வழியே நடந்து கொண்டிருந்தேன்.  நான் அன்று அணிந்திருந்த டி-ஷர்ட்டில் ஒரு யானையின் ஓவியம் வரைந்திருக்கும். நான் மகளுடன் பேசியபடியே நடந்து கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து ஒரு குரல் – அண்ணா.....என்று அழைக்க திரும்பிப் பார்த்தேன். அங்கே எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். பார்க்கும்போதே மனநிலை வளர்ச்சி இல்லாத சிறுவன் என்பது தெரிந்தது. எதற்கு அழைத்தான் என யோசித்தபோது, அவனே அருகில் வந்து, என் டி-ஷர்ட்டில் இருக்கும் யானையைத் தொட்டு, இது என்ன?என்று கேட்டான்.

மகள் சற்றே கலவரத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, நான் “என்ன கண்ணா, இது என்ன என்று தானே கேட்டாய், இது யானைஎன்று சொல்ல, மீண்டும் கேட்டான் – “எத்தனை யானை?என்று கேட்க, ஒரு யானை என தொடர்ந்து பதிலளித்தேன்.  தொடர்ந்து கேள்வி கேட்டபடியே அவன் நடக்க நானும் பதில் சொல்லியவாறே நடந்து கொண்டிருந்தேன்.  யானையை அச்சிறுவனுக்கு பிடித்திருந்தது போலும்...  சட்டையில் இருந்த யானையைத் தொட்டபடியே சில அடிகள் எங்களோடு நடந்து பிறகு விட்டு விலகினான். நானும் மகளும் அச்சிறுவனைப் பற்றிப் பேசியபடியே நடந்தோம். 

பட்டாசுகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.  எங்கள் வீடு இருக்கும் சாலையில் ஒரு வீட்டின் வாசலில் சிறுவன் அமர்ந்து கொண்டிருந்தான்.  அந்த சிறுவனுக்கும் மனநிலை சரியில்லை. முன்னரே பல முறை பார்த்திருக்கிறேன். போகும் போதும் வரும்போதும் ஒரு குழந்தைப் புன்னகை புரிவான். யாரைப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு.  நானும் ஒன்றிரண்டு முறை சிறுவனுக்கு டாட்டா காண்பித்து வந்ததுண்டு. ஆனால் நேற்று அவனைப் பார்த்தபோது மனதுக்குக் கஷ்டமாகி விட்டது. காரணம் சிறுவன் அல்ல... அவன் உடன் பிறந்தவர்கள்.....சிறுவன் வாசல் திண்ணையில் அமர்ந்திருக்க, அவனது சகோதரனும், சகோதரியும் வாசலில் வெடி வெடித்துக் கொண்டிருந்தார்கள். சட்டென்று அச்சிறுவன் பட்டாசு ஒன்றை வாயில் வைத்துவிட, அவனது சகோதரனும், சகோதரியும் அதைப் பார்த்து பட்டாசை வாயிலிருந்து எடுத்துத் தூக்கிப் போட்டார்கள். எத்தனை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு அடுத்த செயல்கள் மனதை மிகவும் பாதித்தன.....

மனநிலை சரியில்லாத அச்சிறுவனை அவனது சகோதரியும், சகோதரனும் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக அவனது சகோதரி ‘பட்டாசு வாயில வைப்பியா, வைப்பியா? என கேட்டுக் கேட்டு அடிக்க, அச்சிறுவன் மனநிலை சரியில்லாதவனா இல்லை அவன் சகோதரி மனநிலை சரியில்லாதவளா என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. சிறுவனுக்கு பட்டாசு, அதில் இருக்கும் மருந்து பற்றியோ, அது தனக்குக் கேடு தரும் என்பதோ தெரியாது.  ஆனால் தெரிந்த அவனது சகோதரி சிறுவனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் – அதை விட்டு அவனை அடிப்பதில் என்ன அர்த்தம்.... 

எனக்கு வந்த கோபத்தில், “லூசாடி நீ?என்று கேட்கலாம் என்று தோன்றியது. என்றாலும், அப்படி கேட்காமல், “ஏம்மா அடிக்கற, அடிக்காதேஎன்று சொல்லிவிட்டு வந்தேன். 

இப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதிக அளவு பொறுமை வேண்டும். பல சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்குத்தான் மனநிலை சரியில்லாதவர்கள் நடந்து கொள்வார்கள் என்றாலும் பார்த்துக் கொள்பவர்கள் பொறுமையோடு நடக்க வேண்டும்.  சொல்வது எளிது தான் என்றாலும், வேறு வழியில்லையே.....  அதிலும் அவர்களை அடிப்பது எந்த விதத்திலும் சரியில்லையே....

அன்றைய நாள் முழுவதுமே இந்த இரண்டு நிகழ்வுகளுமே மனதை விட்டு நீங்கவில்லை...... ஆண்டவன் இப்படியான மனிதர்களை படைக்க வேண்டாம். இப்படிப் படைப்பதற்கும் அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்கள் காரணம் என்று சொன்னாலும் இப்படி படைக்காமல் இருக்கலாமே....  என்னவோ போங்க!

மீண்டும் ச(சி)ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து......

39 கருத்துகள்:

 1. //ஆண்டவன் இப்படியான மனிதர்களை படைக்க வேண்டாம்// சரியாச் சொன்னீங்க!! 😔:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருத்தம் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 3. பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்தவர்களைப் பார்த்துக் கொள்ள ஒரு மனப் பக்குவம் வேண்டும்
  வேதனையாக இருக்கிறது ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி ஒரு மனப் பக்குவம் பலருக்கும் இல்லை என்பது தான் சோகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. வருத்தப்படவைக்கும் சம்பவம்.

  எனக்குத் தெரிந்த இருந்து மூன்று இடங்களில் மிகவும் கஷ்டப்பட்டு, ஸ்பெஷல் கவனங்கள் கொடுத்து நல்ல முறையில் 75% நார்மலாக இருக்குமாறு வளர்த்து வருபவர்களைத் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெகு சில இடங்களில் மட்டுமே நல்ல கவனிப்பு இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. மன நிலை சரியில்லாதவர்களையும் மிகவும் வயதான தாய்-தந்தையையும் பார்த்துக் கொள்ளபவர்களுக்கு பெரும் மனோ திடம் வேணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 6. >>> அச்சிறுவன் மனநிலை சரியில்லாதவனா.. இல்லை, அவன் சகோதரி மனநிலை சரியில்லாதவளா?..<<<

  பலரும் இப்படித்தான் இருக்கின்றார்கள்.. கனிவு என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கின்றது..

  பதிவு மனதை நெருடுகின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனிவு என்றால் என்னவென்றே தெரியாது... அப்படித்தான் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 7. இவர்களைக் கையாள‌ அசாத்திய பொறுமை வேண்டும். அது இல்லாதபோது இப்படித்தான் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அசாத்திய பொறுமை.... உண்மை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

   நீக்கு
 8. உங்களின் இந்தப் பதிவு மிகவும் மனக கஷ்டத்தைக் கொடுத்தது. எங்கள் தூரத்து உறவில் இதுபோல இருந்த சிறுவனை இல்லத்தில் சேர்த்து அவன் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டான்.ஆனாலும் அவன் நினைவு வரும்போது மனம் வருந்தவே செய்கிறது.ஒருமுறை மனநல காப்பகத்திற்குச் சென்றிருந்தபோது வாலிப வயதில் இருக்கும் ஆண்கள் பெண்கள் கூட குழந்தைபோல நடந்து கொள்வதைப் பார்க்கும்போது ஏன் இறைவனுக்கு இப்படி ஒரு குரூர புத்தி எனக் கூடத் தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா....

   நீக்கு
 9. ji mentally retarded girls/women face additional risk...
  they are often gangraped...
  atleast the concerned municipality or corpn can spot out these girls and entrust them to good homes...
  most of them do not help these mentally retarded women..
  but keen to rape them in the corporatipon vehicles...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

   நீக்கு
 10. இதுபோன்ற சிலரைப் பார்த்திருக்கிறேன் இவர்களைப் பராமரிப்பவர்கள் பற்றி ஒரு சிறு கதை எழுதி இருக்கிறேன் சுட்டி இதோ நேரம்ம் இருந்தால் வாசித்துப்பாருங்கள் /http://gmbat1649.blogspot.in/2012/03/blog-post_13.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பதிவும் வாசிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. மனதுக்குக் கஷ்டமான செய்திதான். அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் எழுதியிருப்பது உண்மை. ஆண்டவன் இப்படிப் பட்டவர்களைப் படைத்தாலும், அவர்களைப் பொறுமையாகக் கையாளுபவர்களோடு பிறக்கவைக்கக்கூடாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 12. மனநிலை சரியில்லாத குறையை அவர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் ...மகிழ்ச்சியாகவே அவர்கள் இருக்கிறார்கள் !நாம்தான் ......:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 13. பதிவு படிக்க மிகவும் வருத்தமாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 14. இந்த மாதிரி ஆடிஸ்ட் குழந்தைகளுக்கு தன்னை ஒருவர் அடிக்கிறார் என்றோ எதற்காக அடிக்கிறார் என்றும் தெரியாது.
  இன்னொன்று. வலியை நாம் அதாவது நார்மல் மனிதர்கள் எப்படி உணர்கிறோமோ அந்த விதத்தில் இவர்கள் உணர்வதும் இல்லை.

  தவறுக்காக தண்டனை. நாம் அடித்தோம் என்று நமக்கு ஒரு மனத்திருப்தி மட்டுமே நமக்கு இருக்கலாம். அதற்கு மேல் அது எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை.

  சுருக்கமாக சொல்லப்போனால், ரிவார்டு பனிஷ்மென்ட் பாடேர்ன் இங்கே பயன் தராது.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   நீக்கு
 15. இதற்கு மூல காரணம் கர்மா தியரியோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  விஸ்வநாதன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஸ்வநாதன் ஜி!

   நீக்கு
 16. 'நான் இன்னொன்றும் சொல்லறேன். எங்க ஆபீஸ் (தலைமையகம்) பக்கத்துல ஒரு மன'நிலை கொஞ்சம் சரியில்லாதவன் சுத்திக்கிட்டிருந்தான். கம்பெனி உரிமையாளர் அவனை ஒரு'நாள் பார்த்தபோது, சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கிறாயா என்று கேட்டார். அவனும் சரி என்று சொன்னான். சிறிய வேலை (டிராலியில் சாமான்'களை எடுத்து கஸ்டமர்கள் காரில் வைப்பது) ஒன்றை அவனுக்குக் கொடுத்து சம்பளம் கொடுத்தார். நிறைய கஸ்டமர்கள், அவனைத்தான் prefer செய்வார்கள். அவனுக்கு டிப்ஸும் கொடுப்பார்கள். (கொஞ்சம் மன'நிலை சரியில்லாதவன்'தான்). அவனைப் பார்க்கும்போதெல்லாம் கம்பெனி உரிமையாளரின் பரந்த மனதை நினைவுபடுத்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல மனம் கொண்ட அந்த உரிமையாளருக்கு ஒரு பூங்கொத்து.....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 17. இதுபோன்ற செய்திகளை கேட்கும்போது வருத்தமாகவும் நெருடலாகவும் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   நீக்கு
 18. படிக்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. இதுபோன்ற பிள்ளைகளை பார்க்கும்போது, படைத்தவன் மேல் கோபம் கோபமாய் வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படைத்தவன் மேல் கோபம்.... அதே உணர்வு தான் எனக்கும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 19. மன நிலை சரியில்லாதவர்களைப் பார்த்துக் கொள்வதும் சரி, அவர்களுடன் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் சரி சமாளித்து வாழ we need time, patience and energy a lot, lot, lot....

  பாவம் அந்தச் சிறுவர்கள்.மனம் வேதனைப்படுகிறது.....என்னதான் போன ஜென்மம் கர்மா, பாவ புண்ணியம், மரபணு, கர்பத்தில் ஏற்பட்ட கோளாறு என்று ஆயிரத்தெட்டு காரணங்கள் சொன்னாலும் படைப்பின் வினோதங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதோடு சில சமயங்களில் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 20. இப்படி மனநிலை சரியில்லாதவர்களை வளர்ப்பது கஷ்டமான விஷயம் தான். அதிக அளவு பொறுமை வேண்டும் - முற்றிலும் உண்மையான வார்த்தைகள். மனதைத் தொட்ட பகிர்வு. நண்பர் திரு GMBயின் "ஜாக்கி மணியும் பந்தயக் குதிரையும்." கதை மனத்திரையில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அருமையான கதை.
  தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்

  விஜயராகவன்

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....