வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஃப்ரூட் சாலட் 179 – அரசுப் பேருந்து - மரியான் - குரு சிஷ்யன்

இந்த வார செய்தி:

திருப்பூர்: கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள், 'சிக்ஸ் டிராக் ஆடியோ சிஸ்டம், எல்.இ.டி., டிவி' என, திருப்பூருக்கு வரும் அரசு பஸ்சை, பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

அரசு பஸ் என்றால் திறக்க முடியாத ஜன்னல், கிழிந்த இருக்கைகள், ஓட்டை, உடைசல் என, கற்பனை விரியும். மேலும், டீசல் சிக்கனம் என்று கூறி, பஸ்சை உருட்டுவதால், பயணிகள் தனியார் பஸ்களை நாட துவங்கினர். இந்நிலையில், திடீர் மாற்றாக, தேவகோட்டையில் இருந்து, திருப்பூருக்கு வந்து செல்லும் ஒரு அரசு பஸ், தனியார் பஸ்களை மிஞ்சும் வகையில் ஜொலிப்பது,பயணிகள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கறை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து, காலை, 8:00 மணிக்கு புறப்படும், அரசு பஸ், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வழியாக மாலை, 5:00 மணிக்கு திருப்பூர் வந்தடைகிறது. பஸ்சில், இரண்டு, 'எல்.இ.டி., டிவி' 5.1, எம்.பி., 'டிவிடி' எட்டு இடங்களில், 'ஸ்டீரியோ, வூபர்' பொருத்தப்பட்டு, சினிமா திரையிடப்படுகிறது. இதற்காக, 10, 'பென் டிரைவ்' வைக்கப்பட்டு உள்ளன; தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் பயணிகளுக்கு ஏற்படுகிறது. பஸ்சின் முன் கண்ணாடியில், புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஸ் சக்கரங்களில், 'கிளாசிகல் வீல் கப்' நான்கு புறமும், அலங்கார வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. பஸ் புறப்படுகையில், விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து, பயணிகளை திரும்பி பார்க்க வைக்கிறது. அரசு பஸ் தானே என்று அலட்சியம் காட்டாமல், அக்கறையோடு, பஸ்சில் இவ்வளவு வசதிகளை செய்து, தினமும் பராமரிப்பது, வேறு யாருமல்ல... பஸ்சில் பணிபுரியும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தான்.

திருப்தி:

பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'எங்களது சம்பளத்தின் ஒரு தொகை மற்றும் ஊக்கத்தொகையை சேர்த்து, அதிகாரிகளின் அனுமதியோடு, பஸ்சை அழகுபடுத்தி உள்ளோம். தினமும், பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்தியவுடன், சுத்தம் செய்கிறோம்; இவ்வாறு செய்வதால், வேலையில் ஒரு திருப்தி கிடைக்கிறது' என்றனர்.

அரசு பஸ், 'பளபள'வென காட்சியளிப்பதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; இந்த பஸ்சின் வருகைக்காக காத்திருப்போர் ஏராளம். அரசு பஸ்களை, பயணிகள் புறக்கணித்து வந்த நிலையில், ஓட்டுனர், நடத்துனர்களின் செயல்பாடு பாராட்டும் வகையில் இருக்கிறது.

அந்த பாராட்டுக்குரிய ஊழியர்கள்:

முருகேசன் - தேவகோட்டை, ரங்கராஜ் - மணப்பாறை, கண்ணன் - தேவகோட்டை,-
பாரதிதாசன் - சிவகங்கை.

     தினமலர், இணைய பக்கத்திலிருந்து…

அரசுப் பேருந்தாக இருந்தாலும் இத்தனை அக்கறையுடன் பணி புரியும் அந்த ஊழியர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து.

இந்த வார முகப்புத்தக இற்றை:

வாரா வாரம் சென்னையிலிருந்து வெள்ளி இரவு ஊர் சென்று ஞாயிறு இரவு ஊர் திரும்பும் நபர்கள் நிறையவே உண்டு…. அவர்களைப் பற்றிய இந்த இற்றை – இங்கேயும்…

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன……

இந்த வார கார்ட்டூன்:

தமிழ் இந்துவில் வெளி வந்த கார்ட்டூன் ஒன்று…..


இந்த வார காணொளி:

சற்றே நீண்ட காணொளி – 9.38 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி என்றாலும் பார்க்க வேண்டிய குறும்படம்.  சகோதரி மேல் அளவுக்கு அதிகமாக பாசம் கொண்ட ஒரு சகோதரனின் கதை…  பாருங்களேன்.



இந்த வார ஓவியம்:

சில வாரங்களுக்கு முன்னர் அமித் எனும் சிறுவன் வரைந்த பென்சில் ஓவியங்களைப் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்.  அந்த சிறுவன் வரைந்த இன்னுமொரு அசத்தல் ஓவியம் இந்த வார ஓவியமாக…..


இந்த வார இசை:

மரியான் படத்தில் வரும் “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன” பாடல் பிடித்த பாடலில் ஒன்று.  அப் பாடலை வயலினில் வாசித்து இருக்கிறார் ரூபா ரேவதி என்பவர்.  கேளுங்களேன்….



இந்த வார குறுஞ்செய்தி:

வேலை பார்க்குற இடத்தில, வேலையே பாக்காதவனுக்கு ஒரு பிரச்சனையுமில்லை….  வேலை பார்க்குறவனுக்குத் தான் பிரச்சனையே!

படித்ததில் பிடித்தது:

தன் குருவிடம் ஒருவர் கேட்டார்,

என்னை பலரும் அவமானப்படுத்துகிறர்கள். நான் என்ன செய்வது..?

குரு சொன்னார், “அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்”.

என்னால் முடியவில்லையே”!

அப்படியானால் அவற்றைக் கடந்து செல்லுங்கள்”.

அதுவும் முடியவில்லையே!

சரி! அப்படி யென்றால் அவற்றைக் கண்டு சிரித்து விடுங்கள்.

குருவே! அதுவும் முடியவில்லை!

குரு சொன்னார்,

அவமானங்களை உங்களால் நிராகரிக்க முடியவில்லை, கடக்க முடியவில்லை, கண்டு சிரிக்க முடியவில்லை என்றால் அந்த அவமானங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. முதல் செய்தியை நானும் பாஸிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்!

    அனைத்தையும் ரசித்தேன். குருவுக்குக் கோபம் வந்துவிட்டது போலும்.

    தம இன்னும் சப்மிட் ஆகவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த.ம. இப்போது சப்மிட் ஆகிவிட்டது. முதல் செய்தி நீங்களும் பாசிட்டிவ் செய்திகளில் சேர்க்கலாம் என நினைத்தேன்...

      குருவுக்கு கோபம் - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  4. அனைத்தையும் படித்தேன். ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதாகத்தான் தகவல்கள் இருந்தன. அரசு பேருந்தின் ஊழியர்கள், சகோதர பாசம் சொன்ன குறும்படம், இன்னும் கொஞ்ச நேரம் கேட்கமாட்டோமா என்கிற ரூபா ரேவதியின் வயலின், கார்ட்டூன், குரு சிஷ்யன் கதை அனைத்தும் தூள்..!
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு

  5. வணக்கம் ஜி
    நான் கேன்சலில் நாட்டுக்கு (தேவகோட்டைக்கு) வருவதால்தான் இப்படி எல்லாம் மாற்றம் நிகழ்கிறது ஜி…

    ஓவியம் ஸூப்பர்
    இரண்டாவது காணொளி, கேளொலி கண்டு கேட்டேன்.
    முதலாவது காண்பேன்

    //வேலை பார்க்குற இடத்தில, வேலையே பாக்காதவனுக்கு ஒரு பிரச்சனையுமில்லை….  வேலை பார்க்குறவனுக்குத் தான் பிரச்சனையே//
    குறுஞ்செய்தி உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் தேவகோட்டைக்கு வருவதால் இப்படி மாற்றம்! இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. நல்ல செய்திகள். ஓவியம், பாடல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  7. எல்லாமே நல்லா இருந்தன. நன்கு வரையும் பையனின் தலையில் என்னவாக வருணும்னு விதி இருக்கோ. அந்த அஅரசுப்பணியாளர் பேருந்து ஊழியர்கள்தான் அரசு அலுவலர்களிலும் கொஞ்சம் உருப்படியானவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை விதைக்கிறார்கள். காது வளர்ந்துடப்போகுதேன்னு ஒட்டுக் கேட்பதை நிறுத்திவிட்டீர்களா.. அல்லது ஹெட் போன் மாட்டிக்கொண்டு உங்கள் உலகத்தில் ஆழ்ந்துவிட்டீர்களா... ராஜா காது கழுதைக் காது பகுதியை ரொம்ப நாளாக் காணோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜா காது கழுதைக் காது - :)))

      வெளியே செல்வது குறைந்திருக்கிறது - நேரம் இல்லாமையால். விரைவில் எழுதுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. ஃப்ரூட் சாலடில் எல்லாமே ரசிக்க வைக்கிறது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. அரசாங்க சொத்தை தன் சொத்தாக நினைத்து அதை அபகரிப்பவர்கள் மத்தியில் அதை அபகரிக்காமல் தன் சொந்த வாகனங்களை போல பராமரித்து வருபவர்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இப்படி அவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் இப்படி கருதி தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்வது போல தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தாமாக வைத்து கொண்டால் நாடு அழகாக இருப்பதோடு மக்களும் மிக ஆரோக்கியமாக வாழலாம்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது போல நாட்டையும் சுத்தமாக வைத்துக் கொண்டால்...... இதைத் தான் நானும் சொல்கிறேன் - ஆனால் எவருக்குமே இதில் அக்கறை இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. bro similarly some govt school teachers in tamil nadu spend their own money to buy
    educational materials for poor students some offer food and shelter
    let us honour them...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்றவர்கள் அதிகமாக இருந்தால் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

      நீக்கு
  11. overcoming insults requires maturity.
    soon good minded people would ignore insults...
    and come up in life....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

      நீக்கு
  12. well are you aware of the latest news in tamil film music world....
    a r rahman is not preferred...anirudhh santhosh narayan some new music directors and imam are only given chances...
    time changes ji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் சினிமா பற்றி மட்டுமல்ல, சினிமா பற்றிய எனது அறிவு வெகு குறைவு! அத்தனை ஈடுபாடு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Nat Chander.

      நீக்கு
  13. அரசாங்க ஊழியர்களிலும் இத்தனை ஈடுபாடுடன் வேலை செய்பவர்கள் அதுவும் தங்கள் சொந்தப்பணத்திலிருந்து என்றும் இருக்கிறார்கள். பாராட்டப்படவேண்டியர்வகள்.

    அமீத்தின் படம் அருமை அவரது படங்களை நீங்கள் பகிர்ந்து கொண்டது நினைவில் உள்ளது. அந்தக் குட்டிப்பையன் மேன்மேலும் வளர்ந்திட வாழ்த்துகள்

    காணோளி அருமை. வயலின் இசையும் அருமை.கதையும் செம. அனைத்தும் வழக்கம் போல் சிறப்புதான்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....