எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 12, 2016

நவராத்ரி – ஓவியங்கள் – ராவண வதம்


இரண்டு நாட்களுக்கு முன்னர் நவராத்ரி பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன் – மீண்டும் ஒரு பதிவு! இந்த நாட்களில் சென்ற இடங்கள், பார்த்த கொலு, கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி நிறைய எழுதலாம்…. என்றாலும் சில விஷயங்கள் மட்டுமே எழுத முடிகிறது. கொலு பொம்மைகள் படங்கள் மூன்று நண்பர்களின் வீடுகளில் எடுத்திருக்கிறேன். அவற்றை பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு இரண்டு விஷயம் மட்டும்!

ஓவியங்கள்:

கோல் மார்க்கெட் பகுதி துர்கா பூஜா.....

சென்ற பதிவில் பெங்காலி நண்பர் அழைப்பின் பேரில் துர்கா பூஜைக்கு சென்று வந்த போது கிடைத்த உணவு அனுபவத்தினைப் பற்றி எழுதி இருந்தேன்.  அங்கே கிடைத்த மற்றுமொரு அனுபவம் தான் இந்தப் பதிவில். ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜை சமயத்தில், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பினர் குழந்தைகளுக்கு மூன்று பிரிவுகளாக [வயதுக்கேற்ப] பிரித்து ஓவியப் போட்டிகளை நடத்துகிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம். கூடவே வினாடி-வினா நிகழ்ச்சிகளும் நடத்தி பரிசுகள் வழங்குகிறார்கள். ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு பல குழந்தைகள் சிறப்பாக ஓவியங்களை வரைந்திருக்க்கிறார்கள்.  மூன்று பிரிவுகள் – மும்மூன்று பரிசுகள்…. அப்படி பரிசு பெற்ற ஓவியங்களை பந்தலில் பார்வைக்கு வைத்திருந்தார்கள். காமிராக் கண்கள் மூலம் அப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு…… நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு பாராட்டுகள். பரிசு பெற்ற குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.

ராவண வதம்:விஜய தசமி அன்று நமது ஊரில் ஆயுதங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்குப் பூஜை செய்து, பொரி, கடலை என அனைவருக்கும் வழங்கி மகிழ்வார்கள்.  அதே விஜயதசமி வடக்கில் கொண்டாடப்படுவது வேறு விதத்தில்…. விஜய தசமி அன்று தான் தசரத ராமனுக்கும், லங்காபுரி ராவணுக்கும் நடந்த யுத்தம் முடிவுக்கு வந்தது எனவும், ராவண வதம் அன்று தான் நடந்தது என்பதும் வடக்கே உள்ளவர்களின் நம்பிக்கை. இப்போதும் ஒவ்வொரு விஜயதசமி அன்றும் ராவண், கும்பகர்ணன், மேக்நாத் [இந்திரஜித்] ஆகிய மூவரின் உருவ பொம்மைகளை வைத்து அதனைக் கொளுத்தி விடுவார்கள்.  பல இடங்களில் இந்த மாதிரி பொம்மை செய்து, அதனுள்ளே பட்டாசுகளை வைத்து கட்டி இருப்பார்கள். சில இடங்களில் ராவணனின் உருவம் மட்டும் இருக்கும்.

பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடத்துவார்கள்.  தலைநகரின் பல பகுதிகளிலும் இந்த ராவண வதம் நிகழ்ச்சிகள் நடக்கும். நவராத்ரி சமயத்தில் தொடர்ந்து ராமாயணக் காட்சிகளை நடித்துக் காண்பிக்கும் பல குழுவினர்கள் வருவார்கள்.  ஒவ்வொரு நாளும் இந்த நாடகங்களும் நடந்து கொண்டிருக்கும்.  தலைநகரின் மிகவும் புகழ்பெற்ற ராம்லீலா காட்சிகள் செங்கோட்டை அருகே இருக்கும் திடலில் நடக்கும்.  கோலாகலமாகக் கொண்டாடும் இந்த சமயத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே கொண்டாட்டங்களில் பங்கு கொண்டு அங்கே சுற்றி வருவார்கள்.  பத்தாம் நாள் விஜயதசமி அன்று ராவண வதத்துடன் கொண்டாட்டங்கள் நிறைவு பெறும். 

ஒவ்வொரு வருடமும் கொண்டாட்டங்கள் நடந்தாலும், இந்நிகழ்வுகளுக்கு வரும் மக்களின் கூட்டம் குறைவதில்லை.  அதில் ராம்லீலா காட்சிகளில் நடிக்க வரும் நடிகர்களுக்கும் குறைவில்லை. தலைநகர் வந்த புதிதில் சில முறை சென்று காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எல்லாம் செல்வதில்லை – அளவுக்கு அதிகமான கூட்டம், பாதுகாப்பு சோதனைகள் என கொஞ்சம் வெறுப்பாக இருப்பதால் செல்வதில்லை! இந்த வருடம் சென்று வரலாம் என ஒரு யோசனை இருந்தது – படம் எடுப்பதற்காகவாது… ஆனால் செல்லவில்லை.  வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்காவில் ராவண வதம் – தகனம் நடக்க, அப்போது கீழே சென்று பார்த்து வந்தேன். படங்கள் எடுக்க முடியவில்லை. அதனால் நண்பர் வீட்டில் இருந்த ராவண வதம் கொலு பொம்மையின் படம் இப்பதிவில் இணைத்திருக்கிறேன்.

சில நொடிகளில் எரிந்து விழுந்தது ராவணின் உருவம்… பட்டாசு சத்தம் காதைப் பிளக்க, புகை மூட்டத்தில் சர்க்கரை மிட்டாய் விநியோகத்தோடு ராவண வதம் முடிந்தது…..  இரவு நீண்ட நேரம் வரை பட்டாசு சத்தம் கேட்டவாறே இருந்தது. பல்வேறு பகுதிகளில் ராவணன் பொம்மைகள் எரித்தபடியே இருக்க பட்டாசுச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. 

On a different note… ரஜோ, தமோ, சத்வ குணங்களை விட்டொழித்து, அவற்றிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலையை அடைவது தான் விஜயதசமி என்றும் சொல்வதுண்டு.

ராவண வதம் முடிந்து விட்டது. அடுத்தது தீபாவளி – அதற்கும் இங்கே பலவித கொண்டாட்டங்கள் உண்டு. பல பகுதிகளில் தீபாவளி மேளா நடத்துவார்கள்.  முடிந்தால் தீபாவளி மேளா ஒன்றிற்குச் சென்று வர வேண்டும். அப்படிச் சென்றால் அது பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்!

நாளை வேறொரு பகிர்வில் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

28 comments:

 1. நவராத்திரி பதிவும் குழந்தைகளின் படங்களும் அருமை!
  த ம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 2. குழந்தைகளின் கைவண்ணம் அழகு.. அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அனுபவம் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. நவராத்திரி, தீபாவளி இரண்டுமே இந்தியா எங்கும் ரசித்துக் கொண்டாடும் பண்டிகைகள்! சற்றும் வேறுபாடில்லாமல் மக்கள் கொண்டாடுவதைப் போல பருவமும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இருந்து துணை செய்யும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 6. குழந்தைகளின் ஓவிய ஆர்வம் பாராட்டுக்குரியது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 7. விழா நிகழ்வுப்பகிர்வுகள் அருமை. குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. குழந்தைகளின் படங்கள் அருமை
  பாராட்டிற்கு உரியவர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. ஓவியம் நன்று ஜி குழந்தைகளுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. குழந்தைகளின் படங்கள் அனைத்தும் அருமைஜி! அனைவரையும் வாழ்த்துவோம்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 12. முதற் பரிசு பெற்ற ஓவியத்தில் இருக்கும் கற்பனை வியக்க வைக்கிறது. எல்லாப் படங்களுமே நன்றாக இருக்கிறது. எழுத்துரு சிறியதாக இருக்கிறது. பழைய சைஸ் நன்றாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. WORD 2013 மாற்றியதில், இந்த எழுத்துரு வந்துவிட்டது. பெரும்பாலும் word-ல் தட்டச்சு செய்து பிளாக்கர்-ல் சேமிப்பேன். நாளை முதல் மாற்றி விடுகிறேன். முதல் பரிசு பெற்ற ஓவியம் என்னையும் கவர்ந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. எல்லா ஓவியமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 14. ஓவியங்கள் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....