சனி, 29 அக்டோபர், 2016

சார் லட்டு – தித்திக்கும் தீபாவளி


பிரபு நடித்த ஒரு படத்தில் சார் லட்டு சார் லட்டுஎன்று அனைவருக்கும் லட்டு கொடுக்கும் ஒரு காட்சி வரும். எந்த படம், எப்போது வந்தது என்று யாரும் கேட்டு விடாதீர்கள் – நமக்கும் சினிமாவுக்கும் எட்டாத தூரம்!  சார் லட்டு என்று ஒரு மலையாள குறும்படமும் பார்த்திருக்கிறேன்! அதைப் பற்றியெல்லாம் இங்கே பேசப் போவதில்லை. இன்றைக்கு தீபாவளி..... 



நான் தில்லியிலிருந்து வருவதற்கு முன்னரே வீட்டில் லட்டு செய்திருந்தார்கள் – அதுவும் முதன் முறையாக.....  நான் வரும் வரை காத்திருந்தார்கள் – சாப்பிட்டுப் பார்க்காமல்! நான் சாப்பிட்டு, எப்படி இருக்கிறது என்று சொன்ன பிறகு சாப்பிட எண்ணம்.... :) முதல் முறையாக லட்டு செய்திருக்கிறார்களே – அதனால் இத்தனை முன் ஜாக்கிரதை உணர்வு!  புதிய புதிய முயற்சிகள் செய்யும்போது பல வீடுகளில் இப்படி சோதனை எலிகளாக இருப்பது அந்தந்த வீட்டின் தலைவர்கள் தானே!



லட்டு தவிர இன்னுமொரு புதிய முயற்சி – சாதாரண மைசூர் பாக் செய்யாமல் கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்து ஒரு புதிய வகை மைசூர் பாக்....  பலகாரங்கள் செய்யும்போது தொடர்ந்து கட்டளைகள் – அதை எடுத்துக் கொடுங்க, முந்திரிப் பருப்பு உடைச்சுக் கொடுங்க, நான் கிளறிக்கிட்டே இருக்கேன், நீங்க மாவுக் கலவையை கொஞ்சம் கொஞ்சமா வாணலியில் கொட்டுங்க என்று தொடர் instructions! செய்து முடித்த பிறகு இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என ஒரு Mini Discussion – மில்மா மைசூர்பாக், பால் பவுடர் மைசூர் பாக், கோல்டன் மைசூர்பாக் என சில பெயர்களை வைக்கலாம் என அளவளாவினோம்.... என்ன பெயராக இருந்தால் என்ன, நன்றாக இருந்தால் சரி! நன்றாகவே இருந்தது என்பதையும் சொல்லி விடுகிறேன்!  




முள்ளு முறுக்கு அச்சில் தேன்குழல், காராபூந்தி, ஓம்பொடி, கார்ன் ஃப்ளேக்ஸ், பொட்டுக்கடலை, வேர்க்கடலை என எல்லாம் சேர்த்து ஒரு மிக்சர் என கார வகைகள். ரொம்ப நாளா ஒரு ஆசையாம் அம்மணிக்கு! அது உக்காரை செய்யணும்கிற ஆசை தான்....  இந்த வாட்டி அதுவும் செய்துருக்காங்க!  

உக்காரை – அம்மணி முதன்முறையாக முயற்சி செய்த ஒரு பாரம்பரிய இனிப்பு. அது பற்றி அவர் வார்த்தைகளில்....



என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமானது.

இதை பற்றிய ஒரு சுவையான கதை.... என் அப்பா, அம்மாவின் தலைதீபாவளிக்கு என் பாட்டி (அம்மாவின் அம்மா) மாப்பிள்ளைக்காக செய்து கொடுத்தார்களாம். அன்று முதல் என் அப்பாவுக்கு இந்த இனிப்பு பிடித்தமாகிப் போனது.

என் கணவர் இதுவரை சாப்பிடாத இனிப்பாக இருக்கட்டும் என உக்காரையையும் செய்து கொடுத்தேன். செய்யும் போதே இது எப்படி இருக்கும் எனக் கேட்க, நான் எப்படி செய்து, என்ன வடிவில் வருகிறதோ!! அப்படித் தான் இருக்கும் என்றேன்...:))

கடலைப்பருப்பும், வெல்லமும் சேர்ந்த உக்காரையை என் பாட்டி நினைவாக நானும் செய்துள்ளேன்..

அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள்...

     ஆதி வெங்கட்......
சரி... மீண்டும் என் பதிவுக்கு வருவோம்...



இத்தனை சாப்பிட்டால் வயிறு கடாமுடா செய்யும் என்பதற்காக கொஞ்சம் தீபாவளி லேகியம் என அனைத்தும் தீபாவளிக்கு முன்னரே தயாராகி விட்டது..... 

இந்தாங்க! லட்டு, தேன்குழல், மிக்சர், மில்மா மைசூர்பாக், உக்காரை எல்லாம் சாப்பிட்டு, கொஞ்சம் மருந்தும் எடுத்துக்கோங்க! என்ன மருந்து தான் கொஞ்சம் கல்கோனா மாதிரி வந்திருக்கு.....  காலையில வாயில போட்டா சாயங்காலம் வரைக்கும் இருக்கும்! இப்படி எழுதுனேன்னு யாரும் வீட்டுல போட்டுக் கொடுத்துடாதீங்க! அதால அடிச்சா மண்டை உடைஞ்சாலும் உடையலாம்!

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி பொங்கட்டும்......

மகிழ்ச்சி.....

மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....



34 கருத்துகள்:

  1. //நான் வரும் வரை காத்திருந்தார்கள் – சாப்பிட்டுப் பார்க்காமல்! நான் சாப்பிட்டு, எப்படி இருக்கிறது என்று சொன்ன பிறகு சாப்பிட எண்ணம்.... :) //

    ஹா.... ஹா.... ஹா... ! பொறுமையாக எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். பாராட்டுகள். அதிலும் மிக்ஸர் செய்ய நிறைய பொறுமை வேண்டும்! தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  4. வேறு வழியில்லை, (நல்லாருக்குனு)சொல்லித்தானே ஆகணும் :) எல்லாமுமே சூப்பரா இருக்கு, அதிலும் மிக்ஸர் சூப்பரோ சூப்பர்.

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி....

      நீக்கு
  5. ஆஹா அனைத்தும் எடுத்துக்கொண்டேன் ஜி சுவைதான் சொல்ல முடியவில்லை
    இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. ஹா..ஹா..!! கடேசில வச்சீங்களே ஆப்பூ!! ;) :)

    வீட்டில தலை இருந்தாத்தானே தீபாவளியே!! எடுபிடிக்கு ஆள் வைச்சுகிட்டு பலகாரம் செய்யறது ஒரு தனி சுகம்தான்!! :D

    இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மஹி....

      நீக்கு
  7. உக்காரை நன்றாகவே வந்திருக்கிற மாதிரித் தானே இருக்கு . தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரிவது மட்டுமல்ல, நன்றாகவே வந்திருந்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.....

      நீக்கு
  8. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  9. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமதி.

      நீக்கு
  10. ஏற்கனவே பேஸ்புக்கில் பட்சனப் படங்களை சுடச்சுடப் பார்த்தாகிவிட்டது.
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  11. இனிப்புகளும், மிக்சரும் ரொம்ப நல்லா வந்திருக்கு. லட்டுல கிராம்பு (இரண்டாக ஒடித்து) சேர்த்திருந்தால் செம வாசனையாக இருக்கும். நாங்கள் "ஒக்கோரை" என்று சொல்லுவதுதான் வழக்கம். உக்காரை என்ற வார்த்தை செட்டிநாட்டைச் சேர்ந்தது. எங்க அம்மாதான் ஒக்கோரை பண்ணுவார்கள். நல்லா வந்திருப்பதுபோல்தான் தெரிகிறது. நான் ரசித்தது, "எப்படிச் செய்து என்ன வித்த்தில் வருதோ அப்படி இருக்கும்" என்கிற confident statement. தீபாவளி மருந்தும் வித்யாசமாக வந்துள்ளது.

    சமையலில் உதவி செய்து, நல்லா வந்தா நமக்குப் பேர் கிடைக்காது. சொதப்பிடுத்து என்றால், ஹெல்ப் பண்றவங்க பாடு கஷ்டம்தான்.

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. புது அயிட்டமும் ,பாரம்பரிய அயிட்டமும் செய்து அம்மணி செய்து, இந்த தீபாவளியை அசத்தி விட்டார்கள் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  13. பசிக்குது அண்ணா...
    தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  14. அருமையான பலகாரங்கள் முகநூலில் அனைத்தும் பார்த்தேன்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  15. பெயருக்கு ஒரு சில இனிப்புகள் செய்து மற்றதைக் கடைகளில் வாங்குவதே வழக்கமாகிப் போன காலத்தில் வீட்டில் செய்து மகிழ்வது சிறப்பு. தீபாவளி நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  16. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இனிக்க இனிக்க தீபாவளி இனிப்பு திகட்ட திகட்ட சாப்பிட்டு வருவீர்கள் என்று தெரியும். அதனால், உங்கள் பெயரில் வந்த இனிப்பு பெட்டியை (அனில் சொசைட்டி) உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து நாங்களே சாப்பிட்டு விட்டோம். வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  17. கீதா: அட! எங்கள் ஊரில்/வீட்டில் தீபாவளி என்றாலே ஒக்கோரை கண்டிப்பாக இருக்கும். நாங்கள் ஒக்கோரை என்று சொல்வது வழக்கம். (திருநெல்வேலி)

    நானும் கடலைமாவுடன் மில்க் பௌடர் சேர்த்து மில்க் மைசூர்ப்பா செய்ததுண்டு. ஈசியும் கூட. நெய் ரொம்ப வேண்டாம்...அது போல் மில்க் பௌடருடன் மைதா கலந்தும் செய்யலாம். பயத்தமாவு கலந்தும் செய்யலாம் அதுவும் தனிச் சுவையுடன் இருக்கும். கோதுமை மாவை நெய் காய்ச்சியதும் நெய் எடுத்துவிட்டு கடையிசியில் இருக்கும் நெய்யில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து சர்க்கரையும் சேர்த்துச் செய்வதுண்டு இல்லையா அதில் மில்க்பௌடர் சேர்த்து லட்டு போலும் பிடிக்கலாம் நல்ல சுவையுடன் இருக்கும். பொட்டுக்கடலை மாவுடன் மில்க் பௌடர் சேர்த்து லட்டு பிடிக்கலாம் அதுவும் சுவையாக இருக்கும். இப்படிப் பல...மனதில் தோன்றுவதைச் செய்து பார்க்கலாம்...

    அருமையான பலகாரங்கள். பார்த்ததும் நாவில் நீர் சுரந்தது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்கள் ஒக்கோரை என்று சொல்வீர்களா.... உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....