வியாழன், 11 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – கத்திச் சண்டை போட்ட பெண் - விதம் விதமாய் நடனம் – பகுதி 3

பர்யாடன் பர்வ் - 2018, ராஜ்பத், தில்லி...

தலைநகர் தில்லியில் நடந்த பர்யாடன் பர்வ் நிகழ்ச்சியில் நான் எடுத்த படங்களின் வரிசையில் இதோ மூன்றாம் பகுதி. ஹரியான மாநில நடனத்திற்குப் பிறகு வடகிழக்கு மாநிலம் ஒன்றிலிருந்து வந்த கலைஞர்கள் – அவர்களின் நடனம் துவங்குவதற்கு முன்னர் நடந்த கத்திச் சண்டையின் போது எடுத்த படங்கள் தான் இன்றைய பதிவில் – அந்த வீர மங்கையின் கைகளில் இரண்டு கத்திகள் – எதிரே இரண்டு ஆண்கள் – இருவர் கைகளிலும் ஒரு கத்தியும் ஒரு கேடயமும். இரண்டு ஆண்களும் பெண்ணைத் தாக்க அப்பெண் வீரத்துடன் தீரத்துடன் தனது கத்தியால் தடுப்பது தான் அந்த நிகழ்ச்சி – அப்படியே சில நிமிடங்கள் பார்ப்பவர்களின் மூச்சே நின்றுவிடும் அளவிற்கு அப்பெண்ணின் சாகசம். பறந்து பறந்து தாக்குவதும், அந்த ஆண்களின் தாக்குதல்களை சமாளிப்பதும் என்று அதிரடி ஆட்டம்.

ஆண்களும் பறந்து பல்டி அடித்து தாக்க, பெண்ணும் நான் உங்களுக்கு சளைத்தவள் அல்ல என்று பல்டி அடித்துத் தடுப்பதும் என சில நிமிடங்கள் அப்படியே பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்தார்கள். ரொம்பவே நன்றாக இருந்தது அவர்களது கத்திச்சண்டை நடனம். வேகம் வேகம் அப்படி ஒரு வேகம் அந்த பெண்ணின் ஒவ்வொரு அசைவும். கத்திச் சண்டை நடக்கும் அதே சமயத்தில் பின்புறத்திலிருந்து இசைக் கலைஞர்கள் விதம் விதமான மேளங்களில் ஒலி எழுப்பியபடியே இருந்தது கொஞ்சம் அதிகமான விறுவிறுப்பை உண்டுபண்ணியது என்றும் சொல்ல வேண்டும்.  இந்தப் புகைப்படங்களில் சில நன்றாக வந்திருந்தாலும் எனக்கு திருப்தி இல்லை – ஒன்று நான் மேடையிலிருந்து சற்று தள்ளியே இருந்தேன் – முன்னணியில் வி.ஐ.பிக்கள் – மேலும் அதிக பார்வையாளர்கள். கொஞ்சம் தள்ளியே இருந்ததால் 55-250 zoom lens போட்டு தான் எடுக்க முடிந்தது. படங்களில் அத்தனை Sharpness இல்லை. இந்தப் படங்கள் எடுக்கப்பட்டது Sports Mode-ல் தான். படம் எடுக்க இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்….

On a different note, இந்தப் பெண் மாதிரி அனைத்து பெண்களும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டால் அவர்களுக்கு எதிராக நடக்கும் பல அநீதிகளைத் தடுக்கலாம். எத்தனை எத்தனை வன்புணர்வுகள் இங்கே….


என்ன நண்பர்களே நிழற்படங்களை ரசித்தீர்களா? நடனம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து…

22 கருத்துகள்:

 1. காலை வணக்கம். புகைப்படங்களை ரசித்தேன். பெண் பல்டியடிக்கும் புகைப்படம் ஒன்று கூட இல்லையே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பெண் பல்டியடிக்கும் புகைப்படம் ஒன்று கூட இல்லையே...!//

   ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம் ஹா ஹா ஹா:).

   நீக்கு
  2. இன்னும் சில படங்கள் உண்டு. பல்டியடிக்கும் படம் - இருக்கிறதாகத் தெரியவில்லை. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. ஹாஹா. நல்ல கேள்வி அதிரா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பின்னணி இசையுடன் நிகழ்ச்சியை நேரில் பார்த்தது நன்றாய் இருந்திருக்கும். எம் ஜி ஆர் கத்திச்சண்டைக் காட்சிகள் நினைவுக்கு வருகிறது. அவர் படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது தர்மேந்திரா ஆவலுடன் வந்து அமர்ந்து ஷூட்டிங் பார்த்தாராம். படப்பிடிப்பு முடிந்த உடன் கத்தியைத் தொட்டுப்பார்த்து "நிஜக்காத்தி" என்று வியந்தாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு - சினிமா நியூஸ் ஆனந்தன் மாதிரி உங்களிடம் எத்தனை சினிமா தகவல்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. படங்கள் ரசனையும் எடுத்திருக்கீங்க. பெண்களை வன்புணர்வு செய்வதும் தலைநகர் தில்லியில் தான் அதிகம். எத்தனை தண்டனை கொடுத்தாலும் திருந்தாத ஜன்மங்களை என்ன செய்ய முடியும்? அவங்களாக மனசு மாறணும். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைநகர் தில்லி மட்டுமல்ல, வட இந்திய மாநிலங்களில் இந்தக் கொடுமை அதிகம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 4. பொண்ணுங்க கத்தி சண்டை போடலாம். ‘கத்தி’ சண்டை போடக்கூடாது. இந்தக்கால சூழலில் எதாவது ஒரு தற்காப்புக்கலையை கத்துக்குறது அவசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்காப்புக் கலையை கற்றுக் கொள்வது அவசியம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 5. வன்புணர்வுகளுக்கு தாங்கள் கூறியுள்ள யோசனை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

   நீக்கு
 6. புதுவிதச் சண்டை.. அந்தரத்தில் பாய்ந்து சண்டை போடுகிறார்களே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 8. நிஜமாக சண்டையிட்டால் எப்படி இருக்கும் கேரள களறிபயிற்றை நினைவு படுத்துகிறது பெண்களின் ஆவேசம்தாங்க முடியுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 10. பெண்கள் தற்காப்பு கலை கற்றுக் கொள்வது நல்லதுதான்.
  வீரமாய் சண்டையிடும் வீரலெட்சுமி வாழ்க!
  நவராத்திரி நேரம் வீரமாய் மன உறுதியுடன் அறிவு திறனுடன் இருக்க வேண்டும் என்பதை சொல்லுது பதிவு.
  படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....