செவ்வாய், 2 அக்டோபர், 2018

சுற்றுலா பருவம் – வேஷம் கட்டுவது சுலபமல்ல - பல்சுவை…
பொய்க்கால் குதிரை ஆடும் கலைஞர்...
சுற்றுலா பருவம், தில்லி - 2018


தலைநகரில் நடந்த சுற்றுலா பருவம் பற்றி சில பதிவுகளில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன் – உணவு, கலை நிகழ்வுகள் தவிர அங்கே பார்ப்பதற்கு வண்ண மயமான பல விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலம் பற்றிய விவரங்கள், சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் என்பனவற்றை காட்சிப்படுத்தி இருந்தார்கள். பெரும்பாலான ஸ்டால்களில் சரியான முறையில் சுற்றுலா தகவல்களை சொல்ல முயற்சிக்கவில்லை என்று தான் தோன்றியது. ஒரு வேளை மாலை நேரங்களில் நாங்கள் சென்றதால் அப்படித் தோன்றியதா எனத் தெரியவில்லை. பல ஸ்டால்கள் ஈயடித்துக் கொண்டிருந்தன – தமிழகத்திலிருந்து அமைந்த ஸ்டால் உட்பட!ஒரு கலைஞர் விஸ்ராந்தியாக அமர்ந்திருந்தபோது...

சுற்றுலா பருவம், தில்லி - 2018 


பொய்க்கால் குதிரை ஆடும் கலைஞர்...
இவர் எல்லா நிகழ்வுகளிலும் இருக்கிறார் - இம்முறை பெண்வேஷம் போட்டவர் மாறி இருக்கிறார்.

சுற்றுலா பருவம், தில்லி - 2018பொய்க்கால் குதிரை ஆடும் வேறு கலைஞர்...

சுற்றுலா பருவம், தில்லி - 2018


பல இடங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். சிக்கிம் மாநிலம் இன்னும் போகவில்லையே, அங்கே செல்ல வேண்டிய தகவல்கள் ஏதும் கிடைக்கலாம் என அங்கே சென்று பார்த்தால் யாருமே இல்லை. சில பழங்குடியினர்களின் ஆளுயர பொம்மைகள் வைத்து இருந்தார்கள் – அவர்களது பாரம்பரிய உடையில். அதன் பக்கத்தில் நின்று பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதைத் தவிர சுற்றுலா தகவல்கள் தரும் Pamphlets – அதாவது துண்டு பிரசுரங்கள் கூட வைத்திருக்கவில்லை. பொதுவாக இப்படியான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது தரும் பிரசுரங்களில் எனக்குத் தேவையானதை மட்டுமே வாங்கிக் கொள்வேன் – தேவையில்லாதவை எனில் வாங்க மறுத்து விடுவது வழக்கம். இங்கே ஒன்றுமே இல்லை.


ஆஞ்சி வேடமிட்ட கலைஞர்...

சுற்றுலா பருவம், தில்லி - 2018
சிவன் வேடத்தில் ஒரு கலைஞர்...
மற்ற நாட்களில் கண்டக்டராக பணிபுரிவாரோ?

சுற்றுலா பருவம், தில்லி - 2018 


உயர்ந்த மனிதர்கள்.....

சுற்றுலா பருவம், தில்லி - 2018


கலைஞர்கள் தான் வேடம் கட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கிறார்கள் என்றால் பலர் சிவன், காட்டுவாசி, குரங்கு, ஆஞ்சனேயர், ஜோக்கர் போன்று அலங்காரம் செய்து கொண்டு ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் இருந்தார்கள். அவர்களுடன் நிழற்படம் எடுத்துக் கொள்ள நிறையவே போட்டி. அவர்களும் பொறுமையாக அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார்கள். படம் எடுத்து முடித்தபின் கைகளை நீட்டுகிறார்கள்! சிலர் கண்டக்டர் போல கைவிரல்களில் ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு, கைகளை ஆட்டி காசு கேட்கிறார்கள். மக்களும் மகிழ்ச்சியுடன் பத்து, இருபது ரூபாய் கொடுக்க அவற்றை போட்டுக்கொள்ள ஒரு ஸ்லிங்க் பேக் வேறு வைத்திருக்கிறார்கள்.


தன்னை மறந்து ஆடும் இளைஞர்..

சுற்றுலா பருவம், தில்லி - 2018பொம்மலாட்டமும் உண்டு...

சுற்றுலா பருவம், தில்லி - 2018


தில்லி வாசிகளுக்கு ஒரு வழக்கம். மேள சப்தம் கேட்டாலே கைகளை உயர்த்திக் கொண்டு களத்தில் குதித்து விடுவார்கள் – அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும்! பொது வெளியில் ஆடுவதற்கு அவர்கள் சங்கோஜமோ, வெட்கமோ கொள்வதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் ஆடுவேன் – பார்த்தா பார்த்துக்கோ என்ற கொள்கை அவர்களுடையது! பொய்க்கால் குதிரை ஆடிக்கொண்டிருந்த ஒரு ராஜஸ்தானி கலைஞர் அருகே ஒரு இளைஞரை அப்படி பார்க்க முடிந்தது. ஏதோ போதையில் இருப்பவர் போன்று அப்படி ஒரு ஆட்டம் – ஒவ்வொரு இடமாகச் சென்று ஆடிக்கொண்டே இருந்தார் அந்த நபர். அதுவும் கலைஞர்கள் ஆடுவதை நிறுத்தினால் கூட இவர் நிறுத்தாமல் ஆடிக்கொண்டிருந்தார்!தன்னிலை மறந்து ஆடும் இளைஞரை 40-வது நொடியிலிருந்து காணலாம்!


யோகா செய்யும் குழந்தைகள்..

சுற்றுலா பருவம், தில்லி - 2018ஹூக்கா ஒன்று அலங்காரத்திற்காக....

சுற்றுலா பருவம், தில்லி - 2018


ஒரு இடத்தில் குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் அவர்கள் போக்கில் சிரித்தபடியே யோகா செய்த காட்சி அழகு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் – சொல்லிக்கொடுத்தவரைப் பார்ப்பதை விட, தன் அப்பா-அம்மாவைப் பார்த்தபடியே செய்த குழந்தைகள்…. பார்க்கவே சந்தோஷமாக இருந்தது அவர்களின் அந்த யோகா. நான் கேமராவில் புகைப்படம் எடுக்க நண்பர் பத்மநாபன் அவரது அலைபேசி மூலம் காணொளிகளாக எடுத்திருக்கிறார். சில மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் இங்கேயே சேர்த்தால் உங்களுக்கும் பார்க்க அயர்ச்சியாக இருக்கலாம் என்பதால்!


ராஜபாட்டையில் குடைகளால் அலங்காரம்....

சுற்றுலா பருவம், தில்லி - 2018குடை அலங்காரம் -  வேறு ஒரு படம்...

சுற்றுலா பருவம், தில்லி - 2018


சுற்றுலா பருவம் நிகழ்ச்சி நடந்த ராஜபாட்டை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி தந்தது. பல இடங்களில் குடைகளைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். பெட்டர்மாக்ஸ் விளக்குகள், சைக்கிள்கள், பட்டங்கள், ஹூக்கா, மூன்று சக்கர வாகனங்கள் என ஆங்காங்கே காட்சிக்கு வைத்திருந்தது அழகு.  நிறைய இடங்களில் சுற்றி வருபவர்கள் சற்றே இளைப்பாற இருக்கைகளைப் போட்டு வைத்திருந்ததும் சிறப்பு. அதே போல பல இடங்களில் குடிதண்ணீர் Dispenserகள் மூலம் வழங்கியதும் நல்ல விஷயம். என்ன உள்ளே செல்ல வைத்த வழிவகை செய்தவர்கள், அதை வெளியேற்ற சரியான ஏற்பாடு செய்யவில்லை – இருந்தது என்றாலும் அதனை எங்கே இருக்கிறது என்பதற்கான அறிவிப்புகளை வைக்கவில்லை.  ஸ்டாலில் இருந்த ஒரு பெண்ணிடம், சுற்றிப் பார்க்க வந்த பெண்மணி விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஸ்டால் பெண்மணி சொன்ன விஷயம் மனதை உறுத்தியது – “எங்கே இருக்குன்னு தெரியல…. காலைல வந்ததிலிருந்து போகவே இல்லை!”வண்ணமயமான மண் குடுவைகள்.... விற்பனைக்கு.

சுற்றுலா பருவம், தில்லி - 2018 


ஜூத்தி என அழைக்கப்படும் பெண்களின் காலணிகள்....

சுற்றுலா பருவம், தில்லி - 2018


நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் நபர்கள்/சுற்றுலாத் துறை அடுத்த முறை இந்தக் குறையை போக்குவார்கள் என நம்புவோம். நிறைய விஷயங்கள் இங்கே பார்க்கக் கிடைத்தன. பல மாநில நடனங்கள் பார்க்கக் கிடைத்தன. நடனம் தவிர மற்ற நிழற்படங்களை இங்கே தந்திருக்கிறேன். நடனங்களின் நிழற்படங்கள்/காணொளி பிறிதொரு பதிவில் தருகிறேன். இன்றைக்கு உங்களுடன் பகிர்ந்த விஷயங்கள், படங்கள், காணொளி ஆகியவை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தொடர்ந்து நட்பில் இணைந்திருப்போம்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

20 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். தகவல்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சிவன் வேடமிட்டவரைப் பார்த்தல் சிவன் போலவே தெரியவில்லை- வடநாட்டு சிவன் போல கூட தெரியவில்லை!

  //மற்ற நாட்களில் கண்டக்டராகப் பணிபுரிவாரோ?"//

  ஹா... ஹா... இந்த கமெண்ட் பார்த்ததும் மறுபடி படம் பார்த்து அவர் கைகளில் பணம் பார்த்துச் சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்டா கட்டா சிவன் இந்த ஊரில் இப்படித்தான் சொல்லி இருப்பார்கள்! ஆமாம் வடநாட்டு சிவன் போலக் கூட இல்லை! வேடம் எல்லோருக்கும் பொருந்துவதில்லை என்பதன் உதாரணம் இது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. நீங்கள் ரசித்ததில் நானும் மகிழ்ச்சி கொண்டேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. சிவன் வேடத்தில் ஒரு கலைஞர்...
  மற்ற நாட்களில் கண்டக்டராக பணிபுரிவாரோ?//

  கண்டக்டர் கையில் பணம் வைத்து இருப்பது போலவே வைத்து இருக்கிறார். உங்களுக்கு நல்ல கற்பனை.
  அனைத்து படங்களும் அருமை.
  காணொளி பார்க்க பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 5. இரண்டு காணொளியும் நன்றாக இருக்கிறது.
  குழந்தைகள் யோகா செய்வது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. வேஷம்கட்டாமலேயெ நடிக்கும் பலர் இருக்கிறார்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகத்தில் பிறந்த அத்தனை பேருமே ஏதோ விதத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம் :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 7. தகவல்கள் ரசிக்க வைத்தன ஜி
  படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 8. கண்ணை கவரும் படங்கள் + தகவல்கள் என அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக சிரமம் எடுத்துப் படங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். ராஜஸ்தானி நடனத்தில் அந்த இளைஞரின் கூட்டு நடனம் சிரிக்க வைத்தது. அற்புதமான கண்காட்சிப் படங்கள்.
   செலவில்லாமல் ஜூத்தி செலக்ஷனையும் பார்த்தாச்சு. பைசே தே தோ. ஜூத்தி லே லோ பாடல் நினைவுக்கு வந்தது. மிக மிக நன்றி வெங்கட்.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
  3. பைசே தே தோ ஜூத்தே லேலோ - இந்தப் பாடலுக்குப் பிறகு இங்கே கல்யாணங்களில் ரொம்பவே அதிகம் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள். முன்னாடி ஒரு சம்பிரதாயமாக இருந்ததை வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். நண்பர் ஒருவர் ஜூத்தாவுக்காக 25000 கொடுத்தார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 9. வெங்கட்ஜி இன்று காலை முதல் ஆளாக (ஸ்ரீராமுக்குப் போட்டியாக!!!ஹா ஹா ஹா ஹா) வந்து ஆஜர் வைத்து கருத்திட முடியாம போச்சு!!!

  கண்டக்டர் சிவனைப் பார்த்து சிரித்துவிட்டேன். நீங்கள் கண்டக்டரா இருப்பாரோனு சொன்னதற்கும் சிரித்துவிட்டேன்...தமிழ்ப்படத்தில் ரஜனி சிவன் வேஷத்தில் ஒரு காமெடி சீனில் வருவாரே அவர் வேஷம் நல்லாவே இருக்கும். (அவர் கண்டக்டராக இருந்தவர்!!!!!!!!) சிவாஜியின் சிவன் வேஷமும்..!!!இந்த சிவன் சிவன் போலவே இல்லை...போனால் போகட்டும்!

  ஆஞ்சு வேஷம் கூட எதோ பெண் போலத் தெரிகிறார்...

  அந்த இளைஞரின் மெய்மறந்த நடனம் கண்டோம்..அந்த வீடியோவில் அவர் அருகில் முன்னாடி நிற்கும் அந்த வெள்ளை உடை மனிதர் செமையா இடுப்பை மட்டும் அசைத்து ஆடுகிறார். இது போன்ற நடனமும், பொம்மலாட்டம் முன்பும் பகிர்ந்த நினைவு இருக்கு. ஆனால் வேறு...

  படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. சிறப்பான தகவல்கள். சுற்றுலாத்துறை விழாவில் மிக அழகாகக் கவரும் விதத்தில் தங்கள் மாநிலங்களின் சுற்றுலாத்தலங்கள், உணவு, தங்குமிடங்கள் என்று நல்ல ப்ரொமோ செய்ய வாய்ப்பு ஆனால் சரியாகப் பயன்படுத்தவிலலி என்றே தோன்றுகிறது. நடத்துபவர்கள் இன்னும் நன்றாக நடத்த முயற்சி எடுத்திருக்கலாம்...என்று உங்கள் தகவல்களிலிருந்து அறிய முடிகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் சரியாக பயன்படுத்தலாம் என்பது தான் எனது எண்ணமும்.

   வேஷம் கட்டுபவர்களுக்கு பொருத்தமானதாக இருப்பதும் ஒரு சிலருக்கு தான். வீரபாண்டிய கட்டபொம்மன் வேடம் - ஒல்லியான ஒருவருக்கு அதுவும் கீச் கீச் குரலில் பேசுபவருக்கு நன்றாகவா இருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....