வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லாவில் தமிழர்களின் கோவில்



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 7

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



ஷோடஸ கணபதி கோவில், தாராதேவி, ஷிம்லா
 
இந்திய இராணுவம் அமைத்திருக்கும் பாரம்பரிய அருங்காட்சியகத்தினைப் பார்த்த பிறகு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஒரு கோவில் – தாரா தேவி பகுதியில் – ஷிம்லா நகரிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைதியான மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கோவில் தான் இந்த ஷோடச கணபதி மற்றும் சங்கட மோச்சன் ஹனுமான் கோவில்கள். கோவில் பகுதியிலிருந்து ஷிம்லா நகர் முழுவதும் பார்க்க முடியும். அமைதியான சூழலில் சில நிமிடங்கள் அமர்ந்து நகரின் அழகை பார்க்க நினைத்தால் இந்த இடத்திற்கு நிச்சயம் செல்ல வேண்டும். ஹனுமான் மற்றும் பிள்ளையார் கோவில் தவிர நவக்ரஹங்கள் மற்றும் சிவபெருமானுக்கும் தனி சன்னதி உண்டு!


சங்கட மோச்சன் ஹனுமான் கோவில், தாராதேவி, ஷிம்லா
 
ஷிம்லாவில் நிறையவே வழிபாட்டுத் தலங்கள் உண்டு என்றாலும் தாரா தேவி பகுதியில் அமைந்திருக்கும் இந்த சங்கட மோச்சன் ஹனுமான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் – சங்கடங்களை தீர்த்து வைப்பவர் ஆயிற்றே. கூடவே இதே இடத்தில் நவகிரஹங்களுக்கான கோவிலும், ஷோடஸ கண்பதி கோவிலும் இருப்பதால் வாரத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். கூடவே பாபா நீப்B கரோரி மஹாராஜ் என்பவருக்கும் இங்கே ஒரு சன்னதி உண்டு – இந்த பாபா தான் முதன் முதலாக 1950-களில் இங்கே வந்து இந்த இடத்தின் அழகில் மயங்கி, த்யானம் செய்தவர். இங்கே ஹனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தினை தெரிவித்தார்.


அமைதியான சூழலில்....
ஷோடஸ கணபதி கோவில், தாராதேவி, ஷிம்லா
 

மரங்களுக்கிடையே....
ஷோடஸ கணபதி கோவில், தாராதேவி, ஷிம்லா

ஹிமாலய மலைத்தொடர், நடுநடுவே பள்ளத்தாக்கு, பசுமையான இடங்கள், ஷிம்லா நகர் என அனைத்துமே அவருக்கு பிடித்து விட்டது. இந்த இடத்தில் ஹனுமனுக்கு கோவில் கட்ட நினைத்தார். அவருக்கு பக்தராக இருந்தவர்களில் ஒருவர் – அந்த மாநிலத்தின் கவர்னராக இருந்தவர். பிறகென்ன, பாபாவின் வேண்டுகோளுக்கிணங்க 1962-ஆம் ஆண்டு கோவில் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. 21 ஜூன் 1966 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இப்பொழுது கோவில் நிர்வாகம் ட்ரஸ்ட் கையில் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறும் 3000-4000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையும் செயல்படுகிறது. செவ்வாய்க் கிழமைகளில் ஹல்வா பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கே ஒரு திருமண மண்டபமும் இருக்கிறது.  கோவில் குளிர் காலத்தில் காலை 07.00 மணி முதல் மாலை 06.30 வரையும், கோடைக் காலத்தில் காலை 06.30 முதல் இரவு 08.00 மணி வரையும் திறந்திருக்கும்.


எங்கே பார்த்தாலும் கட்டிடங்கள்....
ஷோடஸ கணபதி கோவில், தாராதேவி, ஷிம்லா

அது சரி தமிழர்களின் கோவில் என்று சொல்லி விட்டு ஹனுமான் கோவில் கட்டியது யாரோ பாபா என்று சொல்கிறீர்களே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம்.  இந்த கோவில் வளாகத்தில் இருக்கும் ஒரு கோவில் தான் ஷோடஸ கணபதி கோவில். காஞ்சி காமகோடி மடத்தினரால் இங்கே தென்னிந்திய கோபுரத்துடன் கட்டப்பட்டிருக்கும் கோவில் தான் இந்த கணபதி கோவிலும் நவக்ரஹங்கள் கோவிலும். தினம் தினம் கோவிலில் பாரம்பரிய முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன.  மாத சதுர்த்தி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விநாயக சதுர்த்தி சமயத்தில் பத்து நாட்கள் உற்சவமும் நடைபெறுவதாகத் தெரிகிறது.  கோவில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் தான் கட்டப்பட்டிருக்கிறது.



நாங்கள் சென்ற போது கோவிலில் இருந்தவரிடம் தமிழில் பேசினேன் – பதில் வரவில்லை! சரி என்று ஹிந்தியில் பேச பதில் கிடைத்தது – லோக்கல் ஆள் தான் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார் போலும்! இந்தக் கோவில் பிரதான ஹனுமான் கோவில் மாதிரி இல்லாது, காலையில் சில மணி நேரமும், மாலையில் சிறிது நேரமும் மட்டுமே திறந்திருக்கும். கோவில் அருகே நிறைய மரங்களும், அழகிய புல்வெளிகளும் உண்டு. நிறைய இருக்கைகள் ஓரங்களில் போட்டு வைத்திருக்கிறார்கள். அங்கே அமர்ந்து இயற்கை எழிலை ரசிக்க முடியும். நாங்களும் சிறிது நேரம் அங்கே அமர்ந்து இயற்கை எழிலை இரசித்தோம்.  பாபாவின் காலத்தில் பசுமை நிறைந்த மலைகளைப் பார்த்திருக்கலாம். இப்போது மலைப்பகுதி எங்கும் கட்டுமானங்கள்! எங்கே பார்த்தாலும் கட்டிடங்கள். பசுமை எங்கே என்று கேட்கும் அளவிற்கு தான் இருக்கிறது என்றாலும் பறவைப் பார்வையில் பார்க்க நல்ல ஒரு இடம் இந்த இடம்.






கோவிலில் சில நிமிடங்கள் இருந்து தரிசனம் செய்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் என்ன இடம் – இத்தனை நேரமா சுத்திட்டே இருக்கீங்களே – சாப்பாடெல்லாம் வேண்டி இருக்காதா உங்களுக்கு என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றியிருக்கலாம் – அடுத்ததாக நாங்கள் சென்றது மதிய உணவு சாப்பிடத் தோதான ஒரு இடத்திற்கு. அது எந்த இடம் அங்கே என்ன சாப்பிட்டோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்.

    ஷோடஸ கணபதி கோவிலைப் பார்த்தால் தென் இந்திய வாசனை அடிக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்னிந்திய கோவிலே தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கோவில் பற்றிய விவரங்கள் ஆச்சர்யம். சிறிய கோவில் போல தெரியும் அதில் 300-4000 பேர்களுக்கு அன்னதானமா? ஆயுர்வேத மருத்துவமனை வேறா? அட...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் இப்படி தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. பெரும்பாலான சீக்கியர்களின் குருத்வாராவில் லங்கர் எனப்படும் அன்னதானம் தொடர்ந்து நடக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஓ.. முதலில் படத்தை மட்டும் பார்த்துவிட்டு கமெண்ட் விட்டுவிட்டேன். கணபதி கோவில் காஞ்சி காமகோடி மடத்தினரால் நடத்தப்படுவதா? சரி, சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... சில சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது எனக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. உங்கள் ஓட்டுநர் இந்த இடத்தைப் பொறுத்தவரை ஒரு நல்ல இடத்தைக் காட்டி விட்டார் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல இடம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி..

    படங்கள் அழகா இருக்கே. இதோ பார்த்துட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. தாராதேவி பகுதிக்குச் சென்றோம் இக்கோயிலுக்கும் ஆஞ்சு கோயில்...மற்றும் பாபா...ஆனால் இப்போது நிறைய வித்தியாசங்கள் தெரிகிறதே. எனக்கும் பசபசப்பான மெமரிஸ் தான் 27 வருடங்கள் ஆகிவிட்டதே....மலையில் நிறைய பில்டிங்க்ஸ் தெரிகிறது. அப்போது இப்படிப் பார்த்த நினைவில்லை. மிக மிக அழகான பகுதி.

    கோயில் பற்றிய தகவல்கள் மிக மிக வியப்பாகவும் இருக்கிறது..குறிப்பாக அன்னதானம் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை...இதெல்லாம் அப்புறம் வந்திருக்குமோ ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாரா தேவி கோவில் பகுதிக்கு நீங்களும் சென்றிருப்பது தெரிந்து மகிழ்ச்சி. மாற்றங்கள் நிறையவே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. இனிய காலை வணக்கம் வெங்கட்.
    கணபதி கோவில் தமிழ் முறைப்படி கட்டப்பட்டு அழகாக இருக்கிறது.
    நமக்கு வேண்டுபவர்கள் இவர்கள் இருவரும் தானே.
    பார்க்கத் தெவிட்டாத படங்கள். மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான கோவில் தாம்மா... இருவருமே இஷ்ட தெய்வங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. அழகிய இடத்தில் மிக அழகான கோவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. அங்கேயே மடத்தில் சாப்பாடு போடலையா? :) கோயிலும் சுற்றுப்புறமும் அழகாய் இருக்கு. தாரா தேவி தசமகாவித்யா தேவியரில் ஒருத்தி தானே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடம் அங்கே இல்லை. கோவில் மட்டுமே....

      தசமஹாவித்யா தேவியரில் ஒருவராக இருக்கலாம் தாரா தேவி. எனக்குத் தெரியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. அந்தப் பகுதிக்கே தாரா தேவி என்னும் பெயரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்தப் பகுதியின் பெயரே தாராதேவி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  12. ஸ்ரீராம்ஜி சொல்வது போல நம்மூர் கோவில் மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  13. கோவில்கள் படம் அழகு.
    கட்டிடங்கள் மலை முழுவதும்.
    இயற்கை கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வருவது வருத்தம் அளிக்கும் செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானி அதிரா.

      நீக்கு
  15. வடநாட்டிலொரு தென்னிந்தியா!!

    எப்படி விட்டாங்க இப்படி ஒரு கோவில் கட்ட!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி, ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் இரு தென்னிந்தியப் பாணிப் பெருமாள் கோயில் உள்ளன. ஒன்று ஶ்ரீவில்லிபுத்தூர்க்காரர்களாலும் இன்னொன்று காஞ்சிபுரம் வைணவர்களாலும் நிர்வகிக்கப்படுகிறது. இதே போல் காசியிலும் உண்டு. காஞ்சி மடத்தாலும் குமரகுருபர மடத்தாலும் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அங்கே உண்டு. அவ்வளவு ஏன்? பத்ரிநாதர் கோயிலின் அர்ச்சகர்கள் தென்னிந்தியர்கள் தாம்! அயோத்தியிலும் ஓர் தென்னிந்தியப் பாணிக் கோயில் உண்டு. ஒரே வித்தியாசம் என்னவெனில் வட இந்தியக் கோயில்கள் எப்போதும் திறந்திருக்கும். தென்னிந்தியக்கோயில்கள் காலை முதல் மதியம் வரையும் பின்னர் மாலை முதல் இரவு எட்டு எட்டரை வரையும் திறந்திருக்கும். மஹாராஷ்ட்ரா சதாராவில் ஓர் நடராஜர் கோயில் உண்டு. தமிழ்நாட்டு ஸ்தபதிகளால் காஞ்சிப் பெரியவரின் ஆசிகளுடன் கட்டப்பட்டது.

      நீக்கு
    2. வட இந்தியாவில் இப்படி நிறைய தென்னிந்திய கோவில்கள் உண்டு. நம் ஊரில் கூட வட இந்திய கோவில்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  16. பயணம் என்றாலேயே கோவில்களில்லாமல் இருப்பதில்லை கொவில்கள் சுற்றுலா தலமாகி வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. தமிழர்கள் கோவில் இல்லா ஊரில்குடியிருக்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....