தொகுப்புகள்

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 65 – தில்லி தேர்தல் – நல்லதும் கெட்டதும் – மனைவி!


இந்த வார செய்தி:

இது வரை நடந்த தேர்தல்களில், வாக்காளர்களுக்கு தமது தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சென்ற சில தேர்தல்களாக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனச் சொல்லக்கூடிய 49 “ஓபடிவம் இருந்தது. அதனைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தது.

இப்போது நாம் வாக்களிக்கும் இயந்திரத்திலேயே இப்படி ஒரு வசதியை வைக்கச் சொல்லி இந்தியாவின் முதன்மை நீதிமன்றம் சொல்லியதன் பேரில் இப்போது நடக்கவிருக்கும் தேர்தலிலிருந்தே இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது தலைமை தேர்தல் அலுவலகம்.

பள்ளியில் படிக்கும்போது கேள்வி கேட்டு அதற்கு கீழேயே மூன்று விடைகளைக் கொடுத்து நான்காவதாக None of the Above என்று ஒன்றை கொடுத்திருப்பார்களே அது போல, வாக்கு இயந்திரத்தில் எத்தனை வேட்பாளர்கள் இருப்பார்களோ அத்தனை பொத்தான்களுக்கு அடுத்து இருக்கும் பொத்தான் எதிரே ‘NOTAஎன்று எழுதியிருக்கும். அதை அழுத்தினால் மேலுள்ள யாரையும் எனக்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்று உங்களது வாக்கு பதிவாகும்.

சரி... ஏதோ ஒரு தொகுதியில் இருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த NOTA பொத்தானை அழுத்தி விட்டால்? வேட்பாளர்களை விட NOTA எனும் பொத்தனை அழுத்தி, மேலுள்ள எவரையும் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை என்பதை அதிக அளவில் வாக்கு பெறச் செய்து விட்டால்?என்ற கேள்வி எனக்குத் தோன்றியது. அதே கேள்வி தேர்தல் அலுவலகத்திலுள்ள அதிகாரிகளுக்கும் தோன்றியிருக்கிறது!

அதனால் அப்படி ஒரு சந்தர்ப்பம்/அசந்தர்ப்பம் ஏற்பட்டால், வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து விடுவோம் எனச் சொல்கிறார்கள் – அப்படியெனில், அந்த தொகுதி மக்களின் எந்த வாக்காளர்களின் மேலும் நல்ல அபிப்ராயம் இல்லை எனும் வாக்கிற்கு என்ன மதிப்பு.... 

என்னவோ போங்க, இந்த அரசியல் நமக்குப் புரியவே மாட்டேங்குதே!

இந்த வார முகப்புத்தக இற்றை:

GRANDMAS HOLD OUR TINY HANDS FOR JUST A LITTLE WHILE, BUT OUR HEARTS – FOREVER….. 

சில வீடுகளில் இது பொய்யாவதும் உண்டு!

இந்த வார குறுஞ்செய்தி

PEOPLE LOSE THEIR HEALTH CREATING WEALTH AND LOSE THEIR WEALTH TO REGAIN THEIR HEALTH……… FUNNY WORLD!

ரசித்த படம்: 



ரசித்த பாடல்:

புது நெல்லு புது நாத்து படத்திலிருந்து “கருத்த மச்சான் கஞ்சத்தனம்பாடல் – இளையராஜாவின் இசையில்.... உருமி மேளத்துடன் ரசித்த பாடலாக இங்கே! உங்களுக்கும் பிடிக்கும் தானே! :)




ரசித்த காணொளி:

சமீப நாட்களாக ஏசியன் பெயின்ட்ஸ் விளம்பரம் ஒன்று பார்க்க முடிந்தது. மணம் முடித்து ஒரு பெண் தனது கணவனுடன் செல்கிறாள். கணவன் வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாகப் பார்த்து வரும் அந்த மனைவி ஒரு அறையினுள் வந்ததும் ரொம்பவே ரசிக்கிறாள்....  இவ்விளம்பரத்தினை பார்த்தீர்களா? பார்க்கலைன்னா கஷ்டம் வேணாம்! இதோ அந்த விளம்பரம்....




படித்ததில் பிடித்தது!:

ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான், “நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே, கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை ஏற்பது போல, கெட்டதையும் ஏற்றால் என்ன?

குரு சிரித்துக் கொண்டே, “அது அவரவர் விருப்பம்,என்றார்.

பகல் உணவு வேளை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது.

சீடன் விழித்தான்.

குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார், “பால், சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. பாலை ஏற்றுக் கொள்ளும் போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?”    

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

      நீக்கு
  3. சீடன், குரு கதை சூப்பர் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகை சத்யா....... மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  5. ரசிக்க வைத்த ஃப்ரூட் ப்ரூட் சாலட்...!

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. NATO பொத்தான் அழுத்தி இவ்வளவு பேர் தேர்தலை விரும்பவில்லை எனில் அடுத்த தேர்தலில் நிச்சயம் மாற்றம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      நீக்கு
  7. ஃப்ரூட் சாலட் - ரஸித்தேன். நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

      நீக்கு
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு ஜி!

      நீக்கு
  9. ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனியாக வோட்டுப் போடலாம்.
    அவ்வளவு சிறப்பு அனைத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  10. அதிக வாக்குகளைப் பெற்றவரை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து விடுவோம் எனச் சொல்கிறார்கள் – அப்படியெனில், அந்த தொகுதி மக்களின் எந்த வாக்காளர்களின் மேலும் நல்ல அபிப்ராயம் இல்லை எனும் வாக்கிற்கு என்ன மதிப்பு....

    நியாயமான கேள்விதான்.. மறு தேர்தல் வைக்க செலவு அதிகமாகும்.. எப்படியும் அதிக வாக்கு பெற்றவர்தான் வெற்றி என்றால் ஒட்டு போடாமல் விடாலும் அதே நிலைதான்.. சரியான குழப்பம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  11. அனைத்தும் அருமை!

    தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  12. அரசியல் புரியாத அகராதிதான் நண்பரே..
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  13. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  14. ப்ருட் சாலட் அருமை! கருத்த மச்சான் பாடல் அருமையான ஒன்று! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  15. 49 ஒ வினால் ஒரு பயனும் இல்லை!
    அருமையான பழக்கலவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா..

      நீக்கு
  16. ஏசியன் பெயின்ட்ஸ் விளம்பரம் அற்புதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  17. நீங்கள் சொன்ன விளம்பரம் என்னையும் ரொம்ப கவர்ந்தது.ரொம்பவே நன்றாக இருக்கும் தினம் பார்க்கும்போது புதிது போலத் தோற்றமளிக்கும், உங்கள் ஃப்ருட் சாலடைப் போல்.

    அருமையான் சுவை உங்கள் பச்சடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  18. இன்பம் பொங்கும் திருநாளாக எல்லா நாட்களும் அமைய இங்கே
    என் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....