இந்த வார செய்திகள்:
கடந்த திங்கள் கிழமை அன்று
கொல்கத்தா நகரில் பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி. ஆட்டோ
ஓட்டுனர்கள், தங்களது வாகனங்களின் பின்னால் எழுதி வைத்திருந்த விஷயம் தான் அவர்களை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பத்தாம்
வகுப்பிற்கான தேர்வு எழுதச் செல்லும் மாணவ/மாணவிகளை இலவசமாக தங்களது ஆட்டோரிக்ஷாக்களில்
தேர்வு எழுதப்போகும் பள்ளி வரை கொண்டு விடுவதாக அவர்கள் செய்த அறிவிப்பு எதிர்பாரா
சந்தோஷத்தினை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அளித்தது.
தேர்வு எழுதப் போகும் போது
இருக்கும் பதட்டமான நிலையில் கொல்கத்தா நகரின் மோசமான போக்குவரத்தினையும் சந்திக்க
வேண்டிய அவசியமில்லாது நாங்கள் இலவசமாக மாணவ மாணவியர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தினை
ஆளும் கட்சியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் ஆட்டோ
ஓட்டுனர்களுக்கும், கொல்கத்தா நகரவாசிகளுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பெரிய
செய்தியானது. அதில் கிடைத்த அவப் பெயரை மாற்றிக் கொள்ளவும் ஆட்டோ ஓட்டுனர்
சங்கத்தினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த அறிவிப்பு
பலராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது.
வருகின்ற மார்ச் 6-ஆம் தேதி வரை
பத்தாவது தேர்வு கொல்கத்தாவில் நடைபெறப் போகிறது. மேலும் மார்ச் மாதம் 12-ஆம் தேதி
துவங்கப்போகும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்விற்கும் இந்த இலவச சலுகைகள் தொடரும்
என்று அறிவித்திருக்கும் கொல்கத்தா நகர ஆட்டோ ஓட்டுனர்களை பாராட்டுவோம்.
சென்னை வாசிகளுக்குக் கொஞ்சம்
பொறாமையாகக் கூட இருக்கலாம்! மீட்டர் படி
கட்டணம் வாங்கினால் கூட போதும் – இலவசம் கூட வேண்டாம் என்று நிச்சயம் நினைப்பார்கள்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
அன்பை
மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பக்
கிடைக்கும் – அன்னை தெரசா....
இந்த வார குறுஞ்செய்தி:
A GOOD PLAN EXECUTED NOW IS BETTER THAN A PERFECT
PLAN NEXT WEEK – GEN. GEORGE S. PATTON.
ரசித்த படம்:
எத்தனை துல்லியமாக எடுத்திருக்கிறார் இந்த படத்தினை.....
இந்த வார விளம்பரம்:
இந்த வார விளம்பரமாக நீங்கள்
படிக்கப் போவது ஒரு பெருங்காய விளம்பரம்! படிச்சுப் பாருங்களேன்!
என்ன இது, இந்தப் பேர்ல
பெருங்காயம் இருக்கறதே தெரியாதே என்று மலைக்காதீர்கள். இந்த விளம்பரம் வந்தது
1940-ஆம் ஆண்டு! நன்றி ஆனந்த விகடன் தீபாவளி மலர்.
பார்த்த காணொளி:
சமீபத்தில் MTS 3G PLUS NETWORK விளம்பரம் ஒன்று பார்த்தேன்.
நீங்களும் பார்த்திருப்பீர்களா எனத் தெரியாது. அதனால் இங்கே பகிர்ந்து
கொள்கிறேன். வருங்காலத்தில் இதுவும்
சாத்தியமாகலாம்!
படித்ததில் பிடித்தது:
தமிழுக்கும் அமுதென்று பேர்....
படித்துப் பாருங்களேன்!
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.