எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, February 5, 2014

தொடர்ந்து வந்த பேய்!உங்களுக்கு பேய், ஆவி, பூதம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டா? பயம் இருக்கிறதா? இல்லை இந்த விஷயங்களில் ஏதேனும் அனுபவம் இருக்கிறதா? இதுவும் ஒரு விதமான பேய் அனுபவம் தான்! ஆனால் இது எனக்கேற்பட்ட அனுபவம் அல்ல! எனது நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் இது.  அவர் சில நாட்களுக்கு முன்னர் அவருக்குக் கிடைத்த அனுபவத்தினை சுவை படச் சொல்லிக் கொண்டிருந்தார் – அவர் ஒரு நல்ல கதை சொல்லி!


 பட உதவி: கூகிள்

அவர் சொன்ன கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்திருந்தேன். அதற்கு இப்போது வேளை வந்துவிட்டது. நேற்று நெய்வேலி சென்றிருந்தபோது நாங்கள் இருந்த வீட்டின் முன்புறம் இருந்த புளியமரம் பார்த்தபோது பத்மநாபன் அண்ணாச்சி சொன்ன கதையும் நினைவுக்கு வந்தது. புளியமரம் என்றாலே பேய் இருக்கும் எனச் சொல்வது வழக்கமில்லையா? சரி இனி பத்மநாபன் சொன்ன அனுபவம் – என் வார்த்தைகளில்!


கல்லூரியில் படிப்பு முடித்து சில நாட்கள் ராஜாக்காமங்கலத்தில் சும்மா இருக்க வேண்டாமென விவேகானந்தா கேந்திராவில் பணி புரிந்த சமயம். கேந்திராவில் இருந்ததால் பக்கத்து ஊர்களில் எந்த கோவிலில் திருவிழா என்றாலும் எங்களையும் அழைப்பார்கள். ஒரு சில நிகழ்ச்சிகளை கேந்திரா சார்பாக நானும் நடத்தியதுண்டு. பல இடங்களில் விதம் விதமான சுவையான அனுபவங்கள் கிடைத்தது.  ஒரு சமயம் 7 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பள்ளியில் என்னையும் நண்பர் ஒருவரையும் அங்கே நடந்த விழாவில் பேச்சாளர்களாக அழைத்திருந்தார்கள்.  

அப்போதெல்லாம் அத்தனை பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் சைக்கிளில் தான் பயணம் செய்ய வேண்டும். என்னைப் போன்று சொந்த சைக்கிள் இல்லாதவர்கள், வாடகைக்கு சைக்கிள் எடுத்து பயணிப்பது வழக்கம். ஆனால் அன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் நாங்களே உங்களை அழைத்துச் செல்கிறோம் எனச் சொல்லிவிட்டதால் அவர்களுடனே பயணித்தோம். இரவு எட்டுமணிக்கு அந்த ஊரில் உள்ள கோவில் அருகில் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

குத்துவிளக்கு ஏற்றுவது, வரவேற்புரை, பேச்சாளர்களுக்கு மரியாதை செய்வது, என படிப்படியாக முடித்து எனது நண்பர் பேச ஆரம்பித்தபோது இரவு 09.00 மணி. அரை மணி நேரத்திற்கு மேல் அவர் பேசிய பிறகு நான் பேச ஆரம்பித்தேன். எனக்குக் கொடுத்திருந்த தலைப்பில் பேசி முடித்த போது இரவு பத்து மணிக்கு மேல். பார்வையாளர்கள் கொடுத்த பலத்த வரவேற்பில் திளைத்த நாங்கள், மிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.

சரி நேரம் ஆகிவிட்டது, வீடு திரும்பலாம் என எங்களை சைக்கிளில் அழைத்து வந்தவர்களை கூட்டத்தில் தேடினால், அவர்களைக் காணவில்லை. நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்களும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களும் ஒவ்வொருவராக அங்கிருந்து நகர்ந்து விடவே, உள்ளூர்காரர்கள் ஒரு சிலரே அங்கே இருந்தனர். யாரிடமும் சைக்கிள் இல்லாததால், நடந்தே வீடு திரும்ப வேண்டிய கட்டாயம்! சரி ஏழு கிலோ மீட்டர் தொலைவு தானே, பேசிக்கொண்டே நடந்து விடலாம் என நடக்க ஆரம்பித்தோம்.

நாங்கள் சென்ற ஊருக்கும் எங்கள் ஊருக்கும் நடுவே இருந்த தூரம் முன்னர் சொன்னபடி ஏழு கிலோ மீட்டர். அதைக் கடப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என நாங்கள் நடந்தாலும் உள்ளூர ஒரு பயம் – காரணம், வழியில் ஒரு சுடுகாடு உண்டு! பொதுவாக இரவு நேரங்களில் மனித நடமாட்டம் சுத்தமாக இருக்காது. ஆனால் அங்கே பேய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனவும், அவற்றிடம் மாட்டிக்கொண்ட மனிதர்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது கேட்டதுண்டு. இருந்தும் பயத்தினை வெளியே காட்டாது நடந்து கொண்டிருந்தேன். நண்பர் சும்மா இருக்காது, “ஏலே, பேய் நடமாட்டம் இங்கே உண்டுலே... கொலுசு சத்தமோ, மல்லிகை வாசமோ வந்தா திரும்பிப் பார்க்காதேலேஎனச் சொல்லவே மனதில் கிலி அதிகமானது!

சுடுகாடு சமீபத்தில் வந்து கொண்டிருந்தபோது ‘வெரசா நடப்போம்....  வழியிலே மாடன் கோவில் இருக்குல்லா, அதுவரைக்கும் நடந்துட்டா அவர் பார்த்துப்பார்என்று சொல்லி நடையை விரைவாக்க, பின்னாலே “சரசரவென சத்தம். கூடவே காற்றில் மல்லிகை வாசம் வர இரண்டு பேருக்கும் கிலி! ஓட்டமும் நடையுமாக மாடன் சாமி கோவில் வரை வந்துவிட்டோம். ஆனாலும் எங்களுக்கு பின்னால் திரும்ப தைரியமில்லை. ஏனெனில் மாடன் சாமி கோவிலைத் தாண்டிய பிறகும் மல்லிகை வாசம் தொடர்ந்து கொண்டிருந்தது!

மாடன் சாமிக்கும் பயப்படாத இந்த பேய், நிச்சயம் அடுத்த ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சுடலைமாடனுக்கு நிச்சயம் கட்டுப்படும், ஆகவே இன்னும் வேகமாக நடப்போம் எனச் சொல்லிக் கொண்டே, திரும்பி மட்டும் பார்க்காதலே, ஒரே அப்பு அப்பினா, ரத்தம் கக்கிடுவோம்!” என நடந்தோம் – அதாவது நடப்பதாக நினைத்து ஓடினோம்.

சுடலை மாடன் கோவில் அருகே கொஞ்சம் நின்றோம். இனிமேல் பயமில்லை என நடையைத் தொடர்ந்தால் மீண்டும் தொடர்ந்தது அந்த மல்லிகை வாசம்! இது என்னடா சுடலைமாடனுக்குக் கூட பயப்படலையே இந்த பேய் என விரைவாக நடந்து கிராமத்தின் எல்லையில் இருக்கும் துர்க்கையம்மன் கோவில் அருகே வந்துவிட்டோம். துர்க்கைக்கு கட்டுப்படும் என நினைத்த பேய் எங்களை இன்னும் மல்லிகை வாசத்துடன் தொடர்ந்து பயமுறுத்தியது!

எங்கள் ஊரான ராஜாக்கமங்கலம் வரை ஒன்றாக வந்த நாங்கள், ஒரு இடத்தில் அவரவர் வீட்டிற்குச் செல்ல பிரிய வேண்டிய நேரம் வந்தாயிற்று. இரண்டு பேராக வந்தபோதே பயந்த நாங்கள் தனித்தனியாக செல்ல வேண்டுமே என நினைக்கும்போதே மனதில் பீதி இன்னும் அதிகமாக வீட்டிற்கு இருக்கும் 500 மீட்டர் தொலைவை ஒரு ஓட்டமாக ஓடிக் கடப்பது என முடிவு செய்து அவரவர் திசையில் ஓடினோம். நான் எனது வீட்டிற்குள் நுழைந்து கைகால்களை கழுவிக்கொண்டு படுத்தேன். திக் திக்பயணம் மனதில் கொடுத்த கிலியுடனே கொஞ்சம் தூங்கினேன்.

காலையில் கண் விழித்தபோது வீடெங்கிலும் மல்லிகை வாசம்! ஏதடா இது வம்பாப்போச்சு, என சுற்றும் முற்றும் நோக்கியபோது எனது தமக்கை தலை நிறைய மல்லிகைப் பூச்சரத்தினை வைத்துக் கொண்டிருந்தார். ஏம்மா, காலங்காத்தாலே பூ வாங்கிட்டியா?எனக் கேட்க, “என்னண்ணே தெரியாத மாதிரி கேட்கறீங்க, ராத்திரி நீங்க கொண்டு வந்த பையிலே தான் மல்லிகைப் பூ இருந்தது!என்று சொல்ல, அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது!

பேச்சாளராக சென்றிருந்த எங்களுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அணிவித்த மல்லிகை மாலை! முதன்முதலாக கிடைத்த மாலை மரியாதை என்பதால் பத்திரமாக கையோடு கொண்டுவந்த அந்த மாலையிலிருந்து வந்த வாசம் தான் பேய் எங்களைத் தொடர்ந்து வந்தது என எண்ண வைத்துவிட்டது! அப்படி பயந்து போனதை வீட்டில் சொன்னால், நிச்சயம் நம்மை ‘பயந்தாங்கொள்ளிஎன நினைத்து விடுவார்களே என மாலை மரியாதை கிடைத்ததை பெருமையாக சொல்லிக்கொண்டேன்!


என்ன நண்பர்களே, நண்பர் பத்மநாபன் அவர்களுக்கு கிடைத்த பேய் அனுபவத்தினை ரசித்தீர்களா? நெய்வேலியில் எங்கள் வீட்டு புளியமரம் பார்த்தவுடன் எனக்கு கிடைத்த அனுபவம் ஒன்றும் நினைவுக்கு வந்தது! அது பற்றி முன்பு நான் எழுதிய பதிவு ஊஞ்சலாடிய பேய்! படிக்காதவர்கள் படிக்கலாமே!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....


56 comments:

 1. இதை படித்ததும் நேற்று AXN தொலைக்காட்சியில் பார்த்த Ghost Hunters என்ற தொடர் நினைவுக்கு வருகிறது. அதில் அமெரிக்காவில் ஆவிகள் தொல்லை தருகின்றன என்று யார் புகார் தெரிவித்தாலும் அதை அறிவியல் பூர்வமாக ஆய்ந்து தீர்வு அளிக்கவே ஒரு நிறுவனம் உள்ளது என்றனர். அந்த நிறுவனத்தை சேர்ந்த குழு ஒன்று புகார் அளித்தவரின் வீட்டுக்கே சென்று நள்ளிரவில் கேமரா, மைக் சகிதம் ஆய்வு செய்கிறது. மைக் மூலமாக அந்த வீட்டில் கேட்கும் வினோத ஒலிகள் பதிவாகின்றன. ஆனால் கேமராவில் ஒன்றும் பதிவாகவில்லை. இது எந்த அளவுக்கு உண்மை எந்த அளவுக்கு தகிடுதத்தம் என்று தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. Ghost Hunters பார்த்ததில்லை. Ghost Busters என்று ஒரு நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 2. மல்லிகை பேய் சூப்பர்......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா

   Delete
 3. வணக்கம்
  ஐயா.

  பேய் கதை சூப்பர் ஐயா படித்து இரசித்தேன்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 4. வணக்கம்
  த.ம 2வதுவாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரூபன்.

   Delete
 5. ஹா... ஹா... இனி மறக்க முடியாது மல்லிகை மாலையை...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. இவர்கள் செல்லும் துணிவில், துணையில் பின்னால் இவர்கள் ஊர்ப் பெண் ஒருத்தி வந்தாள் என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்! :)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. மறந்து விட்டதால் மறுபடியும் அப்படியே நினைத்தேன். நான் கட்டாயம் லூசுதான்!

   Delete
  3. ஹாஹா.... மறுபடியும் அப்படியே நினைத்தது சிரிப்பு தான்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. வளர்ந்தும் வளராத ஆட்கள் நம் காலத்தில்..., இப்ப சொல்லிப் பாருங்க நம் பிள்ளைகளிடம்..., வரட்டும் அப்பா நம் செல்போனில் ஒரு படமெடுத்து fbல போடலாம்ன்னு சொல்லுவாங்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 8. யாரேனும் பெண்கள் பயத்தால் பின் தொடர்ந்திருப்பார்கள் என நினைத்துப் படித்தேன் ..முடிவு சிரிப்பை வரவழைத்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. மல்லிகை வாசம் இருந்தால் கூடவே வந்துவிடுமா?

  ReplyDelete
  Replies
  1. மல்லிகை வாசம் வந்ததைத்தானே பேய் என்று நினைத்திருந்தார்கள்! புரியவில்லையா கண்ணதாசன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 10. தற்போதுதான் ரஹீம் கஸாலியின் பேய்கதை ஒன்று வாசித்து பின்னூட்டம் இட்டு விட்டு எங்கள் வலைப்பூவில் வந்து பார்த்தால் தங்களிடமிருந்து ஒரு பேய் பதிவு! ஆஹா! இன்று என்ன பேய் பதிவுகளாக இருக்கிறதே! பாரதியார் நாள், காந்தி நாள் என்பது போல இன்று பேய் நாளோ?!!! என்ற சந்தேகம் வந்து இன்னும் வேறு யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்று வேறு தேடினோம்!...நல்ல காலாம் இல்லை!

  பதிவு அருமை!..சொன்ன விதம் நல்ல சுவாரசியம்! அழகான பேய்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன், கீதா....

   Delete
 11. உங்கள் நண்பர் திரு பத்மநாபன் அவர்கள் பெற்ற ‘பேய்’ அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது உங்களது ‘ஊஞ்சலாடிய பேய்’ கதையைப்போல.

  பேய் என்பது இல்லை எனத் தெரிந்தாலும், அதைப்பற்றி கேட்கும்பொது ஏற்படும் சுவாரஸ்யமே தனி தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. திருவரங்கம் வந்துவிட்டீர்களா வெங்கட்?! பேய் அனுபவம் சூப்பர்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   விடுமுறையில் வந்திருக்கிறேன் சுரேஷ்.

   Delete
 13. அப்பு! நடந்தது, கதையல்ல, நிஜம்.

  நீண்ட நாட்களுக்குப் பின் மலரும் நினைவுகள். இல்லை மிரளும் நினைவுகள்.

  எத்தனையோ முறை அந்த நண்பர் பிரேம்குமாருடன் அந்த அனாந்தர வனாந்தரப் பகுதிகளில் இருட்டுவேளைகளில் வீரமாக சுற்றித் திரிந்திருந்தாலும், இரவு பதினொரு மணியளவில் மல்லிகைப்பூ வாசம் பின் தொடர்ந்ததும் கையில் மல்லிகை மாலை இருந்ததைக் கூட மறந்து அதிரி புதிரியானது ஆஹா! ஓஹோ! அந்த டங்குவாரு! டங்குவாரு ன்னு ஒண்ணு உண்டுல்லா! அது அந்து போச்சுல்லாடே!

  ReplyDelete
  Replies
  1. மிரளும் நினைவுகள்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 14. ஹஹஹா.. அனுபவம் சூப்பர்.. என்னுடைய அனுபவத்தை இங்கே படிச்சு பாருங்க!! http://www.kovaiaavee.com/2013/01/blog-post_14.html

  ReplyDelete
  Replies
  1. படித்துப் பார்க்கிறேன் ஆவி.!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 15. மல்லிகை மன்னனை மயக்குவதற்KஊVஆத்Hஆர்KஊP Pஆத்Hஈள் ஆVஆறாஈ ஆளாற வைத்துவிட்டதே. வெகு சுவை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 16. நான் ஒரு திகில் கதை எழுதி இருக்கிறேன் படித்துப்பாருங்கள் சுட்டி இதோ
  gmbat1649.blogspot.in/2011/12/blog-post_15.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   உங்கள் பதிவினையும் படித்துப் பார்க்கிறேன்.

   Delete
 17. தொடர்ந்த மல்லிகை பூவாசம் , தொடர்ந்த பேயாகி பயமுறுத்திய அனுபவக் கதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 18. ஏழு கிலோ மீட்டர் தொலைவு தானே, பேசிக்கொண்டே நடந்து விடலாம்” என நடக்க ஆரம்பித்தோம்.

  அந்த இரவில் ஏழு கிலோமீட்டர் நடை ... பேயை விட பயம் தருகிறது ..!

  ReplyDelete
  Replies
  1. அப்போதெல்லாம் பல இடங்களுக்கு நடை பயணம் தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 20. உங்கள் நண்பருக்கு சுவாரஸ்யமான அனுபவம் தான் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 21. சுவராசியம் அண்ணே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 22. என்னத்தான் பேச்சாளாராக இருந்தாலும் பேய்க்கு பயந்து தானே ஆக வேண்டும்.
  நல்லகாலம், இந்த மல்லிகைப் பேய்க்கு காய்ச்சல் எல்லாம் வராமல் இருந்திருக்கே! ஆச்சிரியம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 23. ஹா ஹா ஹா ஹா நல்லகாலம், பீதி பேதியாகாமல் வீடு போயி சேர்ந்ததே பெரிய விஷயம்தான் ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 24. எண்ட்ல குட்த்துக்கினாம் பாரு ஒரு டுஸ்ட்டு...! கட்சீல பாத்துக்கினா செண்ட்டு பேயிபா...!

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.

   Delete
 25. Naan kooda pinnala yedho ponnu varannu mudivu irukkumnu ninaiththen. Aanal mudivu vera madhiri irundhuvittadhu.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 27. இவ்வளவு நாளும் பேய் வேப்ப மரத்துலல்ல இருக்குன்னு நெனச்சிட்டிருந்தேன். இனி ஊருக்குப் போனால் தோட்டத்துப் பக்கம் போக‌ முடியாதுபோல. எங்க எல்லார் வீட்டுத் தோட்டத்திலும் புளியமரங்கள் உண்டு.

  நிகழ்ச்சிக்கு வந்தவங்கதான் யாரோ பின்னாலயே வர்றாங்கன்னு நெனச்சிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....