எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 28, 2014

ஃப்ரூட் சாலட் – 82 – இலவசப் பயணம் – தமிழமுது - பெருங்காயம்இந்த வார செய்திகள்:கடந்த திங்கள் கிழமை அன்று கொல்கத்தா நகரில் பத்தாவது படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு சந்தோஷ அதிர்ச்சி. ஆட்டோ ஓட்டுனர்கள், தங்களது வாகனங்களின் பின்னால் எழுதி வைத்திருந்த விஷயம் தான் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  பத்தாம் வகுப்பிற்கான தேர்வு எழுதச் செல்லும் மாணவ/மாணவிகளை இலவசமாக தங்களது ஆட்டோரிக்‌ஷாக்களில் தேர்வு எழுதப்போகும் பள்ளி வரை கொண்டு விடுவதாக அவர்கள் செய்த அறிவிப்பு எதிர்பாரா சந்தோஷத்தினை மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அளித்தது.

தேர்வு எழுதப் போகும் போது இருக்கும் பதட்டமான நிலையில் கொல்கத்தா நகரின் மோசமான போக்குவரத்தினையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லாது நாங்கள் இலவசமாக மாணவ மாணவியர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தினை ஆளும் கட்சியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், கொல்கத்தா நகரவாசிகளுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பெரிய செய்தியானது. அதில் கிடைத்த அவப் பெயரை மாற்றிக் கொள்ளவும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த அறிவிப்பு பலராலும் வரவேற்கப் பட்டிருக்கிறது.

வருகின்ற மார்ச் 6-ஆம் தேதி வரை பத்தாவது தேர்வு கொல்கத்தாவில் நடைபெறப் போகிறது. மேலும் மார்ச் மாதம் 12-ஆம் தேதி துவங்கப்போகும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்விற்கும் இந்த இலவச சலுகைகள் தொடரும் என்று அறிவித்திருக்கும் கொல்கத்தா நகர ஆட்டோ ஓட்டுனர்களை பாராட்டுவோம்.

சென்னை வாசிகளுக்குக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கலாம்!  மீட்டர் படி கட்டணம் வாங்கினால் கூட போதும் – இலவசம் கூட வேண்டாம் என்று நிச்சயம் நினைப்பார்கள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

அன்பை மட்டுமே கடன் கொடுங்கள். அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் – அன்னை தெரசா....

இந்த வார குறுஞ்செய்தி:

A GOOD PLAN EXECUTED NOW IS BETTER THAN A PERFECT PLAN NEXT WEEK – GEN. GEORGE S. PATTON.

ரசித்த படம்:

எத்தனை துல்லியமாக எடுத்திருக்கிறார் இந்த படத்தினை.....இந்த வார விளம்பரம்:

இந்த வார விளம்பரமாக நீங்கள் படிக்கப் போவது ஒரு பெருங்காய விளம்பரம்! படிச்சுப் பாருங்களேன்!

 
என்ன இது, இந்தப் பேர்ல பெருங்காயம் இருக்கறதே தெரியாதே என்று மலைக்காதீர்கள். இந்த விளம்பரம் வந்தது 1940-ஆம் ஆண்டு! நன்றி ஆனந்த விகடன் தீபாவளி மலர்.

பார்த்த காணொளி:

சமீபத்தில் MTS 3G PLUS NETWORK  விளம்பரம் ஒன்று பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்களா எனத் தெரியாது. அதனால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  வருங்காலத்தில் இதுவும் சாத்தியமாகலாம்! 
படித்ததில் பிடித்தது:

தமிழுக்கும் அமுதென்று பேர்....  படித்துப் பாருங்களேன்!மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 comments:

 1. ஆட்டோ செய்தி ஆச்சர்யம்தான் . பத்து வரை தமிழ் எண்களை அறிந்துகொள்ள எளிமையான வழிமுறை . சுவையான கலவை செய்திகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. கொல்கத்தா ஆளும் கட்சியினருக்கு பாராட்டுக்கள்... அதிக வட்டி சிறப்பு... ரசித்த படம் அற்புதம்...

  தமிழ் என்றும் சிறப்பு... சுவையான ஃப்ரூட் சாலட்டிற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. எதைச் சொல்ல, எதை விட!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 4. நல்ல தொகுப்பு. ஆட்டோ ஓட்டுநர்களின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. இரசித்த படத்தை இரசித்தேன்.
  தமிழ் எண்களை நினைவில் வைத்துக் கொள்ள கடைப்பிடித்த வழி சபாஷ் சொல்ல வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

 5. இவ் வார பழக்கலவை அருமை.அருமை. எதைப் பாராட்ட. எதை விட.அதுவும் அந்த எதிர்கால இணையக் குழந்தையும், தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள, இக்கால பிள்ளைகள் கடைபிடிக்கும் முறையும் வியக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. இலவசமாக அழைத்து செல்வதாகக் கூறினாலும் அவர்களின் நல்ல மனதைப் பாராட்டி அதில் பயணிக்கும் பிள்ளைகள் த‌ம்மால் இயன்ற கட்டணத்தைக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கொடுத்துவிடலாம். அவர்களும் பிழைக்க வேண்டுமே !

  கீழேயுள்ள நன்றியைப் படிக்கும் முன்னர்வரை பெருங்காய விளம்பரம் குழப்பியது. பறவையின் படம் சூப்பர். முகப்புத்தக இற்றையும் அருமை.

  கஷ்டப்பட்டு படித்த தமிழில் 1,2,3... இடையில் மறந்தே போனது. இனி மறக்க மாட்டோமில்ல !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 7. இந்த வார ப்ரூட் சாலட் மிகவும் ரசித்தேன் நண்பரே. தமிழ் எழுத்துக்களை நினைவில் வைத்துக் கொள்ள மிகவும் எளிமையான முறை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் முகில் பிரகாசம்.

   Delete
 8. வழக்கம் போலவே சாலட் சுவையாக இருந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 9. வணக்கம்
  ரசிக்க வைக்கும் பதிவு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 10. பறவையின் படம் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. தமிழின் சுவை எப்பவுமே அருமை தான். நமக்கு தான் சில நேரங்களில் அதன் சுவை தெரிய மாட்டேங்குது.
  படம் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 12. மத்த மாநிலங்களை போல நமது மாநிலத்திலும் எண்களை தமிழிலும் பயன்படுத்த வேண்டும் என ஆசை நிறைவேறுமா ??

  உதாரணமாக பேருந்து எண்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ் பிரபு.

   Delete
 13. இந்த முறை சாலட் மிகவும் சுவை..தெரியாத விஷயங்களும் இடம் பெற்றன.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 14. ரா.ஈ. பத்மநாபன்February 28, 2014 at 10:33 AM

  அட! எனக்கும் ஒன்று முதல் பத்து வரை எண்களை தமிழில் நினைவு வைக்க ஒரு நிமிடத்தில் வந்து விட்டதே! நன்று! நன்று!

  (ஆனால் பேருந்து எண்களையும் வண்டிகளின் பதிவு எண்களையும் தமிழில் பயன்படுத்துவதை நான் ஆதரிக்கவில்லை. அவற்றிற்கு அனைவரும் அறிந்த பொதுவான எண்களே சிறந்தது என்பது எனது கருத்து. அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மொழிகளில் எண்கள் வந்து விட்டால் குழப்பங்கள் அதிகரிக்கவே வாய்ப்பதிகம். பேச்சு மொழியில் ஆங்கிலக் கலப்பை தவிர்த்தாலே தமிழ் மகிழ்வுறும்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரா.ஈ. பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 15. ஆட்டோ ஓட்டுநர்களின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.வழக்கம் போலவே சாலட் சுவையாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 16. கொல்கத்தா ஆட்டோ பாறைகள்

  படம் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. கொல்கத்தா ஆட்டோ பாறைகள்......

   என்ன சொல்ல வரேன்னு பிரியல தம்பி!..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 17. ஆட்டோ செய்தி ஆச்சரியம் மட்டுமல்ல, கண்டிப்பாக சென்னை வாசிகளுக்கு புகை வருவது நிச்சயம்!

  காணொளி புதிது! மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள விளம்பரம்! கற்பனை அபாரம்! இது நடக்கலாம்!

  முகப்புத்தக இற்றை, குறுஞ்செய்தி, விளம்பரம், புகைப்படம் அருமை!

  இந்தவார ஃப்ரூட் சாலடின் அமுது....அமுதே!

  எல்லா பகிர்வுகளும் வழக்கம்போல் அருமை! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 18. அது என்ன...ஙனைச்சு....? ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 19. ஆட்டோக்காரர்கள் வாழ்க! சென்னையில் மீட்டர் கட்டணம் வாங்கினால் போதும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி. பறவையின் பட நேர்த்தி அசத்துகிறது.

  தமிழ் எண்களைக் நாம் கற்போம். ஆனால் நிச்சயம் வண்டிகளில் வேண்டாம்.

  ப்ரூட் சாலட் சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   பெங்களூர் திரும்பியாச்சா....

   Delete
 20. அவப் பெயரை மாற்றிக் கொள்ள எடுத்த முடிவாக இருப்பினும் ஆட்டோ
  ஓட்டுனர் சங்கத்தவர்கள் எடுத்த முடிவானது மனதுக்கு மகிழ்வளிக்கின்றது .
  தத்ரூபமாக எடுக்கப்பட்ட படமும் தகவல்களும் மிகச் சிறப்பு .வாழ்த்துக்கள்
  சகோதரரே மென்மேலும் ஆக்கங்கள் சிறப்பாகத் தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 21. கல்கத்தா ஆட்டோ ஓட்டுநர்களின் அறிவிப்பு பாராட்டுக்குரியது!. .
  இப்படிப்பட்ட எதிர்காலக் குழந்தைகளால் என்னென்ன எதிர் விளைவுகள் ஏற்படுமோ?..
  மீன் பிடிக்கும் Sea Gull அருமை!..
  தமிழ் எண்களை நினைவில் வைத்துக் கொள்ள எளிய வழி - கூறியமைக்கு நன்றி!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 22. கொல்கத்தா நகர ஆட்டோக்காரர்களைப் பாராட்ட வேண்டும்.

  படம் அழகோ...அழகோ... அழகோ... அழகு.

  பாருங்க DD பெயர்ல அப்பவே பெருங்காயம் வந்திருக்கு...!

  இந்த விளம்பரம் நேற்றுதான் பார்த்தேன்!

  தமிழ் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 23. ஃப்ரூட் சாலட் இன்று பயனுள்ள சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறீர்கள்பா..

  கொல்கத்தாவில் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் எடுத்த இந்த மாதிரி ஒரு முடிவை நம் ஊரிலும் எடுத்தால் நல்லா இருக்கும். பிள்ளைகள் அரக்க பரக்க எக்சாமுக்கு ஓடுகின்றனர்.

  அன்னை தெரசாவின் மொழி ரசிக்க வைத்தது. அன்பை மட்டுமே இன்முகத்துடன் மொத்தமாகவே கொடுங்கள்... கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இல்லாமல்...

  துல்லியமான நீர் துளி கூட அழகாக தெரிகின்றதுப்பா..

  பெருங்காய படமும் நெட்வர்க் காணொளியும் எனக்கு தெரியவில்லைப்பா..

  தமிழ் எண்கள் மிக அருமையாக தமிழ் எழுத்துகளை நினைவுக்கொள்ளும் விதத்தை சொன்னது சிறப்பு.. அதுவும் மாணவியின் மூலம்...

  அன்பு நன்றிகள்பா ருசியான பகிர்வு...

  த.ம.10

  ReplyDelete
  Replies
  1. பெருங்காயம் படம், மற்றும் காணொளி தெரியவில்லையா.... எல்லோரும் பார்த்திருக்கிறார்களே.... ஒரு முறை மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   Delete
 24. சாலட் மிகவும் சுவை.. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 25. ஹை ! இப்போ நானும் தமிழில் ௧௨௩ சொல்லுவேனே !!
  வழக்கம் போல ஹெல்தி சாலட் !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 26. பார்த்தும் ,படித்தும் ரசித்தேன் !
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 27. அனைத்தும் நல்ல பகிர்வு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 28. அழகுதான் தமிழ் சுவையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   Delete
 29. தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தியது மிக அருமை. ஆனால், ஒரு சந்தேகம். 0 மட்டும் 0 என்றே குறிக்கப்படுகிறதே! இதற்கான காரணம் தங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் தெரிவியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. காரணம் தெரியவில்லை நண்பரே...... ஹிந்தியில் கூட பூஜ்யத்தினை '0" என்றே எழுதுகிறார்கள்......

   தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Regan Jones.

   Delete
 30. Kanolil kandadhupol yedhirkalaththil nadakkalam

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....