எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 3, 2014

மரணத்தை நேசிப்பவர்கள்


ஒரு நாள் பயணமாக இந்த சனிக்கிழமை அன்று இரவு தில்லியிலிருந்து சென்னை வந்திருந்தேன்.  இரவு தங்க கீழ்க்கட்டளை செல்வதாக முடிவு செய்திருந்தேன். அதற்காக பூங்கா ரயில் நிலையத்திலிருந்து மவுண்ட் ரயில் நிலையம் செல்வதற்காக காத்திருந்தேன். நடைமேடையில் எதிர்பக்கத்தில் அப்போது தான் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் – தாய்க்கு 30 வயதிருக்கலாம், 10 வயது பெண் 5 வயது ஆண் குழந்தை மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்தார்கள்.

 பட உதவி: கூகிள்

செங்கல்பட்டு வரை செல்லும் ஒரு தொடர் மின்வண்டி வந்ததும், அந்த பெண் குழந்தை, ”அம்மா வண்டி வந்துடுச்சு, வா கீழே இறங்கி சீக்கிரம் போகலாம் வா” எனச் சொல்ல, ஒரு முறை மறுத்த அம்மா, பெண் மீண்டும் சொல்லவே, மூன்று பேரும் கீழே குதித்து விட்டார்கள்.  அம்மா மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் மேலே ஏறிவிட, அந்தப் பெண்ணும், ஐந்து வயது மகனும் ரயில் பாதையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அதற்குள் பீச் செல்லும் வண்டி அந்தப் பாதையில் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. நடைமேடையில் நின்று கொண்டிருந்த அனைவரும், ”சீக்கிரம், சீக்கிரம் மேலே ஏறு!” என கத்தியபடியே அந்த இடத்திற்கு ஓட, அம்மா தவிக்க, அந்த 10 வயது பெண், மேலே தாவி ஏற முடியாத தனது தம்பியை ஏற்றி விடுகிறார்.  அதற்குள் பீச் செல்லும் ரயில் வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது – பெண்ணுக்கும் ரயிலுக்கும் 500 மீட்டர் இடைவெளி மட்டுமே…..

அனைவரும் வேகமாக முன்னேறி அந்த பெண்ணுக்கு கையை நீட்ட தட்டுத் தடுமாறி அந்தப் பெண் மேலே தாவி நடைமேடையில் ஏறி உட்காரவும் அந்த மின்சார தொடர்வண்டி அந்த இடத்தினைத் தாண்டி நிற்கவும் சரியாக இருந்தது.  சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட மரணம் சம்பவித்து இருக்கும் அபாயம். அனைவரும் அந்த தாயைத் திட்டிக்கொண்டிருக்க, அவரோ, குழந்தைகளை இழுத்துக் கொண்டு நிலையத்திலிருந்து நகரத் துவங்கிய ரயிலில் தாவிக் கொண்டிருந்தார்.

அப்படி என்ன அவசரமோ? இப்படிச் செய்வது ஆபத்தில் முடியலாம் என்ற எண்ணம் கூட இருப்பதில்லையே இவர்களுக்கு. :(

அடுத்த நாள் சென்னையில் நடந்த நண்பர் வீட்டு புது மனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மதியம் பல்லவனில் திருவரங்கம் நோக்கிச் செல்ல வேண்டும். 02.30 மணி அளவில் எழும்பூர் நோக்கி மீண்டும் மின்சார ரயில் பயணம். அங்கே பார்த்த இன்னுமொரு நபர் – அவரும் மரணத்தை நேசிப்பவர் தான்! தண்டவாளத்தினை தாண்டவில்லை – ஆனால் ரயில் வண்டிக்குள் உட்கார்ந்திருந்தார். வண்டிக்கு வெளியே காலை தொங்க விட்டபடி!

பக்கத்திலே ஒரு பொதிமூட்டை – ஆதிகாலத்தில் மூட்டை கட்டி தோளில் மாட்டிக்கொண்டு செல்வதை இப்போது கொஞ்சம் நவீனப்படுத்தி முதுகில் சுமக்க வசதியாக வந்துவிட்டதே – பலரும் இது போன்ற ஒரு பொதியை முதுகில் கட்டி அலைந்து கொண்டிருக்கிறோம் – என்னையும் சேர்த்து! அந்த மூட்டையில் ஒரு 7 UP குளிர்பான குப்பி – குப்பியில் இருந்தது குளிர்பானம் மட்டுமல்ல என்பது சிறிது நேரத்தில் புரிந்தது!

அவ்வப்போது அந்த குப்பியிலிருந்து கொஞ்சம் குடித்து முகத்தினை அஷ்டகோணலாக்கி, தனது முகத்தினை விகாரமாக ஆக்கிக் கொண்டார். கடிக்கவோ, பக்க உணவு எதுவும் இல்லாத காரணத்தினால் சப்புக் கொட்டிக் கொண்டார்! குப்பியில் கலந்திருந்த சோமபானம் வேலை செய்ய, மின்சார வண்டி பயணிக்கும்போது கடந்து செல்லும் மின்சார கம்பங்களை கையால் பிடிக்கவோ, காலால் உதைக்கவோ முயற்சித்துக் கொண்டிருந்தார். 

அவ்வப்போது குடிப்பதும் தொடர்ந்தது! அவரது சேஷ்டையும் தான். எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடக் கூடிய வாய்ப்பு – பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவரிடம், “பார்த்துப்பா, கீழே விழுந்துடப் போறே” என்று சொல்ல, குப்பியிலிருந்து இன்னும் கொஞ்சம் சோமபானம் குடித்து “எல்லாம் எனக்குத் தெரியும் பெரிசு! உன் வேலையைப் பார்த்துகிட்டு கம்முனு குந்து!” என சில அடைமொழிகளோடு சொல்ல அவரும், கூட இருந்த மற்றவர்களும் ”கப்! சிப்!”

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தினை வண்டி தாண்டியதும் அவரது பாதி உடல் ரயிலின் வெளியே தொங்க, தடுமாறி மீண்டும் உள்ளே வந்தார் – “என்ன ஆனாலும், எவ்வளவு அடித்தாலும் நான் ஸ்டடியா இருப்பேன்” என்று குடிப்பதைத் தொடர்ந்தார் அந்த இளைஞர்.

அடுத்த ரயில் நிலையமான எழும்பூரில் நான் இறங்கிக் கொள்ள, அந்த குடிமகனுடன் வண்டி நிலையத்தினை விட்டு அகன்றது.  குடிமகன் ஒழுங்காக வீடு போய்ச் சேர்ந்தாரா இல்லை அவரது பூத உடல் வீடு சேர்ந்ததா என்பது அவருக்கே வெளிச்சம்!
எதற்காக இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? முதல் நிகழ்வில் அவசரத்தினால் மரணம் நேர இருந்தது – இரண்டாவதில் அலட்சியமான போக்கினால்! எதற்கு இவர்களைப் போன்றவர்கள் இப்படி இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. ஒரு வேளை இவர்கள் மரணத்தினை நேசிக்கிறார்களா? கேள்வி மட்டும் மனதில்…..  விடை கிடைக்காத கேள்விகள்…..

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்……

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து……

60 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  தொடக்கம் முதல் முடிவு வரை மிகச்சிறப்பாக உள்ளது... இறுதியில் கூறிய கருத்து.. ஒருகனம் சிந்திக்க வைத்துள்ளது... ஐயா...
  வாழ்த்துக்கள்
  என்பக்கம்-புதிய பதிவாக-நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-http://2008rupan.wordpress.com/

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   உங்கள் பதிவினையும் படிக்கிறேன். பயணத்தில் இருந்ததால் கடந்த சில நாட்களாக யாருடைய பதிவுகளையும் படிக்க இயலவில்லை.

   Delete
 2. மரணத்தை நேசிப்பவர்களை மரணத்தை வரவேற்பவர்கள் என்றும் சொல்லலாம். சமூக சிந்தனையுள்ள பதிவு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. அவர்கள் மரணத்தை நேசிப்பவர்கள் அல்ல.. மரணத்தை யாசிப்பவர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
 4. கொடுமை. இரண்டுமே திகில் நிமிடங்களாக இருந்திருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. கொடுமை தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 5. மும்பையிலும் இந்த அநியாயம் உண்டு, திருந்தாத ஜென்மங்கள் வேற எண்ணத்தை சொல்ல ?!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 6. நான் படிக்கும்போது என் ஃப்ரெண்ட்ஸ்லாம் ரயிலின் இரண்டுப் பெட்டிக்களுக்கிடையான இளைவெளியில் குனிந்து இந்தப் பக்கம் வருவாங்க. பயம் காரணமா நான் மட்டும் மூச்சு வாங்க ப்ளாட்ஃபார்ம் மேல ஏறி இறங்கி வருவேன். திட்டுவாங்க. அப்படி குனிந்து வந்த ஒரு பையன் ரயில் அடிப்பட்டு இறந்தப் பின் தான் அப்படிப்பட்ட பழக்கத்தை விட்டாங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 8. அதிர்ச்சி தரும் தகவல்கள் ! வெளி நாடுகளில் இவைகளை நினைத்துக் கூட
  பார்க்க இயலாது அவ்வளவு தூரம் இறுக்கமான சட்ட திட்டங்கள் உள்ளன
  அதனால் இவ்வாறு பாதைகளைக் கடக்க இயலாது .இச் செயலைத் தடுக்க
  காவல் துறையினரே முன் வர வேண்டும் .படம் மிகவும் அருமை ! படப்
  பிடிப்பிற்கு வாழ்த்துக்களும் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் சகோதரா .காலில்
  அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர் அதனால் வலையில் உலா வர இயலாமல்
  உள்ளது .எல்லா பகிர்வுக்கும் தொடரவும் என் இனிய வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. உடல் நலம் முக்கியம். வலையில் பிறகு உலா வரலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 9. மனம் பதறச் செய்கிற பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 10. நீங்கள் சொன்ன இரண்டு நிகழ்வுகளை படிக்கும் போது மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கவலையாக இருக்கிறது. நானும் இப்படி சாலைகளில் பார்க்கும் காட்சிகளை நினைத்து கவலை படுவேன் முன்பு இப்போது ,அவர்கள் நல்லபடியாக அவர்கள் வீடு சென்று சேர வேண்டும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி வருகிறேன். வேறு என்ன செய்ய முடியும் நாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. தங்களது பதிவு "மரணத்தை நேசிப்பவர்கள்" என்று இருந்தாலும் அந்த மரணத்தைப் பற்றியும் கூட, வாசிக்கும் போது மக்களின் யோசிக்கும் திறனை நினைத்து ஒரு பக்கம் வருத்தம் ஏற்பட்டாலும், இப்படி அற்புதமாகவும், அழகாகவும் பதிவு செய்ய முடியும் என்ற பிரதிபலிப்பை ரசித்தோம்.

  கோவை ஆவி சொல்லியிருப்பதைத்தான் எழுத நினைத்தோம் //அவர்கள் மரணத்தை நேசிப்பவர்கள் அல்ல.. மரணத்தை யாசிப்பவர்கள்!!// விலை கொடுத்து வாங்குபவர்கள் என்றும் கூடச் சொல்லலாம்!

  எல்லோரும் வாசித்து யோசிக்க வேண்டிய அற்புதாமான பதிவு!

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 12. மரணத்தை தங்கள் நடத்தைகள் மூலம் அழைப்பவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 13. இரண்டுமே கொடுமை... இரண்டாவது - பலரும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 14. தலைப்பைத் தொடர்ந்து பதிவைப் படித்துவர
  ,மனம் திக் திக் என்றது
  நல்லவேளை மரணம் எதுவும் உங்கள்
  கண் எதிரில் நேரவில்லை
  நல்ல விழிப்புணர்வுப் பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 16. விடை கிடைக்காத கேள்விகள்…..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 17. நிகழ்வுகள் புனைவுகளை விட அதிகம் ஈர்க்கிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 18. பதிவைப் படிக்கும்போது அறியாமையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ மரணத்தைக் கூவிகூவி அழைப்பவர்களும், விலைகொடுத்து வாங்குபவர்களும் இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 19. விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 20. இவர்கள் ஒரு ஜென்மத்தில் பல ஜென்மம் எடுப்பவர்கள் மட்டுமல்ல திருந்தாத ஜென்மங்களும் கூட !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 21. அட வெங்கட் பெண் குழந்தைகளுடன் உள்ள நிகழ்ச்சியை விவரித்த போது மனது பட பட என்று அடித்து என்ன நிகழ்ந்ததோ என்று மனது பறக்க தொடங்கியது. நேரில் பார்த்த உங்களவிட உங்கள் எழுத்தின் மூலம் படிக்கும் போது பிரஷர் கூடியது என்பது என்னவோ உண்மைதான்.. இனிமேல் இந்த மாதிரி பதிவு எழுது போது பிரஷர் உள்ளவர்கள் படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்துவிடுங்கள்..

  உங்களின் எழுத்து நடையும் தெளிவாக சொல்லும் பாங்கும் மிக அருமையாக இருக்கிறது. பாராட்டுகள் வெங்கட்
  tha.ma 12

  ReplyDelete
  Replies
  1. அடடா.... உங்க பிரஷர் ஏற நான் காரணமாகிவிட்டேனா.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 22. எப்படிங்க டிரெய்ன் பஸ் கார் வேன் என்று பலதரப்பட்ட வாகனிங்களில் இந்தியா முழுவது சுற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்? எப்படி உங்களால் முடிகிறது..


  உங்களின் பயண ஆர்வத்தை பார்க்கும் போது உங்களைப் இந்தியாவின் பிரதமராக ஆக்கிவிட என் மனம் துடிக்கிறது காரணம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்து மிக நல்ல பதிவாக போடுவீர்களே? நம்ம பிரதமர் பேசக் கூடவில்லையென்றாலும் நாட்டுக்கு நல்லது செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை இப்படி ஒரு பதிவாவது போட்டலாமே ஹும்ம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. பயணம் பிடித்த விஷயம் என்பதால் இப்படிச் சுற்றுகிறேன்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 23. கிளைமாக்ஸ் பார்ப்பது போல் திக்கு திக்கு னு இருக்கு சார்.
  தலைப்பும் விவரிப்பு அருமை!
  விழிப்புணர்வு விளம்பரங்களைக் கவனிப்பதற்கு கூட நேரம் இல்லாதவர் இந்த மரணத்தை நேசிப்பவர்கள் !?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   Delete
 24. தங்கள் குடிமகன் பற்றிய கருத்தை வரவேற்கிறேன்.


  தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை..... ம்கிழ்ச்சி நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் ஐயா.

   Delete
 25. அப்பப்பா! ஒரு திகிலூட்டும் கதையை படித்த மாதிரி இருந்தது தங்களின் முதல் நிகழ்ச்சி. மதுரைத் தமிழன் சொன்னமாதிரி, இனிமேல் இந்த மாதிரி பதிவு எழுது போது பிரஷர் உள்ளவர்கள் படிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்துவிடுங்கள்..

  எவ்வளவு தான் விழிப்புணர்வு கொடுத்தாலும், மக்கள் திருந்துகிற மாதிரி தோன்றவில்லை. அவசரத்திற்கு உயிரையே பணயம் வைக்கக்கூடிய விளையாட்டுக்களை விளையாடுவதில் நம்மவர்களை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது.


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 26. இதைத்தான் 'தலை போகிற அவசரம்' என்கிறார்களோ...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 27. எமனை வாங்க பாஸ்னு கூப்பிடறாங்க போல... படிக்கும் போதே பயமா இருக்கு ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   Delete
 28. இந்த மாதிரி ஆட்களுக்கு செத்தாலும் புத்தி வராது... வேறென்ன சொல்ல....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 29. பார்க்கும் நமக்குத் தான் உடல் நடுங்கும்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 30. யாருக்குமே மரணத்தை நேசிக்கும் தைரியம் இருக்காது... ஆனால் வாழ்க்கையை அலட்சியமாக நினைப்பவர்கள் மரணமும் தனக்கோ சுற்றியிருப்போருக்கோ நிகழும் வரை அந்த அலட்சிய மனோபாவம் கொண்டவர்களாகின்றனர்...என்றாயிருந்தாலும் அவர்களின் மரணம் இது பொன்றதொரு அலட்சியத்தாலேயே நிகழும்...ஆனால் உணரும் நிலையில் அவர்கள்தான் இருக்க மாட்டார்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....